துக்ளக் ஆட்சி ஆரம்பம் – சமச்சீர் கல்வி

146 இடங்களில் ஜெயித்து இருக்கின்றாரே இனி என்னென்ன ஆட்டங்கள் ஆடப் போகின்றாரோ என்று நினைத்தேன். அதன் படியே ஆரம்பித்து விட்டார். திமுக தலைவரின் உள் ரகசிய திட்டம் கைவிடப்பட்டது நாளைய சந்ததியினருக்கு நல்லதுதான் என்றாலும் சமச்சீர் கல்விக் கொள்கை நீக்கப்பட்டது துக்ளக் ஆட்சியின் முதல் அவலம். மக்களைப் பாதிக்கும் செயல்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார்.

அதென்ன உள் ரகசிய திட்டம். நாம் படித்த போதெல்லாம் நாட்டுத்தலைவர்களைப் பற்றிய பாடங்கள் ஒன்றிரண்டுதான் இருக்கும். காமராஜர் பற்றிய விபரங்களை பாடமாக வைத்திருந்தார்கள். காமராஜர் மக்கள் தலைவர் என்ற வகையில் அவரை வரக்கூடிய சந்ததியினர் படிக்கலாம். ஆனால் தன் குடும்பமே கட்சி என்று வாழ்ந்தவரின் படைப்புகளை வருங்காலச் சந்ததியினர் படிக்கும் படி வைப்பது எந்த வகையில் நியாயம்? அவ்வாறு பாடப்புத்தகங்களில் திமுக தலைவரின் படைப்புகள் வந்தால், எதிர்கால சந்ததியினரின் மனதில் திமுகவின் மீது பிடிப்பொன்றினை ஏற்படுத்தி, அது தன் வருங்கால பேரன் பேத்திகளின் ஆட்சி அமைய ஏதுவாய் இருக்குமென்பதுதான் திமுக தலைவரின் திட்டம். இப்படி ஒரு சிக்கலை கொண்டு வந்து வைப்பதுதான் திமுகவின் திட்டம். அதில் வகையாகச் சிக்கிக் கொண்டார் இன்றைய ஐந்தாண்டு முதல்வர்.

இந்த இடத்தில் விஜய காந்திற்கு ஒரு குறிப்பு : புத்திசாலியாய் நடந்து கொண்டீர்கள் என்றால் அடுத்த ஆட்சி உங்களிடம் வந்து விடும். 

வைகோ அவர்களே உங்களுக்கும் கேட் ஓப்பனாகி இருக்கிறது. பிழைத்துக் கொள்ளுங்கள். 

பிஜேபி என்ற கட்சியினரே கடவுளே வந்து வாயில் வாழைப்பழத்தை உரித்து வைத்தாலும் நீங்கள் விழுங்க மாட்டீர்கள் என்பது மட்டும் உண்மை.

கல்வி மூலம் பெரும் வணிகத்தை தர்ப்பைப்புல் பார்ட்டிகள் நடத்தி வருகின்றார்கள். சமச்சீர் கல்வி வந்தால் தர்ப்பைப்புல் காய்ந்து விடும் என்பதால், வெகு சாமர்த்தியமாக திட்டத்தை கைவிடும் படி செய்து விட்டார்கள். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவது “கல்வி” தான்.

சமச்சீர் கல்வியினால் கல்லா கட்டப்போவது “மெட்ரிக் பள்ளிகள்” என்பதை ஏன் தான் மறந்தாரோ அய்யெம்(ஐந்தாண்டு முதல்வர்). தெரியவில்லை. இனி கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்த கல்விக் கட்டணமும் அதோகதியாகி விடும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கல்விக் கட்டணத்தையும் வாபஸ் வாங்கி விடுவார் அய்யெம்.

மக்கள் மீது கல்விச் சுமை ஏற்றப்படும். மக்களின் அடுத்த ஐந்தாண்டுத் துன்பம் ஆரம்பித்திருக்கிறது. அதற்கு ஒரு ஆரம்பம் தான் “சமச்சீர் கல்வி திட்டம் தள்ளி வைப்பு”.

– பஞ்சரு பலராமன்

கல்வி நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி, கல்வியை இலவசமாக்க முடியுமா இந்த அரசால்??????

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: