பெற்றோர்களை பகைத்துக் கொள்கிறார் இன்றைய முதல்வர்

உலகிலேயே அதிகக் கொள்ளை அடிக்கும் கொள்ளைக் கூடாரங்களான தனியார் பள்ளிகளின் கட்டணத்தை கலைஞரின் அரசு கட்டுப்படுத்தி, கட்டணங்களைச் சீர்படுத்தியது. தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று செருப்பால் அடிக்கப்பட்டு திரும்பி வந்து நீலிக்கண்ணீர் வடித்தனர்.

எந்த ஊரிலாவது ஒன்றாம் வகுப்பிற்கு புத்தகக் கட்டணமாய் 6000 ரூபாய் வசூலிப்பார்களா என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். தனியார் பள்ளிகளில் வசூலிக்கின்றார்கள். ஒன்றாம் வகுப்பு பையனுக்கு 25 ஆயிரம் கட்டணம் கட்டு என்கிறார்கள். இதைக் கேட்க அரசுக்கு தகுதி இல்லையா? தனியார் பள்ளிக்கூட முதலாளிகள் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதற்காகத் தானே நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அரசு உருவாக்கியது. ஒவ்வொரு பள்ளியும் அதன் தரத்திற்கு ஏற்ப இவ்வளவு கட்டணம் தான் வசூலிக்க வேண்டுமென்று கமிட்டி சொல்லியது தவறா? பெற்றோர்களின் உழைப்பை, கல்வி என்ற பெயரில் உறிஞ்சித் திருடிய பகாசுர கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாய் பேசவா, அம்மாவிற்கு கோடிக்கணக்கான பெற்றோர்கள் ஓடி ஓடி வந்து ஓட்டுப் போட்டார்கள்.

கொஞ்சம் கூட செய் நன்றி அற்றவராய் தனியார் பள்ளிக்கூட முதலாளிகளுக்கு ஆதரவாய் பேசுகின்றாரே முதல்வர் இது நியாயமா? அடுக்குமா?

இன்றைக்கு ஆட்சிக்கு வந்த அம்மா நேற்றைய பிரஸ் மீட்டில், தனியார் பள்ளிகள் கேட்டுக் கொண்டால் கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடும் என்றுச் சொல்கிறார்.

தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகளா ஓட்டுப் போட்டுச் ஜெயிக்க வைத்தனர்? வெறும் 60 ஆயிரம் ஓட்டுக்களிலா அதிமுக ஜெயித்தது?

நல்ல ஆட்சி தருவார் என்று எத்தனையோ பெற்றோர்கள் அல்லவா ஜெயலலிதா அவர்களுக்கு ஓட்டுப் போட்டனர். ஓட்டுப் போட்ட ஈரம் காய்வதற்குள் அம்மா தன் செய் நன்றியைக் காட்டி விட்டார் பாருங்கள்.

கொள்ளைக்காரன் கேட்டுக் கொண்டால் தலையிடுவாராம் முதல்வர். கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாய்த் தான் ஆட்சி நடத்துவீர்களா? உங்களை நம்பி ஓட்டுப் போட்ட கோடானு கோடி மக்களுக்காக ஆட்சி நடத்த மாட்டீர்களா?

கல்விக் கட்டணம் என்பது கமிட்டிக்கும் தனியார் பள்ளிக்கும் சம்பந்தப்பட்டதாம். அரசுக்கு பங்கில்லையாம். என்ன இது கொடுமை. அரசுதானே தனியார் கல்விக்கூடங்களுக்கு அனுமதி வழங்கியது. அரசு தானே கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் படி கமிட்டி அமைத்தது? இதெல்லாம் அரசாங்கம் செய்யவில்லை என்றுச் சொல்கிறாரே முதல்வர்.

அம்மா என்றழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கவா நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்?

அம்மாக்களில் அன்பெல்லாம் காரியம் முடிவதற்கு மட்டும் தானா?

கடவுளே.. இதென்ன கொடுமை????

– பஞ்சரு பலராமன்

One Response to பெற்றோர்களை பகைத்துக் கொள்கிறார் இன்றைய முதல்வர்

  1. AYFA Yusuf சொல்கிறார்:

    உச்ச நிலையில் இருக்கும் உலக கல்வி மக்களிடமிருந்து எடுபட்டு போய்விடும் வரை உலகம் அழியும் நிகழ்வு வராது என்று எங்கள் இறை தூதா் முஹம்மது (Peace be upon him ) சொல்லி இருப்பது எப்படி உண்மையாகும் என எதிர் நோக்கி இருந்தேன். இன்று கல்விக்கு வாங்கும் கட்டணம் பல சராசரி மக்களால் கட்ட இயலாததாக மாறி உள்ளது. நிச்சயம் நாம் ஆதி காலத்தை நோக்கி திரும்புகின்றோம் கட்டணத்தை கட்ட இயலாமல் கல்வியை மக்கள் விடத் தொடங்கியுள்ளனா்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: