வாழ்த்துக்களும் அன்புக்களும்

இந்தத் தேர்தலில் வெற்றிக் கனியை பறித்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லும் நேரத்தில் அவர்களுக்கு நினைவூட்டலாய் ஒன்றினைச் சொல்வது கடமையாகிறது. கடந்த காலம் போல இந்தக் காலங்கள் இல்லை. சிறிய தவறு செய்தாலும் உலகெங்கும் அது சென்று சேர்ந்து விடும் வகையில் இன்றைய டெக்னாலஜி இருக்கிறது. மக்களிடம் எம்யெல்லேக்கள் நேரடி தொடர்பு வைத்திருத்தல் மிக முக்கியம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் கரூர் அதிமுக எம்யெல்யே செந்தில் பாலாஜியைப் பற்றி ஏற்றுமதி செய்து வரும் நண்பர் ஒருவர் சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். ஆக்சிடென்டில் இறந்து போன(????) வாசுகி முருகேஷன் திமுகவில் பெரும் சக்தியாய் இருந்தாராம். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட செந்தில் பாலாஜி (கடந்த தேர்தலில்) ஒவ்வொருவரிடம் வணக்கம் போட்டே வென்றாராம். வென்ற உடன் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கையேட்டினை வழங்கி இருக்கிறார். அதில் சில முக்கியமான தொடர்பு எண்களைத் தந்திருக்கிறார். பஸ்ஸில் சென்று வருவாராம். எவர் அழைத்தாலும் உடனடி ஆஜராகி விடுவாராம்.இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறாராம். இவரை அமைச்சராக்கினால் கரூர் ஜொலிக்கும் என்கிறார். இவரைப் போன்று மக்களோடு மக்களாய் இணைந்திருத்தல் இன்றைய மக்கள் பணியாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

திமுகவில் அமைச்சர்களாய் இருந்தவர்களின் இன்றைய கதியை நினைத்துப் பாருங்கள். அதுமட்டுமா, திமுகவினர் பிடுங்கிய சொத்துக்களை திரும்ப பிடுங்கி மக்களிடமே ஒப்படைப்பேன் என்று அம்மா ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு ஊழல் அமைச்சர்களும் இனி படாத பாடுபடுவார்கள் என்று நம்பலாம்.

இது போன்ற நிலை உங்களுக்கு வரவே வேண்டாம். மக்களுடன் நேரடித்தொடர்பில் இருந்தாலே பெரும்பாலான விஷயங்கள் உங்களின் கவனத்திற்கு வந்து விடும். மக்களின் அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. அவற்றில் 50பெர்சண்டேஜ் தீர்த்து வைத்தாலே போதுமானது. தொடர்ந்து நீங்கள் மட்டுமே அத்தொகுதியின் நிரந்தர எம்யெல்லே ஆக இருக்கலாம். மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.

தோல்வியடைந்த நண்பர்களுக்கு எனது அன்பினையும், ஆதரவினையும் தெரிவிக்கிறேன். வெற்றியும் தோல்வியும் அரசியலில் சகஜம். இந்தத் தோல்வி ஏன் வந்தது என்பதை ஒரு நிமிடம் யோசித்து அதற்கேற்ற முடிவினை எடுத்தாலே போதும். இன்று உங்களை விட்டு ஓடிய வெற்றி நாளை உங்கள் வீட்டின் வாசல் முன்னே வரும். ஆகவே வரக்கூடிய வெற்றிக்காக இப்போதே உழைக்க ஆரம்பியுங்கள்.

– அனாதி

வாசகர்களுக்கு குறிப்பொன்று : பஞ்சர் எழுதும் பதிவினையும், நான் எழுதும் பதிவினையும் குழப்பிக் கொள்ள வேண்டும். அது பஞ்சரின் தனிப்பட்ட பதிவு.

One Response to வாழ்த்துக்களும் அன்புக்களும்

  1. Vadugapatty சொல்கிறார்:

    Thanks for sharing info about Senthil Balaji, whatever you said are true. He cam from middle class family, very simple person, one of best MLA, ADMK ever got since 2001. Anyone can reach him at any time, that’s his winning strategy. Today i heard he will be a next Transport Minister, all the best for him and i’m sure he will do his best for people of Karur and Tamilnadu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: