கனிமொழி கைது – திமுகவிற்கு சம்பந்தமில்லை

திமுக என்பது கலைஞரின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது மக்களால் காங்கிரஸ் ரவுடிகளிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட இயக்கம். திமுக ஒரு மக்களின் இயக்கம். கலைஞரின் குடும்ப உறுப்பினர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல திமுக. எத்தனையோ லட்சம் இளைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி திமுக.

தற்போது திமுகவிற்குத் தலைவராய் கலைஞர் இருக்கலாம். நாளை வேறொருவர் தலைவராய் வரலாம். ஆனால் இன்றைய திமுகவின் படுதோல்விக்கு முழு முதற்காரணம் “ கலைஞரும் அவரது குடும்பமும்”.

கனிமொழியின் கைது, இந்திய மக்களின் சொத்தினைக் கொள்ளை அடித்ததற்காக நடந்திருக்கிறது. கலைஞர் டிவி திமுகவிற்காக ஆரம்பிக்கப்படவில்லை. அது தனியார் சொத்து. கலைஞர் டிவியின் நிர்வாகிகள் திமுகவில் அங்கம் வகிக்கின்றார்கள் அவ்வளவுதான். நாளை வேறொருவர் திமுகவின் நிர்வாகியாக வருவார். ஊழல் செய்தவர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். ஆனால் திமுக தலைமை இதுவரை அதைச் செய்யவில்லை. இதற்கும் காரணம் இன்றைய தலைவர் “ கருணாநிதி” தான்.

கனிமொழி கைதானால் அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை. லஞ்சப் பணத்தைப் பெற்று, திமுகவின் தொண்டனுக்கா செலவு செய்தார் கனிமொழி? ஸ்பெக்ட்ரம் ஊழலில் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, பதவிக்கு வந்து, அப்பதவியைப் பயன்படுத்தி ஊழல் செய்தவர்கள் கனிமொழியும், ராஜாவும். ஆகவே அவர்களின் கைதுக்காக திமுக தொண்டன் ஏன் கவலைப்பட வேண்டும்? ஊழல் குற்றத்திற்காக எத்தனையோ திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டார்களே அப்போதெல்லாம் திமுக பொதுக்குழுவைக் கூட்டியா முடிவெடுத்தது? இல்லையே? அவரவர் பிரச்சினையை அவரவர் தானே பார்த்துக் கொண்டார்கள்.

கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல், அவரவர் இஸ்டத்திற்கு கொள்ளை அடிப்பார்களாம்.உடனே கட்சி அவர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டுமாம். என்ன நியாயம் இது? இவர்களின் தனிப்பட்ட ஊழல் பிரச்சினையால் இன்றைக்கு திமுக தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முழு முதற்காரணம் இன்றைய திமுக தலைவர் கருணாநிதி.

ஆகவே திமுக தலைவர் பதவியைத் தொடர கலைஞருக்கு எந்த வித தகுதியும் இல்லை. நீண்ட் காலமாய் கட்சிக்கு தொண்டாற்றும் ஏதாவதொரு திமுக தொண்டனிடம் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு, கலைஞர் வெளியேற வேண்டும். அது தான் ஜன நாயகம்.

கம்யூனிஸ்ட் கட்சிகளிலெல்லாம் அவ்வாறு தானே நடைபெற்று வருகிறது. இவ்விஷயத்தில் திமுகத் தொண்டன் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். முடியாது என்றுச் சொல்ல கலைஞருக்கு எந்த வித தகுதியும் கிடையாது. நான் தான் நிரந்தர தலைவராக இருப்பேன், என்னைத் தொடர்ந்து என் குடும்பத்தாரே தலைவர்களாய் வருவார்கள் என்றுச் சொன்னால், திமுக கட்சியில் தொண்டனாய் இருப்பதில் என்ன இருக்கிறது. ஜன நாயகத்தை காப்பாற்றாத திமுகவில் இருந்து என்னதான் பயன்? கலைஞரின் குடும்பத்திற்கு உழைக்கவா கட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும்.

தங்கபாலுவிற்கு இருந்த மனச்சாட்சி ஏன் கலைஞருக்கு இல்லாமல் போனது? அதிமுகவில் பேணப்படும் அதிகாரப் பரவல் ஏன் திமுகவில் வரவில்லை என்று திமுகத் தொண்டன் யோசிக்க வேண்டும்.

கனிமொழியின் கைதுக்கு திமுக ஏன் பதிலளிக்க வேண்டும்? தேவையில்லை.

திமுக ஒரு மக்களின் இயக்கம். அது கலைஞரின் சொத்து அல்ல.

திமுக தொண்டன் புரிந்து கொள்வானா?

– பஞ்சரு பலராமன்

7 Responses to கனிமொழி கைது – திமுகவிற்கு சம்பந்தமில்லை

 1. Nalliah Thayabharan சொல்கிறார்:

  முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனையில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு கனிமொழி என்ற பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?

  ராசாத்தி என்றழைக்கப்படும் .தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது. தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’ என்று கூறி முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார் . நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி .

  எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி மறுத்தாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.

  கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்

  செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் அப்பாவி 3 பேர் தினகரன் ஆபீசில் எரித்துக்கொல்லப் பட்டதை மறக்க முடியுமா….

  கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு அவன் போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல ‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?

  சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?, சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?, காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?; நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?; எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா?, எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?

  நல்லையா தயாபரன்

 2. naren சொல்கிறார்:

  இப்படியல்லாம் சொன்னா நாங்க திருந்தீர்வோமா? நாய் வாலு நிமிராது

 3. ravi சொல்கிறார்:

  Boss..

  Do you ever forgot Sasikala, divakaran once ruled Tamilnadu on behalf of our present honurable CM.. Say DMK head should resign but don’t give a comparison with ADMK.. it spoils your whole post!!!!

  • அனாதி சொல்கிறார்:

   என்ன ரவி இப்படிச் சொல்லீட்டீங்க. புத்தி இருக்கிறவன் எவனாவது அதிமுகவை ஆதரிப்பானா? ஆனால் வேறு வழி ??? இந்த திருடனை விட்டால் நமக்கு இன்னொரு திருடன் தானே தெரிகிறான். – பஞ்சு

 4. Santhose சொல்கிறார்:

  //அதிமுகவில் பேணப்படும் அதிகாரப் பரவல் ஏன் திமுகவில் வரவில்லை என்று திமுகத் தொண்டன் யோசிக்க வேண்டும்.//
  Are you kidding? Is there any democracy in ADMK?. Don’t think that we are idots.

  • அனாதி சொல்கிறார்:

   மிஸ்டர் சந்தோஷ், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இன்றைய அமைச்சரவையில் இருக்கும் புது முகங்களை சற்று நினைத்துப் பாரீர். திமுகவில் சாத்தியமா? மகன்கள், மகள்கள், பேத்திகள், பேரன்கள் இவர்கள் அல்லவா அதிகார பதவியில் உட்கார வைக்கப்பட்டார்கள். அதிமுகவில் ஆளுமை ஜனநாயகம் இல்லை என்பது உண்மை. ஆனால் அதிகார பரவல் இருக்கிறது அல்லவா? திமுகவிற்கு என்றைக்கு கலைஞர் தலைவரானாரோ அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்திருக்கும் அதிகாரங்களைச் சற்று பின்னோக்கிப் பாரும். உங்களை நான் முட்டாள் என்று என்றைக்குமே நினைக்கவில்லை. நான் உங்களை முட்டாள் என்று நினைத்தால் எனக்கு ஆவப்போவது தான் என்ன? தேவையற்ற வகையில் பின்னூட்டங்களைப் போடாதீர்கள். – பலராமன்

 5. krishna சொல்கிறார்:

  sabaash…. sariyaana kelvi?
  ThiMuKa thondargal ovvaruvarum enni paarkka vendiya tharunam ithu….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: