ரஜினிகாந்த் என்ற கொடூரம்

சினிமாவில் ரஜினி பற்ற வைத்த ஒரே ஒரு சிகரெட்டினால் எத்தனையோ இளம் நுரையீரல்கள், நெருப்புப் போல தகிக்கும் புகையினால் பொசுக்கப்பட்டன. தவறான ஒரு பழக்கம், ஸ்டைல் என்ற பெயரால் நல்லது என்று நினைக்கப்பட்டது. இளம் வாலிப உள்ளங்கள் ரஜினியின் சிகரெட் மாயையால் தன் வாழ்க்கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டார்கள். நான் நடித்தேன், எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று ரஜினியால் சொல்லவே முடியாது. தமிழர்கள் தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் பழக்க வழக்கங்களை தாங்களும் பின் தொடர்வார்கள் என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதைப் பற்றிய பிரக்ஞைகள் ஏதுமின்றி ரஜினி எந்த ஒரு மனத்துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியாக சிகரெட்டுகளை தன் படங்களில் பத்த வைத்துக் கொண்டே இருந்தார். உடம்பே கோவில், அதில் உறையும் உள்ளமே இறைவன் என்றுச் சொல்லுவார்கள். அந்த உடம்பை கெடுத்து குட்டிச்சுவராக்கிக் கொள்ள பிறர் தன்னை அவதாராக பயன்படுத்த உதவி இருக்கிறார்.

தனக்கு அள்ள அள்ளக் குறையாமல் அன்பினையும் பொருளையும் வழங்கிய சமூகத்தின் பால் செய் நன்றி மறந்தவராய் குடிப்பதைக் கூட நியாயப்படுத்தினார். ரஜினியின் அதிர்ஷ்டம் மக்களின் அபிமானத்தை அவருக்குத் தந்தது. ஆனால் அந்த அபிமானத்தை அவர் தன் கல்லாப்பெட்டியை நிறைத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தினார். பாபா திரைப்படத்தின் போது ரஜினியின் மனைவி லதா ரசிகர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததை இன்றைக்கு நினைத்தாலும், லதா என்ற பெண்மணி மீது வெறுப்பே ஏற்படுகிறது. ரஜினி ரஜினி என்று அன்பினைக் கொட்டி அலைந்த இளம் உள்ளங்களிடமிருந்து லதா கொள்ளை அடித்தார். ரசிகர்களின் அன்பினை அவர் மதிக்கத் தவறினார்.அதை அவரால் இன்றைக்கும் மறுக்க முடியாது.

ரஜினியின் படங்களில் இளம் பெண்களின் இளமை பிறருக்கு விருந்தாக்கப்பட்டது. ம்னித வாழ்விலே பெரும் பாவம் என்றுக் கருதப்படுவது “பெண்களின் மீதான வன்முறை”. அதை ரஜினி எந்த ஒரு சமரசத்திற்கு இடமின்றி தன் படங்களில் , கூசாமல் செய்தார்.

ரஜினி தன்னை அன்பினால் நிறைத்த சமூகத்திற்கு இதுகாறும் வரையிலும் தீங்குதான் செய்து வந்திருக்கிறார். அவரது மனச்சாட்சிப்படி பதிலளித்தார் என்றால் ஆம் என்றே ஒத்துக் கொள்வார். இமயமலை சாமியார்களால் மட்டுமல்ல அவர் எந்த பாபாவினாலும் ஆசீர்வதிக்கப்பட மாட்டார். எனக்கொன்றும் ஆகவே ஆகாது என்றுச் சொல்லி வந்தவர் அவர். ரஜினி என்ற மாயபிம்பம் உடைந்து ஹாஸ்பிட்டல்களின் வாசல்களில் தெரித்துக் கிடக்கிறது.

ரசிகர்களின் அன்பு உள்ளங்கள், அவரின் நோயால் கிழித்து அதில் மிளகாய் பொடி தூவிய கணக்காய் எரிந்து கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்பதைக் கூட ரஜினியின் மனைவி ரசிகர்களுக்குச் சொல்ல மறுக்கிறார். ரசிகனின் அன்பினைக் கூட உணர மறுக்கிறார் ரஜினி. இதில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது தெரியவில்லை. லட்சக்கணக்கான ரசிகர்கள் கோவில் கோவிலாய் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். பாத யாத்திரை போகின்றார்கள். அலகு குத்திக் கொள்கிறார்கள். தரையில் சோற்றினைக் கொட்டி மண் சோறு சாப்பிடுகின்றார்கள். இன்னும் என்னென்னவோ செய்து ரஜினி நலமுடன் இருக்க வேண்டுமென்று வேண்டுகிறார்கள். ஆனால் ரஜினியின் குடும்பத்தார் ரசிகர்களை இன்னும் கிள்ளுக் கீரைகளாய் நினைப்பதைப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது.

ரசிகனை தன் வீட்டு நாயை விடக் கேவலமாய் கருதும் ரஜினியும், அவர் குடும்பத்தாரும் தங்களைத் திருத்திக் கொள்ளாவிடில், அதற்கான தர்மத்தின் தண்டனையை அவர்கள் நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டுமென்பதை இந்த நேரத்தில் வேதனையுடன் தெரிவிக்க வேண்டி இருக்கிறது. ரஜினி நோய் வாய்ப்பட்டு இருக்கும் சமயத்தில் இப்படி ஒரு பதிவு தேவையா என்று அனைவரும் எரிச்சல் படுவீர்கள். கணக்குப் போடும் போது கூட்டல், கழித்தல்கள், வகுத்தல்கள், பெருக்கல்கள் வருவது இயல்பு தானே.

கலைஞரின் மகள் சிறையில் இருக்கிறார் என்றவுடனே மீடியாக்கள் மக்களிடையே அவர் மீதான இரக்கம் சுரக்கும் வரையிலான செய்திகளை கசிய விடுகின்றன. எந்த மக்கள் அவரின் பால் இரக்கம் கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றாரோ அந்த மக்களுக்கு கனிமொழி நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறார் என்பதை மக்களின் நினைவுகளிலிருந்து அழிக்க நினைக்கிறார்கள். மக்களும் போகட்டும் போ என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

கருணாநிதி எந்தவித தகுதியும் அற்ற தலைவர் என்று பிரபஞ்சன் என்ற எழுத்தாளர் தன் எழுத்து நேர்மையினை இவ்வளவு காலம் கழித்து காட்டியிருக்கிறார். இதைத் தான் நாங்கள் உடனுக்குடனே செய்ய விரும்புகிறோம்.

வேறு வழி இல்லை சொல்லித்தான் ஆக வேண்டும். ரஜினி ஒரு கொடூரம் தான் ரசிகனுக்கு……

– ஸ்ரீ

16 Responses to ரஜினிகாந்த் என்ற கொடூரம்

 1. kumaravelu சொல்கிறார்:

  sri says fully truth truth I appriciates

 2. Gobinath சொல்கிறார்:

  Ananthi rasigargalin anbai yevarau rajini kevala paduthugirar. Mellum yellarum MGR,NSK aaga mudiyathu. MGR,NSKai thavira rasiganai madhicha cinemakaran yarrum illae. Mellum oruvar udambu unmaiyil mudiyamal irukkum podhu yenn soorigireergal. Perr yedukka vendum yendral anaivarum rajiniya thaka vendiyathu illae thitta vendiayathu..Yosithu parrungal avar oruvar cigratte pidipathal thaan avaivarum ciger pidikiraargala..Yezhuthaa vendum yenpadarthaga kandathai yezhutharthirgal..Neengal sonna madiri BABA padam flop aana vudan he has given money (atleast few) back to distributors…Aanal samipathil Vijay avargal yenna seitharr yenbathu anaivarukkum theriyum…
  Yoisyungal….

  • அனாதி சொல்கிறார்:

   கோபி, நீங்கள் சினிமாவில் இருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு கிடைக்கக் கூடிய செய்திகள் அனைத்தும் பொய்யானவை. ஆனால் எங்களுக்கு அப்படி அல்ல.- பஞ்சரு

 3. jay சொல்கிறார்:

  Even educated are crazy. It is a curse on Tamilnadu.

 4. Rajesh Ramu சொல்கிறார்:

  தன்னை அறிவு ஜீவி என்று நம்பிக்கொண்டு, உத்வேகத்துடன் இந்த சமுதாயத்துக்கு தொண்டாற்ற தன்னை விட்டால் வேறு ஆட்களே இல்லை என்று எண்ணிக்கொண்டு, ஒரு தனி மனிதனை அவனுடைய எட்டினாலும் எட்ட இயலா மா புகழைக் கண்டு காழ்ப்புடன் உமிழ்ந்திருக்கும் வார்த்தைகளை, நான்……… நாற்றம் எடுக்கும் எலியின் குடலையும், கடலோர கருவாட்டு துண்டுகளையும் தின்று கொழுத்து…….. எங்கு, யார் மீது என்று அறியாமல் கழியும் காக்கையின் எச்சமாகத்தான் பார்க்கிறேன்………..

  இந்த எச்சத்தையும் பாராட்டும் ஜால்ராக்கள் வேறு

  • அனாதி சொல்கிறார்:

   மிஸ்டர் ராஜேஷ், உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நாங்கள் எழுதியிருக்கும் கருத்துக்களில் எது உண்மையில்லை என்றுச் சொன்னீர்கள் என்றால் எங்களது தவற்றினை நாங்கள் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். -ஸ்ரீ

 5. jagan சொல்கிறார்:

  சரியாக சொன்னீர்கள்

 6. swami சொல்கிறார்:

  நேர்மையான பதிவு. பாபா படத்தின் போது லதா கொள்ளை அடித்தது இன்னமும் மறக்க முடியலை. ரஜினியின் ரசிகர்கள் அவரிடம் நிபந்தனையற்ற அன்பை கொண்டு இருக்கிறார்கள். அந்த தூய்மையான உள்ளங்களின் அன்பு அவரை காப்பாற்றும் என்று நினைக்கிறேன். இனிமேலாவது இதை ரஜினியும், அவர் குடும்பத்தாரும் உணர்ந்தால் சரி.

  • அனாதி சொல்கிறார்:

   மிஸ்டர் சுவாமி, நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கின்றீர்கள்? நடிகர்கள் எவராவது ரசிகனை என்றைக்காவது மதித்தது உண்டா? ஒரு சிறிய விஷயம் சொல்லுகிறேன் கேளுங்கள். எத்தனையோ ரசிகர் மன்றங்களை வைத்திருக்கும் பல நடிகர்கள், தன் ரசிகர்களில் எவரையாவது தன் சினிமாவில் முகம் காட்ட வைத்திருக்கின்றார்களா? இந்த நடிகை தான் தன்னுடன் நடிக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்களிடம் டிக் அடிக்கும் நடிகர்கள் ஏன் தன் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகனுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கக் கூடாது? ரசிகர்கள் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டிய சமாச்சாரம் இது.
   – ஸ்ரீ

 7. Thiru சொல்கிறார்:

  பதிவை படித்த போது 5 மறுமொழிகள் என்று பார்த்தேன். இதில் யாராவது ரஜினி ரசிகனாய் (வெறியனாய் – பித்தனாய் ) இருந்து அசிங்கமான மறுமொழி இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே “மறுமொழிகள்” மீது “click” செய்தேன். ஆச்சரியம் ஆனால் உண்மை. அனைத்தும் பதிவிற்கு ஆதரவானவை. மக்கள் மத்தியில் இவ்வளவு விழிப்புணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி பற்றி எந்த சிறிய விஷயமானாலும் அதை உடனே காட்டி கல்லா கட்டும் மீடியாவுக்கு இந்த விஷயம் அல்வா போல் கிட்டி விட்டது. தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி என்று கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பரிதாபத்திற்கு உரியவன் “யாரோ” நலம்பெற மண்சோறு தின்னும் அப்பாவிதான். ஒரு இடத்தில ஒரு போஸ்டர் “வாழும் கடவுள் ரஜினி” என்று. நாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. நடிகனை நடிகனை மட்டுமே பார்க்கும் காலம் எப்போதுதான் வருமோ என்று மனசு கிடந்து தவிக்கிறது. ஏதோ அத்திப் பூத்தார்போல இப்படி ஏதாவது பதிவுகள் வந்தால்தான் உண்டு. மிக்க மகிழ்ச்சி, எனது வாழ்த்துக்கள்.

  • அனாதி சொல்கிறார்:

   இதுவரையிலும் அசிங்கமான மறுமொழி ஏதும் வரவில்லை திரு. எனக்கும் கூட ஆச்சரியம் தான். அனாதியிடம் இப்படிஒரு பதிவு எழுதவிருக்கிறேன் என்றவுடன், மனதைக் கொஞ்சம் திடம் செய்துகொள் ஸ்ரீ என்றார். ஆனால் குஞ்சுவோ இப்போ ரஜினியெல்லாம் சும்மா என்றுச் சொன்னான். கிட்டத்தட்ட 2400 தனி ஐப்பி முகவரியிலிருந்து இக்கட்டுரை படிக்கப்பட்டிருக்கிறது. எவரும் திட்டாமல் இருப்பது கண்டு எனக்கு ஆச்சரியம் தான். ரஜினி மாயை முற்றிலுமாய் ஒழிந்து விட வேண்டும் என்பதுடன் நடிகர்களை நட்சத்திரங்கள் என்று அழைப்பதை விட “கூத்தாடிகள்” என்றழைத்தால் இன்னும் சுவாரசியமாய் இருக்கும். இந்தக் குஞ்சுவின் வேலையே நடிகைகளுடன் சுற்றுவதுதான். அவன் தான் கூத்தாடி என்றால் கோபிப்பான்.- ஸ்ரீ

 8. naren சொல்கிறார்:

  ரஜினி ஒரு நடிகன். நடிப்பு அவரது தொழில். ஒருவன் அவர் நடிப்பை ரசிச்சா பத்தாதா? ரசிகர்கள் திருந்தனும்..

 9. r.palanikumar சொல்கிறார்:

  it is 100% true..thank you for such a bold and honest article

 10. வேந்தன் சொல்கிறார்:

  இதில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது தெரியவில்லை……………….-நிறைய ரகசியம் இருக்கிறது. இவ்வளவு தூரம் ஆராய்ந்த நீங்கள் அதை சற்று ஆராய்ந்து இருக்காலம். ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் 50 கோடிக்கு மேல் பணம் வாங்கி சுல்தான் தி வாரியார் எனும் படம் எடுப்பதாக சொல்லி பணத்தை கும்மியடித்தாகிவிட்டது. அதை திருப்பி தரவேண்டும். அந்த நட்டத்தை ஈடு கட்ட இப்பொழுது இன்னொரு நிறுவனத்திடம் பணம் அவர் கடும் நோயுற்று இருக்கிறார் என்று சொன்னால் எந்த முதலாளி முதலீடு செய்வான். அதை பற்றி வெளியில் சொல்ல ரஜினிக்கே பயம்..காரணம் பணம்… பணம்…. பணம்.. வேறு ஒன்றுமில்லை. நேற்று வந்த நடிக மருமகன் சில படங்களிலேயே கோடிக்கணக்கில் வாங்கும் சமயம் இவ்வளவு ரசிகர்கள் அவர் எப்படி அதை இழக்க நிணைப்பார். அவரை போலவே அவரது குடும்பமும். பணக்காரர்களுக்கு தங்களது ஒவ்வொரு இரத்த அணுக்களை விட பணமே மேலானது. ஏனேனில் எல்லா நோய்களையும் விட மேலானது.

 11. kannann சொல்கிறார்:

  ரஜினியை பற்றி நான் கொண்டுள்ள பிம்பமும் இதுவே. அனாதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். துணிச்சலான இந்த பதிவு ஒரு உண்மை விளம்பி.பண முதலையாக இருந்த ஒரு கேடு கெட்ட தனி மனித வாழ்வில் எந்த நல்ல பழக்கங்களையும் பின்பற்றாத கூத்தாடி இந்த ரஜினிகாந்த். பல இளைங்கர்களின் வாழ்வை கருப்பாக்கிய இந்த கருப்பு மின்னல் காணாமல் போகும் காலம் வந்தே விட்டது.

  • அனாதி சொல்கிறார்:

   எவராக இருந்தாலும் ஒரு நாள் செத்துப் போகத்தான் போகின்றார்கள் கண்ணன் (??????). ரஜினி காந்த் ரசிகர்களின் அன்பினை கேவலப்படுத்துகிறார். ரஜினி காந்த் பெற்றதைக் கொடுக்க மறுக்கிறார் அது அன்பென்றாலும் கூட. – ஸ்ரீ

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: