மெட்ரிக் பள்ளிகள் செய்யும் கொலைகள் !

இதென்ன தலைப்பே டெரரா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அது உண்மை. இச்சம்பவம் தமிழகத்தின் பிரபல நகரங்களில் நடந்து கொண்டிருக்கிறது இன்றைக்கும் கூட. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான், கலைஞர் அரசு கல்விக் கட்டணத்திற்கு கமிட்டி ஒன்றினைப் போட்டது. அதையும் இப்போது “அம்மா????” நீக்கி விட முனைந்திருக்கிறார். இதுகாறும் மக்கள் விரோத அரசு என்று திமுக அரசை விமர்சித்த அம்மா, தன் அரசில் மட்டும் மக்களுக்கு நன்மையா செய்ய முனைகிறார்.

மக்கள் குரலை எடுத்து ஒலிக்க எவர் இருக்கின்றார்கள் இப்போதைய அரசாங்கத்தில். கோடீஸ்வரக் கல்விக் கொள்ளையர்களின் குரல்கள் பத்திரிக்கைகள் தோறும் விளம்பரங்களாய் ஜொலிக்கின்றனவே. இதோ ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

திமுக ஆட்சி எப்போதடா போகும் என்று காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் இந்தக் கொள்ளையர்கள். அவர்களின் எண்ணம் போலே, அம்மா சமச்சீர் கல்வியையும் தூக்கி விட்டார். கட்டணத்தில் பள்ளிகள் கேட்டுக் கொண்டால் தலையிடுவோம் என்றும் சொல்லி விட்டார். மக்கள் விரோத அரசு திமுகவா இல்லை அதிமுகாவா என்பதில் சந்தேகம் வருகிறது.

6400 பள்ளிகளின் முதலாளிகளுக்கு ஆதரவாய் பேசும் அம்மா செயல் சரிதானா என்பதை அம்மா ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும். 6400 முதலாளிகள் முக்கியமா இல்லை தன்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்கள் முக்கியமா என்பதை அம்மா முடிவு செய்ய வேண்டிய தருணம் இது. மந்திரி, எம்மெல்லே பிரதிநிதிகள் இவ்விஷயத்தை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

சரி இப்போது நடந்த உண்மைச் சம்பவத்திற்கு வருகிறேன். சென்னையின் பிரதான பள்ளியில் ஒரு ஏழையின் மகன் ஒருவன் படித்து வந்திருக்கிறான். அம்மாவின் திடீர் அறிவிப்பைக் கேட்ட பள்ளி, உடனே பெற்றோரிடம் 6000 ரூபாய் கட்டச் சொல்லி வற்புறுத்தி இருக்கின்றார்கள். மாதம் 400 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த பள்ளி, திடீரென்று 6000 கட்டச் சொல்லியதைக் கேட்டு தகப்பனார் திகில் பிடித்தலைந்திருக்கிறார். மனைவியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் ஏதோ ஒரு வார்த்தைச் சொல்ல, மனைவி தீ வைத்துக் கொண்டு இறந்து போய் விட்டார். பிள்ளைகள் இருவரும் அம்மா இல்லாமல் அனாதையாய் நிற்கின்றனர். இனி யார் அவர்களை கவனிப்பது? அம்மா இல்லாமல் இருப்போரிடம் கேட்டுப் பாருங்கள் அதன் அருமை தெரியும்.

அம்மாவின் அறிவிப்பு வந்த அடுத்த சில நாட்களில் மேற்கண்ட சம்பவம் நடந்து விட்டது. ஒரு குடும்பமே சின்னா பின்னமாகி விட்டது. இதற்கு காரணம் அந்த மெட்ரிக் பள்ளி.

25ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்யும் பள்ளிகளின் கல்விக் கணக்கினை எந்த அரசாவது தணிக்கை செய்ததா? ஒவ்வொரு பள்ளியும் லாப நோக்கமற்ற டிரஸ்ட் மூலம் தொடங்கப்பட்டவை. இவர்களுக்கு எதுக்கு லாபம் என்று அவர்கள் சொல்லியாக வேண்டும். அரசு ஏன் இதைக் கேட்க மறுக்கிறது????? டிரஸ்ட்டை அரசு தானே ஆரம்பிக்க அனுமதி தருகிறது.

இவர்களை ஒடுக்கி, அனைத்துக் கல்வி நிலையங்களையும் அரசுடைமையாக்கி, தனியார் கல்விக் கொள்ளையர்களை தமிழ் நாட்டை விட்டு அடித்து விரட்ட வேண்டும்.

ஆனால் எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யப்போவதில்லை. இந்த தேர்தலில் நடந்த அமைதிப் புரட்சி போல எதிர்கால சந்ததியினருக்கு கல்வி கிடைக்க, மக்கள் மாபெரும் கல்விப் போராட்டத்தினை ஆரம்பித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். ஊழலுக்கு எதிராய் அன்னா ஹசாரே போல, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராய் நடவடிக்கை எடுத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல கல்வி கிடைக்காமலே போய் விடும். கல்வியிலும் சமச்சீர் இல்லையென்றால் அது எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கே ஆபத்தாய் மாறி விடும்.

கேபிள் டிவியை அரசுடைமையாக்க முயலும் அரசால் ஏன் தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க முடியாது? நிச்சயம் முடியும். பெற்றோர்கள் ஒன்று திரண்டு தனியார் பள்ளிக் கொலைகாரர்களை அடக்கி ஒடுக்கி விரட்ட முயல வேண்டும். இல்லையென்றால் எதிர்கால சந்ததியினர் நம்மை சபிக்காமல் விடமாட்டார்கள்.

– மக்களின் குரலாய் பஞ்சரு பலராமன்

குறிப்பு : தினமலர் சமச்சீர் கல்வியை எதிர்த்து வரும் போக்கு கண்டிக்கத்தக்கது.

4 Responses to மெட்ரிக் பள்ளிகள் செய்யும் கொலைகள் !

 1. துரை சொல்கிறார்:

  தினமலர் முதலாளிக்கு மதுரையில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன…
  அவர்கலும் கல்விக் கொள்ளையர்கலே அதனால்தான் சப்பொர்ட் செய்கிறார்கள்…………….

 2. naren சொல்கிறார்:

  எனக்கு என்னமோ சமச்சீர் கல்வி பெருசா தெரியல… ஸ்கூல்’ல வாங்கர ஃபீஸ் கண்ட்ரோல் பண்ணா போதும்னு தோனுது… government school நல்ல education குடுத்தா, matric போக மாட்டாங்க இல்ல??

  • அனாதி சொல்கிறார்:

   தற்போதைக்கு ஸ்கூல் ஃபீஸைக் கண்ட்ரோல் செய்தாலே போதுமானது. சமச்சீர் கல்வி நிச்சயம் தேவை. வேறுபட்ட கல்வி முறைகளால் தான் கட்டணக் கொள்ளைகள் அதிகரிக்கின்றன. எனது தோழனின் மகன் அட்மிஷன் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா ரூபாய் 5,00,000 லட்சம். மாதம் சாப்பாட்டிற்கு 9000 ரூபாய். வருடத்திற்கு கிட்டத்தட்ட செலவு மட்டும் 25 லட்ச ரூபாய். மகன் என்ன வகுப்பு படிக்கிறான் தெரியுமா? இரண்டாம் வகுப்பு. இப்பள்ளிக்கு தமிழக அரசு தான் அனுமதி வழங்கி இருக்கிறது. சமச்சீர் கல்வி ஆங்கில மற்றும் தமிழ் வழியில் இருத்தல் வேண்டும். தற்போதைய நிலைக்கு ஏற்ப தொழில் முறை சார்ந்த படிப்பாய் இருப்பது அவசியம். ஆனால் அதிமுக அரசு அதைச் செய்யவே செய்யாது. மீண்டும் கட்டணம் என்ற பெயரில் கல்விக் கொள்ளை நடக்கத்தான் போகிறது. காவல்துறையினரை வைத்துக் கொண்டு அதிமுக அரசு அடக்க முனையும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: