கலைஞர் டிவியும் சன் டிவியும் அரசுடைமையாக்கபடுமா?

என்றைக்கு திமுக பதவிக்கு வந்ததோ அன்றிலிருந்து இன்றுவரை ஊழல் ஊழல் ஊழல். எங்கு பார்த்தாலும் ஊழல். எதிலும் ஊழல். அதிலும் விஞ்ஞான ஊழல். சர்க்காரியா கமிஷன் அறிக்கையினைப் படித்துப் பார்த்தால் ஊழல் செய்வதற்கு செலவழித்த நேரத்தை மக்கள் நலத்திட்டங்களில் செலவழித்திருந்தால் தமிழ் நாடு என்றைக்கோ சிங்கப்பூர் ரேஞ்சிற்கு வந்திருக்கும்.

எந்த வித ஆதரவும் இன்றி மாபெரும் நாட்டின் உருவாக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர்கள். வெகு சாதாரணமாய் விமானத்தை தயார் செய்தவர்கள் தமிழர்கள். இந்தளவுக்குப் புத்திசாலியான தமிழர்களின் தியாகம், திறமை போன்றவற்றை உலக அரங்கில் படுகேவலப்படுத்தியவர்கள் திமுகவினர். அதுவும் கலைஞரின் குடும்பம் மட்டுமே இத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருக்கின்றார்கள்.

தகுதியற்ற ஒருவர் தலைவரானால் என்னவெல்லாம் செய்வர் என்பதினை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதைவிட ஒரு அசிங்கம் தேவையா? இதை விட ஒரு கேவலம் தேவையா? மனிதனாகப் பிறந்தவன், ஒழுக்க் குணமுடையவன் எவனாவது காவல்துறை வாசல் பக்கமாய் போவதையே அவமானமாய் நினைப்பான். அதுவும் பெண்பிள்ளைகள் என்றால் சொல்ல வேண்டியதில்லை. இதோ ஊழலின் காரணமாய், மக்களின் சொத்தினைக் கொள்ளை அடித்ததன் காரணமாய் ஒரு பெண் ஜெயிலில் இருக்கிறார். இவர் ஜெயிலில் இருப்பதற்கு காரணம் பொதுச் சேவை செய்கிறேன் பேர்வழி என்று அரசியலுக்கு வந்து, தன் சேவையே முக்கியம் என்று கருதி கொள்ளை அடித்தது மட்டுமின்றி வேறென்னவாக இருக்க முடியும்.

திமுகவின் தலைவர் கருணாநிதியை திமுக தொண்டர்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தருணம் இது. இனி திமுகவிற்கு தலைவராய் இருக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. திமுக எத்தனையோ கோடானு கோடி தொண்டனால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கம். திமுக எதிர்காலத்தில் மக்கள் சேவைக்கு திரும்ப வரவேண்டுமெனில் கலைஞர் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால் செய்யமாட்டார்.  கலைஞரின் குடும்பத்திலிருந்து திமுகவைப் பிரித்தெடுக்க இன்னொரு மாமாங்கம் ஆகி விடும்.

ஸ்பெக்டரம் பணத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கலைஞர் டிவியையும், சன் டிவியையும், சன் டிடிஹெச்சையும் இந்திய அரசு நாட்டுடைமையாக்குமா என்பதுதான் இப்போதைய பிசினஸ் மேன்களிடையே உலவும் பேச்சு. சிபிஐ நூக் அன் கார்னராய் சன் டிவி தயா நிதிமாறனின் உள்ளடி வேலைகளை மோப்பம் பிடித்து விட்டதாகவும், அதன் விளைவு அவர் நிச்சயம் ஜெயிலில் கிடப்பார் என்றும் பேசிக் கொள்கிறார்கள். சில பொதுவுடைமைவாதிகளும், சமூக ஆர்வலர்களும் சன் டிவி, கலைஞர் டிவிக்களை அரசுடைமையாக்க உத்தரவிட வழக்கு தொடுக்கவும் தயாராகி இருக்கின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். மக்களிடமிருந்து திருடிச் சொத்து வாங்கினால் அச்சொத்து திரும்பவும் மக்களிடமே போக வேண்டியதுதானே வழக்கம்.

இந்தக் காலத்தில் நேர்மையாக தொழில் செய்து, வளர்வது என்பதெல்லாம் நடக்கும் ஒன்றா? ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் சன் டிவி வளர்ந்த பாதையை மீடியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியில் கொண்டு வருவதைப் பார்க்கும் போது, நேர்மையாளர்கள் பலரும் தாங்கள் நேர்மையாய் நடந்து கொள்வது கேனத்தனமான ஒன்றா என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் தர்மம் என்ற ஒன்று இருக்கின்றதே? அது இந்த கலைஞர் குடும்பத்தினை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடாது. அதுவும் ஒரு இயக்கத்தையே பலிகொடுத்து தன் குடும்பத்தை வளர்த்த கலைஞரை தர்மம் சும்மா விடாது என்பது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களின் மூலமாய் நாம் அறிந்து கொள்ளலாம்.

– பஞ்சரு பலராமன்

3 Responses to கலைஞர் டிவியும் சன் டிவியும் அரசுடைமையாக்கபடுமா?

  1. Man சொல்கிறார்:

    ‘முரசு’ என்ற பெயரில் இரண்டு சேனல்கள் தொடங்க உரிமம் பெற்றுவிட்டார் கருணாநிதி. கலைஞர் டி.வி. மூடப்படும்.

  2. Raja சொல்கிறார்:

    Appom jeylalitha jail pakkam poanuthu kooda illa?

  3. naren சொல்கிறார்:

    கருணாநிதி போனதும் திமுக இல்லாம போய்டும். ஸ்டாலினும் அழகிரியும் ஒன்னா இருக்க chance இல்ல. அனேகமா இன்னும் 1 வருசம்.. திமுக உடயும்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: