Hello ! Who will bell this Cat ? பூனை : தயாநிதிமாறன்

தெஹல்ஹாவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி இருக்கிறார் தயா நிதிமாறன் என்று டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.என்ன விஷயமென்பதெல்லாம் ஏற்கனவே தெரியும் என்பதால், இப்போது தான் மேட்டர் வெளிச்சத்திற்கு வருகிறது போலும் என்று நினைத்தேன். சிறிது நாட்களுக்கு முன்பே சவுக்கில் இவரைப்பற்றிய கட்டுரை ஒன்றினையும் வாசித்தேன்.

பொய்மை என்பது காற்றுக் குமிழ் போல. அது என்றாவது ஒரு நாள் வெளியே வந்து விடும். இதோ தயா நிதிமாறனைப் பற்றிய ஊழல் செய்தி வெளிவந்து விட்டது. நேற்று பிரைம் மினிஸ்டரைப் பார்த்திருக்கிறார் இவர். மேட்டர் ஏதோ சீரியஸாக போகிறது.

ஸ்பெக்ட்ரம் – இந்திய மக்களின் உழைப்பினை உறிஞ்சி ரத்தம் குடிக்கும் காட்டேறிகளை, சட்டம் தண்டித்து ஆக வேண்டும். அவ்வாறு சட்டமும் தண்டிக்கத் தவறினால் தர்மம் நிச்சயம் தண்டிக்கும்.

தெய்வம் நின்று கொல்லுவதில்லை. அன்றைக்கே கொன்று விடுகிறது. உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

இதோ அகில உலகத்திலும் இதுவரை எவரும் செய்ய முடியாத ஊழலைச் செய்த திமுகவினர் அதற்கான தண்டனையை நோக்கி இழுக்கப்படுகிறார்கள். சட்டம் தன் கடமையைத் தவறினால் தர்மன் அதை நிலை நாட்டும்.

அந்தக் கட்டுரையின் இணைப்பு கீழே

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp

இம்மென்றால் நோட்டீஸ் விடும் தயா நிதிமாறனுக்கு சரியான ஆப்பை தெஹல்கா அடிக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் சொல்கின்றார்கள். இவரைப் போல பெரும் தலைகள் பலரைப் பார்த்த பத்திரிக்கை அது என்கிறார்கள். பச்சா நோட்டிஸ் கிச்சடியை தெகல்காவிடம் கிண்டி விட முடியாது.

– பஞ்சரு பலராமன்

Hello ! Who will bell this Cat ? பூனை : தயாநிதிமாறன் க்கு ஒரு பதில்

  1. thendral சொல்லுகின்றார்:

    இந்த கொழுத்த திமிரெடுத்த பூனைக்கு மணி கட்டி இருக்கும் தெஹல்காவிற்கு எனது வாழ்த்துக்கள். இந்த பூனையின் மணி ஓசையால் இது எங்கு எங்கு வாய் வைத்தது என்பதை இனி நாடே அறியட்டும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: