திமுகவினருக்கு ஒரு பாட்டு டெடிகேட்

சமீபத்தில் சென்னையிலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றிருந்தோம். மார்க்கெட் வாசலில் நின்று வசூல் செய்து கொண்டிருந்த ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்து வந்தார். “டேய் எங்கள் ஆட்சிடா, என்னா ஆட்டம் போட்டீங்க?, காசு கீசு கேட்டே” என்று ஒற்றை விரலை நீட்டி, முழி முழித்து மிரட்டி விட்டுச் சென்றார். பயல் எதுவும் பேசாமல் சோகமாய் சென்று அமர்ந்து விட்டான்.

ஈகோவைத் தூண்டி விட்டது திமுகவினர் இந்த அதோகதி தோல்விக்குக் காரணம். என் பிள்ளை ஆங்கிலத்தில் பேசுகிறான், என் பிள்ளை அந்த பிரைஸ் வாங்கி இருக்கிறான் என்று சக மனிதர்களிடமிருந்து தன்னையும், தன் பிள்ளைகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் “ஈகோயிசம்” கொண்டவர்கள் தமிழர்கள். அதுமட்டுமா தகர டப்பா காரை அந்தஸ்தின் அடையாளமாய் காட்டிக் கொண்டு, கோடிகளில் செலவழித்து தெருவில் ஓடவிடும் அடிமுட்டாள் மடையர்கள் என்ற ஈகோ நோய் பிடித்தவர்கள் உலகெங்கும் 98 சதவீதம் இருக்கின்றார்கள். தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்காமல், தன்னைப் பிறர் ஒசத்தியாகப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே வாழும் மக்களின் அடிமனதில், பொறாமையைக் கிளப்பி விட்டார் கலைஞர்.

எப்படி ?

உலக மக்களின் விருப்பமான “சினிமா”வில் தன்னையும், தன் குடும்பத்தையும் இறக்கி விட்டு, எவரையும் திரைப்படத்தில் நடிக்க விடாமலும்,  தன் பேரக்குழந்தைகளை ஹீரோக்களாய் நடிக்க வைத்தும், தமிழக திரையரங்குகளில் 1700 அரங்குகளை மிரட்டியே தங்களின் கைக்குள் கொண்டு வந்ததும், தமிழ் சினிமா என்றதும் “ திமுகவின் குடும்பம்” என்று மாற்றியதும் மக்களின் மனதுக்குள் பொறாமை உணர்வினை ஏற்படுத்திவிட்டது. பொங்கி எழுந்தவர்கள் குத்து குத்து எனக் குத்தி விட்டார்கள். இனி எங்கிருந்தெல்லாமோ குத்துக்கள் கிளம்பும். தாக்குப்பிடிக்க வேண்டும்.

அனைத்து திமுகவினர் மறந்து போன ஒரு பாடலை இங்கு அவர்களுக்கு டெடிகேட் செய்கிறேன்.

– பஞ்சரு பலராமன்

One Response to திமுகவினருக்கு ஒரு பாட்டு டெடிகேட்

  1. bandhu சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. கருணாநிதியின் பேரன்கள் இதுவரை கிட்ட தட்ட ஐம்பது படங்கள் தயாரித்தார்கள் என்று வைத்துக்கொண்டால், அதை எடுக்க செலவு செய்த ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது? ஒரு பக்கம் நான் ரொம்ப சாதாரணமானவன் என்று வசனம் பேசிவிட்டு இந்த அளவு பிரம்மாண்டமான வளர்ச்சி எல்லோர் கண்ணையும் உறுத்தியதன் விளைவே இப்படி ஒரு தோல்வி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: