கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றுக்குள் விழும் பெண்கள்

ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நகரத்துப் பெண்கள் எவ்வளவு முட்டாள்களாய் இருக்கின்றார்கள் என்று நேற்றைய நீயா நானாவில் பார்த்தேன்.

கிராமத்துப் பெண்களுக்கும், நகரத்துப் பெண்களுக்குமான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செலிபிரட்டிகள் இருவர். அவர்களில் ஒருவர் சேலை கட்டி பாந்தமாய் அமைதியாய் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருவர் பேண்ட் சர்ட் போட்டு “மீனா கந்தசாமி” என்று நினைக்கிறேன், இவர் பேசியதை இப்போது நினைத்தாலும், ஏன் அப்படி இருக்கிறார் என்று யோசித்தால் “உரலை நினைத்து எதையோ இடித்தார்கள்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.  மீனா கந்தசாமி, கோபி கேட்ட கேள்விக்கு ஏதோ ஒரு பதிலைச் சொல்கிறார். இதுதான் ஃபேஷன் என்று நினைக்கிறார் போல. வாழ்க்கை என்பது ஃபேஷனா? என்பதை அவர் என்றைக்கு உணரப் போகின்றாரோ தெரியவில்லை.

கிராமத்துப் பெண்கள் தங்களின் மீது கட்டமைக்கப்பட்ட கெடுபிடிகளூடே தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் நகரத்துப் பெண்களின் நிலையோ மிகப் பரிதாபகரமானது. ஃபேஸ்புக்கும், நெட்டும் தன் மீதான பிறரின் கவனத்தை ஈர்க்கும் என்று நினைக்கின்றார்கள். பெரிய மால்களில் ஷாப்பிங்க் செல்லுவதும், ஊர் சுற்றுவதும் தான் வாழ்வியலின் இளமைக் கொண்டாட்டம் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள் என்று யோசித்தால் “வாழ்க்கையின் தத்துவமான உறவுகள், பிணைப்புகள், ஆதரவுகள், அன்பு, பிரியம், பாசம் ” போன்றவற்றை இழந்து தனிமையில் கிடக்கின்றார்கள். நகரத்துப் பெண்கள் “ நாகரீகத்தின்” மோகத்தின் காரணமாய், மீடியாக்களின் பொய் முகங்களிடையே சிக்கி, வாழ்க்கையை சிக்கல்களுக்குள் சிக்க வைத்துக் கொள்கிறார்கள்.

கீழே இருக்கும் இணைப்பில் அந்த வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.

– பஞ்சரு பலராமன்

கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றுக்குள் விழும் பெண்கள் க்கு ஒரு பதில்

  1. குமார் சொல்லுகின்றார்:

    மீனா கண்டசாமி பற்றி உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை. அவர் ஒரு அமெரிக்க பல்கலையில் படிப்பவர் என நினைக்கிறேன். அவர் தமிழ், இந்தி-எதிர்ப்பு , தலித் எழுற்சி, இட ஒதுக்கீடு, திராவிடம், பெண்ணியம் குறித்து தெளிவான சிந்தனை உடையவர். அதாவது சராசரி நகர பெண்களின் மனப்போக்கு கொண்டவர் என கூறமுடியாது. வெளிநாட்டில் படிப்பவர் என்ற முறையில் அவர் போட்டிருக்கும் உடை சாதாரண உடை தான். அவர் புடவைக்கு எதிரானவர் என்றெல்லாம் கொள்ள தேவை இல்லை.

    அவர் சொன்னது பேஷன் குறித்து ஒரு அரசியல் இருப்பதை தான் உணர்ந்தாலும், அழகு-சீர் செய்வது ஒரு அடிப்படை உந்துதல், தன் கவிதையில் அழகு இருக்க நினைப்பது போன்றது.

    அவர் சொன்னது மற்ற்றொரு விருந்தினர் சொன்னதின் சிறு மாற்று கருத்து அவ்வளவே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: