இறைவனைப் பாருங்கள் !

அன்பு நண்பர்களே,

பஞ்சு ஆரம்பித்து விட்டான். கடந்த மாதம் வரையிலும் திமுக அரசினை திட்டிக்கொண்டிருந்தான். இப்போது அதிமுக அரசினைத் திட்டிக் கொண்டிருக்கிறான். பஞ்சு கல்வியை பொதுவுடைமையாக்கும் வேலையைப் பாருடா. எதிர்கால சந்ததிக்கு இது ஒன்றே உருப்படியாய் நீ செய்யும் காரியமாக இருக்கும். அரசியல்வாதியைத் திட்டி என்ன பலனைப் பார்க்கப் போகின்றாய் பஞ்சு?

வேசித்தனம் செய்வதை அரசியல் என்றுச் சொல்லி வைத்திருக்கின்றார்கள் நம் முன்னோர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் தேர்தலின் போது கூட்டணி சேரும் போது கட்சியின் தலைவர்கள் சொல்வார்களே ஒரு வார்த்தை “ கொள்கை வேறு, கூட்டணி வேறு” என்று. இதைத் தானடா நான் வேசித்தனம் என்கிறேன்.

நண்பர்களே, இந்தப் பஞ்சுப் பயல் இருக்கின்றானே இவனுக்கு மூக்கு மேலே கோபம் வரும்.  அடக்குடா அடக்குடான்னு சொல்லிப் பார்த்தேன். கேட்க மாட்டேன் என்கிறான்.  எனது தோழி ஒருத்தி இருக்கிறாள். அவளிடம் சொல்லித்தான் இவனையெல்லாம் சரி செய்ய வேண்டும். தற்போது ஆஸ்ட்ரேலியாச் சென்றிருக்கிறாள். வரும் போது பஞ்சு சின்னா பின்னமாகப் போகின்றது. அந்தக் கதையை மேட்டர் நடந்த பிறகு எழுதுகிறேன். பஞ்சு புள்ளி வைத்து விட்டேனடா, கோலம் நிச்சயம். முடிந்தால் இப்போதே காசிப் பக்கமாய் ஓடிப் போய் விடு ராஸ்கல்.

உங்களுக்கெல்லாம் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆசைப்படாதவர்கள் இந்தப் பக்கமாய் வந்து விட வேண்டாம். ஓடிப் போய் ”சாரு நிவேதிதாவின்” பிளாக்கைப் படித்துக் கொண்டிருங்கள்.

கடவுளைத் தரிசிக்க வேண்டுமென்றால் நான் சொல்லும் சில முன்னேற்பாடுகளை நீங்கள் செய்தாக வேண்டும். முதலில் நீங்கள் இருக்கும் அறைக் கதவினை அடைத்து விடுங்கள். லைவ்வில் ஸ்பீக்கரை செட் செய்யுங்கள். 75 அளவுக்கு ஸ்பீக்கரின் சத்தத்தை அதிகப்படுத்துங்கள். செல்போனை அணைத்து விடுங்கள்(ஹீ…ஹீ.. வந்து விடுகிறது, என்ன செய்ய?).

இதோ கீழே இருக்கும் பாட்டினை மட்டும் பாருங்கள். கடவுள் இரண்டு இடங்களில் தரிசனம் தருவதை நிச்சயம் உணருவீர்கள்.

உங்களின் பிரிய குஞ்சாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: