மஞ்சள்துண்டின் மனசு – உணவே மருந்து

அன்பு நண்பர்களுக்கு, மஞ்சள் துண்டின் மனசு என்கிற தொடர் மூலமாக சில விஷயங்களைச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் ஹோட்டல் வேலைகள் கூடி விட்டதால் எழுத இயலவில்லை. இன்றைக்கு மிக முக்கியமான உணவு பற்றிய சில விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவரிடம் செல்வதை நிச்சயம் தவிர்க்கலாம்.

அரிசி உணவு நமக்குப் போதுமான கொழுப்புச் சத்தினை தந்து விடுகிறது. அதனால் நம் சமையலில் சேர்க்கப்படும் எண்ணெய் மேலும் அதிக கொழுப்பாய் சேர்ந்து விடுகிறது. ஆகவே முதலில் சமையலில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். எண்ணெய் தான் “மாரடைப்புக்கு” காரணம் என்று சாஓல் அமைப்பினர் சொல்லுவார்கள். எண்ணெயில் மிகச் சிறந்தது “ தண்ணீரே” என்றும் சொல்லுவார்கள். கிராமப்புறங்களில் சமைக்கும் போது எண்ணெய் சட்டியில் காட்டப்படும். ஊற்றப்படாது.

எண்ணெய் இல்லாமல் எப்படி சமைப்பது என்று குழம்ப வேண்டாம். எண்ணெய் சேர்த்து சமைக்கப்படும் உணவில் மூன்று டீஸ்பூன் எண்ணெய்க்குப் பதிலாக கால் டீஸ்பூன் சேருங்கள். டேஸ்ட் முக்கியமா இல்லை ஆரோக்கியம் முக்கியமா என்பதை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள்.  கடுகு, வெந்தயம், வெங்காயத்தை மெல்லிய தீயில் பொறித்து, பிறகு தேவையான தண்ணீர் சேர்த்துச் சமைக்கலாம். திருமணமானவர்கள் மனைவியிடம் இதைச் சொல்லுங்கள். டேஸ்ட்டாக சாப்பிட்டே பழக்கப்பட்டவர்களுக்கு “மாரடைப்பு” காத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அரிசி, கோதுமை, ராகி போன்றவை மாவுப்பொருட்கள்தான். கோதுமை, ராகி ஜீரணமாவதற்கு(தமிழ் வார்த்தை என்ன?) நேரமாகும் என்பதால் பசியைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் கோதுமை சாப்பிடச் சொல்வார்கள். மற்றபடி அரிசிக்கும், கோதுமைக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. அரிசியில் பாலீஸ் செய்யப்பட்ட அரிசி சாப்பிடுவதை முதலில் தவிருங்கள். உடம்பில் கொழுப்புச் சேராமல் இருந்தாலே 90 சதவீத பெரிய நோய்கள் வராது. பாலீஸ் செய்யப்பட்ட அரிசியில் நார்ச்சத்து இருக்காது. அப்படியே கொழுப்பாக மாறி விடும். பாலீஸ் செய்யப்படாத அரிசி மார்க்கெட்டில் கிடைக்கும்.

“ரேஷன் அரிசி” தான் அரிசியில் சிறந்த அரிசி என்பதை அறியவும்.

கலோரி, கிலோரி என்றுச் சொல்லுவார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.  இந்தக் கலோரி கணக்கெல்லாம் வைத்துக் கொண்டு சாப்பிட முடியாது. ஆனால் இதற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. அது என்ன? என்பதை அடுத்த பதிவில் சொல்லுவேன். ஒரே பதிவில் எழுதினால் குழம்பி விடுவீர்கள். இன்றைய பதிவில் ”சாப்பாட்டில் எண்ணெய் உபயோகத்தைக் குறையுங்கள்” என்று சொல்லி இருக்கிறேன்.

எண்ணெய் குறைத்தால் என்ன ஆகும்? உடம்பில் கொழுப்புச் சேராது. பிரஷர் வராது, சர்க்கரை வராது, உடல் பருமன் நோய் வராது, மாரடைப்பு வராது. இந்த வராதுக்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால் வீட்டிற்கு நால்வர் கொண்ட குடும்பம் என்றால் இரண்டு லிட்டர் எண்ணெய்க்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது.

ஒரு ஆளுக்கு மாதம் “ அரை லிட்டர்” எண்ணெய் போதுமானது என்பதைக் கவனத்தில் கொள்க. முக்கியமாக கணிணியில் வேலை செய்வோர், உடலுழைப்பு அதிகமில்லாதோர் “அரைலிட்டரே” பயன்படுத்தவும். பிறர் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

எந்த மருத்துவரும் இந்தப் பக்குவத்தைச் சொல்லுவதில்லை. காரணம் ‘வரும் மானம்’ போய் விடும் என்பதால். சாஓல் என்றுச் சொன்னேன் அல்லவா அது என்ன என்பதை கீழே இருக்கும் இணைப்பில் பார்த்து விடுங்கள்.

http://www.saaol.com/healthier_lifestyle.php

– ஸ்ரீ

குறிப்பு : தொடர்ந்து எழுத எனக்கு தூண்டுதல்கள் தேவை. ஆகையால் நண்பர்கள் தங்கள் ஆதரவை பின்னூட்டம் வழியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனாதி, குஞ்சு, பஞ்சு போன்றவர்களைப் பற்றி இங்கு யாரும் எதுவும் பேசக்கூடாது. மிஸ்டர் குஞ்சுவை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பதையும் இவ்விடத்தில் சொல்லி விடுகிறேன். நான் எப்போதும் நேர்மையாக நடக்க எத்தனிப்பவன். 

8 Responses to மஞ்சள்துண்டின் மனசு – உணவே மருந்து

 1. Parthiban சொல்கிறார்:

  Thanks for the good article.

 2. Thendral சொல்கிறார்:

  ராகிக்கு தமிழில் “கேப்பை” அல்லது “கேழ்வரகு” என்று பெயர்…

 3. ராஜன் சொல்கிறார்:

  நல்ல பதிவு.
  தொடருங்கள் உங்கள் சேவையை..
  எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு!

 4. jagan சொல்கிறார்:

  Good writing. Very useful. Please give more.

  -Jagan

 5. Dinesh சொல்கிறார்:

  ஜீரணம் – செரித்தல்

  மற்றபடி நல்ல பயனுள்ள மருத்துவப் பதிவு… தொடரட்டும் தங்கள் பதிவுகள்…

 6. சீனிவாசன் சொல்கிறார்:

  தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே! உற்சாகத்தை இழக்க வேண்டாம்.

 7. babu சொல்கிறார்:

  ராகி = கேழ்வரகு‍

  தங்களின் கனிவான அறிவுரைக்கு‍ நன்றி. நாளையிலிருந்து‍ இல்லையில்லை இன்றிலிருந்தே கடைபிடிக்க ஆயத்தமாகிவிட்டேன்.

  நன்றி Sri.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: