லோக்பால் – காங்கிரஸ்ஸின் படுபயங்கரம்

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தால் வயிற்றுக் கழிச்சல் எடுத்த காங்கிரஸ் கட்சி, ஊழல் ஒழிக்க பொதுமக்களுடன் இணைந்து கமிட்டி ஒன்றினை அமைத்து சட்ட திட்டங்களை உருவாக்கலாம் என்று சொன்னது. அன்னாவும் உண்ணாவிரதத்தை முடித்தார்.

காங்கிரஸ் அடுத்த முயற்சியாய் இந்த அன்னா உண்ணாவிரதத்தை கேவலப்படுத்த, மக்களின் கமிட்டி உறுப்பினர்கள் மீது சேற்றினை வாரி இறைத்தது. அதுவும் பலிக்கவில்லை. நேற்றைக்கு பிரதமர், எம்பிக்களை இந்த விசாரணையிலிருந்து விலக்க் வேண்டுமென்றுச் சொன்னார்கள் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் டிவியில் பேட்டி கொடுத்தார்.

திமுக எம்பி ராசாவால் தான் உலக மெகா ஊழல் நடந்திருக்கிறது. இவரைப் போன்றவர்களை விசாரிக்கக் கூடாதாம். என்ன ஒரு அக்கிரம் பாருங்கள்.

இந்திய ஜன நாயக நாட்டில் சட்டத்திற்கு உட்பட்டது தான் இறைவன் உரையும் கோவில் கூட. கடவுளைக்கூட கேள்வி கேட்கும் தகுதியுடைய சட்டத்திற்கு பிரைம் மினிஸ்டர் என்றால் சல்யூட் போட வேண்டுமா?

இந்திய நாட்டின் எந்த ஒரு பிரஜையாக இருந்தாலும் அவர் சட்டத்திற்கு உட்பட்டவரே. இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுவார். நாளைக்கு வேறொருவர் வருவார். எத்தனையோ பிரதமர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் சட்டம் ஒன்று தான். அந்தச் சட்டத்தின் படிதான் இந்தியா இயங்குகிறது.

ஊழலை ஒழிக்கச் சட்டம் போட வேண்டும் என்றுச் சொன்னால் எம்பிக்களை அதில் சேர்க்கக் கூடாது. பிரதமரை அதில் சேர்க்கக் கூடாது என்று சொல்வது காங்கிரஸ் மக்களை மடையர்கள் என்று நினைத்து விட்டதால் வந்த சோதனை. காங்கிரஸ்ஸின் தலைவர் சோனியா ஊழலை ஒழிக்க வேண்டுமென்று பேசுகிறார். அவரின் அமைச்சர்களோ அவரை விசாரிக்க கூடாது, இவரை விசாரிக்கக் கூடாது என்றுச் சொல்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியை கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வருகிறது காங்கிரஸ் கட்சி.

திருடன் கையில் சாவியைக் கொடுத்த கதையாகி இருக்கிறது லோக்பால் சட்டம். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை லோக்பால் சட்டத்தைக் கொண்டு வராது.

இந்திய மக்கள் அரசியல்வாதிகளுக்கெதிரான மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து ஊழலை ஒழிக்க போராட வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

அன்னா ஹசாரேவை முன்வைத்து, இந்தியா தன் எதிர்காலத்திற்காக போராட வேண்டும். மக்கள் அனைவரும் அன்னா ஹசாரேவின் ஊழல் ஒழிக்கும் போராட்டத்திற்கு உறுதுணையாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஜன நாயக ஆட்சி என்று வாரிசுகளே இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பார்கள். இது நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்லதல்ல என்பதை மட்டும் கவனத்தில் கொள்க.

– பஞ்சரு பலராமன்

செய்தி ஆதாரம்

http://www.timesnow.tv/Lokpal-Bill-war-heats-up/articleshow/4374626.cms

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: