தாயிற் சிறந்த கோவிலும் இல்லை

பிபிகோவிந்தன் என்ற மலையாள இயக்குனரின் கார் வெளிச்சத்தில் கிழிந்த பாவாடையுடன், குச்சு வீட்டிற்குள் இருந்து சினிமாவிற்கு வந்தவர் அம்பிகா. அம்பிகாவின் முதல் படம் “சீதா”. ஏழ்மை நிலையிலிருந்து தமிழ் சினிமாவின் அன்றைய பிரபல ஹீரோக்கள் அத்துணை பேருடனும் நடித்த பெருமையுடையவர் அம்பிகா. அம்பிகாவின் வளர்ச்சியின் காரணமாய் ராதாவும் சினிமாவிற்கு வந்தார். வழக்கம் போல ஏகப்பட்ட “செக்ஸ்சுவல்” கிசுகிசுக்கள் கிளம்பின.

தொடர்ந்து எந்த வித பட அதிபரும் அழைக்காத காரணத்தால் திரை உலகிலிருந்து வெளியேறிய சகோதரிகள், மீண்டும் அம்மாக்களாய் வடிவமெடுத்து 70 எம்எம் திரையில் முக்கால் வாசியை நிரப்பினார்கள். இதோ ராதா தன் மகள் கார்த்திகாவை ஹீரோயினாக மாற்றி இருக்கிறார். கார்த்திகா டிவி பேட்டியில் தன் அம்மை ராதாவுடன் வெளிப்படுகிறார். இவர்களின் போட்டோக்களைப் பார்த்த போது, கூட ராதா பேசும் போதும் ”வாந்தி வருவது போல” உணர்ந்தேன்.

ராதாவிற்கு தெரியாத சினிமா உலகம் வேறு இருக்க இயலாது. ஏன் மீண்டும் தன் மகளை, அருமை அருமையாக பொத்திப் பொத்தி வளர்த்த வாரிசுவை, வியர்வையும், விந்துக் கவிச்சியும் நாற்றமெடுக்கும் ஹீரோக்களைக் கட்டிப் பிடித்து, நாற்றமெடுத்த அவர்களின் உதடுகளில் முத்தமிட்டு நடிக்கும் படியும் அவர் செய்கிறார்? அதற்கு என்ன காரணம் இருக்கும் என்று யோசித்தால் “ பணமும், புகழும்” என்பன மனதுக்குள் நிழலாடுகின்றன.

ராதா தன் மகள் கார்த்திகாவை தமிழ் சினிமாவில் ஹீரோயினாய் மாற்றியது “ தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை” என்கிற பழமொழியினை மறு சீராக்கம் செய்ய வேண்டியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

– பஞ்சரு பலராமன்

2 Responses to தாயிற் சிறந்த கோவிலும் இல்லை

 1. குமார் சொல்கிறார்:

  யார் மகளெல்லாம் இப்படி நடிகர்களுடம் நடிக்கவரலாம்?! யாரெல்லாம் வரக்கூடாது?. வேறு பெண்கள் வந்தால் பரவாயில்லையா?!. அவர்களும் ஒருவருடைய மகள் தானே?!

  தெரியாமல் கேட்கிறேன் இப்படி கவர்ச்சி படம் போட்டு பிளாக் போடும் உங்கள் போன்றவர்களுக்கும் தானே பெண் கொடுக்கிறார்கள்?. நீங்கள் அந்த நடிகர்களை விட என்ன விதத்தில் சிறந்தவர்?!.

  நீங்கள் வாய் மெல்லுவது தவிர அவர்களுக்கு ஒன்றும் இழிவு வரவில்லை. நடிப்பது அவர் விருப்பம். சக ஆணை விரும்புவது புணர்வது அவர் விருப்பம். துடைத்து போட்டு விட்டு வேறு தேடுவதும் அவர் விருப்பம். பிறக்கும் குட்டியை ‘தொட்டிலில்’ போடுவதும் அவர் விருப்பம். அதற்க்கு நீங்களும் ஒன்றும் சொல்ல முடியாது, அமபிகாவும் சொல்ல முடியாது.

  எங்காவது ஒரு மாக்கனை கட்டி அவனுக்கு ஆக்கி போட்டால் அதுதான் பேறு என்று நீங்கள் நினைக்கலாம், உங்களை போன்றவர்களுக்கு ஏமாறும் பெண்கள் நினைக்கலாம். ஆனால் அந்த ஆணாதிக்க உலகம் முடியப்போகிறது.

 2. Man சொல்கிறார்:

  வேற என்ன எல்லாம் சல்லிக்காகத்தான். மேலும் சினிமா என்பது ஒரு விசிடிங்க்கார்ட் போல, அப்போதான் கட்டிகிட யாராவது “தொழில் அதிபர்” வருவாரு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: