உதயன் திரைப்படத்திற்கு பிரச்சினை

தற்போது சினிமா உலகில் பெரும் பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இயக்குனர் ஒருவர் காலையில் ஆறு மணியிலிருந்து மதியம் இரண்டு வரை வேலை நாள் வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார். காலை ஆறு மணிக்கெல்லாம் சூட்டிங் வரவேண்டுமென்றால் அவர்கள் நான்கு மணிக்கே எழுந்தாக வேண்டும். இதெல்லாம் நடக்கக் கூடிய ஒன்றா என்பதைப் பற்றி அவர் சிந்தித்துப் பார்கக் வேண்டும். பிறர் அந்த இயக்குனரின் யோசனைகளை ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். ஆனாலும் பவர் இருக்கிறது என்பதை அவர் காட்டிக் கொண்டிருக்கிறார்.

என்ன சொல்லியும் அந்த இயக்குனர் அடங்கமாட்டேன் என்று குதித்துக் கொண்டிருக்கிறார் என்றும், உதயன் திரைப்படத்தினை வெளிவர விடாமல் அதற்கு ஏகப்பட்ட பிரச்சினைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் இண்டஸ்ட்ரியில் பேசிக் கொள்கிறார்கள்.

திருட்டு வழியில் முன்னனிக்கு வந்து விட்டு, உதார் விட்டுக் கொண்டு திரியும் அந்த இயக்குனர் ஒன்றினை மறந்து விட்டார் போலும். மேலிடத்தின் காதுகளுக்கு இவரின் உதார் செய்திகள் சென்று சேரும் வரை மட்டும் தான் ஆட்டம் போட முடியும். செய்தியைக் கேட்டு விட்டா என்றார் தூள் கிளப்பி விடுவார். ஜாக்கிரதையாய் தன் பின்புறத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், தொழிலாளர்களின் சம்பளத்தில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்களுக்கு ஒரு படத்திற்கு இவ்வளவுதான் சம்பளம் என்று நிர்ணயிக்க வேண்டியதுதானே? ஏன் அவ்வாறு தயாரிப்பாளர்கள் செய்ய வில்லை?????

பெப்சி அமைப்பினர் தயாரிப்பாளர்களின் அழுகுணி ஆட்டத்திற்கு ஒத்துழைக்கவே கூடாது. இன்னும் பத்து பர்சண்ட் சேர்த்து சம்பளம் கேட்க வேண்டும். பெப்சி அமைப்பினர் எந்த வித சமரசத்திற்கு ஒத்துக்கொள்ளவே கூடாது.

நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க முடியாத தயாரிப்பாளர் சங்கத்திற்கு, தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல எந்த வித தகுதியும் கிடையாது.

– பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: