பாபா ராம்தேவ் காங்கிரஸ்ஸின் கையாளா?

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா முழுவதும் பெரும் தீக்கனலை உருவாக்கியது. அரசியல்வாதிகள் ஊழல் செய்தால், உடனடியாக விசாரித்து தண்டனை வழங்கவும், ஊழல் செய்து சேர்த்த பொருளை பறிமுதல் செய்யவும் அன்னா ஹசாரே போராடினார். பட்டினியாய்க் கிடந்தார்.

விடுவார்களா காங்கிரஸ் கட்சியினர். அன்னா ஹசாரே லோக்பால் அமைப்பில் இருந்தவர்களின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். மீடியாக்கள் பரபரப்பாய் செய்திகள் வெளியிட்டன. என்ன செய்தும் லோல்பால் அமைப்பினர் அசைந்து கொடுக்க வில்லை.

இந்தப் போராட்டத்தை செயலிழக்கச் செய்ய வேண்டுமென்று நினைத்து, பாபம் ராம்தேவை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்று பல பத்திரிக்கையாளர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வேண்டுமாம். அதற்காக உண்ணாவிரதம் இருக்கின்றாராம் பாபம் ராம்தேவ். என்ன விதமான கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கிறார் என்று கேட்டால் சிரிப்பீர்கள். ஊழலை ஒழிக்க வேண்டுமாம். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருக்க கூடாதாம். விரைவு கோர்ட்டுகள் உருவாக்க வேண்டுமாம்.

மேற்படி கோரிக்கைகள் எல்லாம் கேனத்தனமாக இல்லை. இங்கு தான் காங்கிரஸ் அரசின் கைங்கர்யம் வருகிறது என்றுச் சொல்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.

காங்கிரஸ் கட்சி பாபம் ராம்தேவை களமிறக்கி, மக்களிடையே அன்னாவின் போராட்டத்தை நீர்த்துப் போக வைக்க நினைக்கின்றார்கள். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றவுடனே மந்திரி பிரதானிகள் எல்லாம் பாபம் ராம்தேவைச் சந்திக்கின்றார்கள். அன்னா ஹசாரே விஷயத்தில் இது போல முன் தடுப்பு வேலைகளை காங்கிரஸ் கட்சியின் அரசு எடுக்கவில்லை? காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சி தடுக்கப்படும். ஊழல் நிறைந்த தேசமாய் இந்தியா மாற்றப்படும் என்பதற்கு எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். ஒரு வயதானவர் ஊழல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முயன்றால், அதை கிள்ளி எறிய முனைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி கோரங்களைப் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும்.

அன்னா ஹசாரேவிற்கு இந்திய மக்களின் ஆன்மா துணை இருக்கும். நல்ல மனம் படைத்தோர்களின் எண்ண அலைகள் அவருக்கு ஆதரவாய், காப்பாய் நிற்கும். போலிகளின் போராட்டங்களை மக்கள் உதாசீனப்படுத்தி விடுவார்கள்.

– பஞ்சரு பலராமன்

One Response to பாபா ராம்தேவ் காங்கிரஸ்ஸின் கையாளா?

  1. சீ.பிரபாகரன் சொல்கிறார்:

    பாபாராம்தோவ் காங்கிரசின் கையால்தான் என்பதில் ஐயம் வேண்டாம். லோக்பால் மசோதா தொடர்பாக இந்த ஆசாமி வெளியிட்ட அறிக்கையும் காங்கிராசுகட்சி வெளியிட்ட அறிக்கையும் ஒரே சாரத்தை கொண்டுள்ளன.

    குறிப்பாக பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்றத்திற்கு உள்ளே நடக்கும் ஊழல்கள் போன்றவற்றிற்கு லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கருத்தை இருவரும் கூறிவருகிறார்கள்.

    ஆனால், அன்னா அசாரே ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவடிவத்தில் ஊழல் இருந்தாலும் தண்டிக்கும் சட்டமாக லோக்பால் இருக்கவேண்டும் என கூறுகிறார். இதிலிருந்தே உண்மையானவர்கள் யார்? போலியானவர்கள் யார்? என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: