காங்கிரஸ்ஸின் ஜாலியன் வாலாபாக்

கபில் சிபல் பாபம் ராம்தேவை ஏர்போர்ட்டிலேயே சந்தித்து வந்தவர். அவருக்குத் தெரிய பல மீடியாக்கள் ராம்தேவின் உண்ணாவிரதத்தை வெளியிட்டன. பிரணாப் முகர்ஜிக்கும் ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டம் தெரியும். ஆனால் கபில் சிபல் சொல்கிறார், ‘ ராம்தேவ் யோகா கிளாஸ்ஸுக்கு’ என்று அனுமதி வாங்கி விட்டு, போராட்டம் செய்வதால் போலீஸ் அனுமதி மறுத்து விட்டது என்று’.

கேட்கிறவன் கேனயன்னு நினைச்சுட்டாரு போல. ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கபோகிறேன் என்றுச் சொன்னார், அதன் படி உண்ணாவிரதம் இருந்தார். அதைக் கொச்சைப் படுத்தி, மக்களை முட்டாள்களாய் கருதிய கபில் சிபலின் மேற்கண்ட பேச்சு அவரின் கபடத்தைக் காட்டுகிறது. கபில் சிபலுக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை அவர் அமைச்சராய் தொடர்வதற்கு. மக்களிடம் பொய் சொல்லி இருக்கிறார். இல்லையென்று அவரால் மறுக்க முடியுமா???????

உண்ணாவிரதம் நடத்திக் கொண்டிருந்த ராம்தேவை நடு நிசியில் (அம்மாவின் ஸ்டைல்) துரத்தி அடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களையும் அடித்து விரட்டி இருக்கின்றார்கள். ஆங்கிலேயன் கூட பகலில் தான் ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். ஆனால் காங்கிரஸோ நாட்டின் நன்மை என்ற பெயரில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவையும், பொதுமக்களையும் நடு நிசியில் அடித்து துவைத்திருக்கிறது. ஊழலை ஒழி என்றுச் சொல்கின்றார்கள். அதற்குப் போராடுகின்றார்கள். அதை ஏன் காங்கிரஸ் அரசு தடுக்கிறது? ராம்தேவ் என்ன காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பினையா கேட்டார்?

இந்தியாவின் சாபக்கேடு “ காங்கிரஸ்”. ஜன நாயக நாட்டில் ஊழலை ஒழி என்றுச் சொன்னதற்காக ஒருவர் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார். எந்த மாநிலமும் உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க மறுக்கிறது. ஊழல் மாயவதி கூட ராம்தேவ் உண்ணாவிரதமிருக்க அனுமதிக்க மறுக்கிறார். என்ன ஒரு இந்திய ஜன நாயகம்? இவர்கள் எல்லாம் ஆட்சியில் இருந்தால் இந்தியாவின் கதியென்ன????

மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி ஜன நாயகத்திற்கு எதிராய் நடத்திய இந்த அடிதடி ஒரு “ ஜாலியன் வாலாபாக்” என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா?

காங்கிரஸ்ஸுக்கு மாற்றே இல்லை என்ற இருமாப்பில் காங்கிரஸ் இந்த ஆட்டம் ஆடுகிறது. பாஜக தலைவர்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாடுமுழுக்க எடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் போராட்டத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் ஊழல்வாதிகள் காணாமலே போய் விடுவார்கள். பாஜகவினர் செய்வார்களா?

– பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: