ஸ்பெக்ட்ரம் கனிமொழி – ஊழலோ ஊழல்

ஊரை அடித்து உலையில் போடுவது என்றால் இதுதான். தந்தைக்கு தான் ஒருபோதும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கிறது கீழே இருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி. கனிமொழி கலைஞரின் மகள் என்பதாலேயே அரசியலுக்குள் வந்தவர் என்பதைத் தவிர வேறேதேனும் தகுதி இருக்கிறதா அவருக்கு. தகுதியும், திறமையும் அற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை ஸ்பெக்ட்ரத்தில் நாடே பார்த்து வருகிறது. அதுமட்டுமா, கனிமொழியின் அம்மா ராஜாத்தி கவலையாய் இருக்கின்றாராம். விடமாட்டார்களா என்றெல்லாம் பேசுகின்றாராம் என்று ஜூனியர் விகடனில் செய்தி வெளியாகி இருக்கிறது. அன்றைக்கு கோடி கோடியாய் ஊழல் செய்து, கொள்ளையடித்த போது கவலை வரவில்லையா? ஏன் விடவேண்டுமா இவர்களை? நாட்டுக்கு நல்லதா செய்தார்கள்? பட்டும், பகட்டும், ஆடம்பரமும், அகந்தையும் கொண்டு மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கவில்லையா இவர்கள்” தெய்வம் நின்று கொல்லும். அது இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

– பஞ்சரு பலராமன்

தமிழ் மையத்திற்கு சிக்கல்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளைக் காப்பாற்ற சி.பி.ஐ. முயற்சிப்பதாக’ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவால் பரபரப்பு ஏற்ப ட்டுள்ளது.தூங்கி வழிந்து கொண்டிருந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையைத் தட்டி எழுப்பியது உச்ச நீதிமன்றம்தான்.

இந்நிலையில், ‘நீதிமன்ற மேற்பார்வையில் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும்’ என்று பொதுநல வழக்குகளுக்கான அமைப்பு சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த்  பூஷண் வழக்குத் தொடர்ந்தார். இதன் அடிப்படையிலேயே, பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து, ஸ்பெக்ட்ரம் வழக்கு சீராக நடப்பதில், உச்ச நீதிமன்றம் முக்கியப் பங்கு  வகித்து வருகிறது.

இந்நிலையில், பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்துள்ள புதிய மனு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மனுவின் மூலம் ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய  புள்ளிகள் காப்பாற்றப்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வியாழனன்று தாக்கல் செய்துள்ளஅந்த மனுவுடன் சேர்ந்து இரண்டு முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்கிறார் பிரசாந்த் பூஷண்.

ஒரு ஆவணம், சஹாரா நிறுவனம் தொடர்பானது.

ஷரத் சவுத்ரி என்ற அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர், அவரது உயர் அதிகாரிக்கு அக்டோபர் 2010-ல் ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், ‘‘உபேந்திர ராய்  என்பவர் தன்னை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரிடம் முக்கிய தகவல்கள் இருக்கும் என்று நம்பி அவரை சந்தித்தேன்.  என்னை அவர் எனது அலுவலக த்தில் சந்தித்த போது, சஹாரா டி.வி.யின் செய்தி இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்  கொண்டார்.

‘டாடா’ குழுமத்திற்கு தரகராக இருக்கும் நீரா ராடியாவோடு தனக்கு 12 வருடங்கள் பழக்கம் என்றும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவருக்கு உதவி செய்யுமாறும், அதற்கு  பிரதிபலனாக 2 கோடி வரை லஞ்சமாகக் கொடுக்கப்படும்’’ என்று தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தகவலை ஷரத் சவுத்ரி தனது உயர் அதிகாரிகளுக்குத்  தெரியப்படுத்தியதும், அத்தகவலை சி.பி.ஐ.க்கு அனுப்பி வைத்தது அமலாக்கப் பிரிவு.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில் இதைக் குறிப்பிட்ட பிரசாந்த் பூஷண்,  இத்தகவல் மீது கடந்த 6 மாதங்களாக எவ்விதமான விசாரணையும்  நடைபெறவி ல்லை என்று தனது கவலையைத் தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சஹாரா குழுமத்தின் இயக்குநர், உபேந்திரா ராய்க்கு, ஸ்பெக்ட்ரம் விசாரணையில் தலையிட முயன்றதாக  நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.  இந்த சஹாரா நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு, 150 கோடி  வழங்கியுள்ளதால், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரசாந்த் பூஷண்  தாக்கல் செய்த மற்றொரு ஆவணம், தமிழகம் தொடர்பானது.  மற்றொரு முக்கியமான தடயம் கிடைத்தும், அந்தத் தடயத்தை உரிய முறையில்  விசாரிக்காமல், சி.பி.ஐ. காலம் தாழ்த்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் பிரசாந்த் பூஷண்.

கனிமொழி ஆண்டுதோறும் நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் ஏராளமாக நன்கொடை வழங்கியிருப்பதை அந்த  ஆவணங்கள் மூலம் சுட்டிக் காட்டியிருந்தார் பிரசாந்த் பூஷண்.

‘‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த இந்தியா புல்ஸ் நிறுவனம், ஜனவரி 2008-ல் 50 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறது.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற  நிறுவனங்களான, ரிலையன்ஸ், ஷ்யாம் டெலிகாம், யூனிடெக், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் பங்குகளை வாங்கிய, ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனம் ஆகியவை 5 லட்சம் முதல்  50 லட்சம் வரை நன்கொடை வழங்கியுள்ளன.

இதுதவிர, டாடா நிறுவனம் தன் பங்குக்கு 25 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஜனவரி 2008-ல், நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு,  தொலைத் தொடர்புத் துறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகைகளை வழங்கியிருப்பதுபெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி, தமிழக அரசுக்கு இலவச சைக்கிள் கொள்முதலில் பங்கெடுத்துள்ள சைக்கிள் தயாரிக்கும் ஒரு நிறுவனம், தமிழக அரசுக்கு சத்து மாவு  வழங்கும் நிறுவனங்களும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்கியுள்ளன.

கலைஞர் கருணாநிதி ட்ரஸ்ட் என்ற பெயரிலும் 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்காக வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க உதவி செய்ததாகக்  கூறப்படும் ஒரு சிமெண்ட் நிறுவனமும் ஒரு பெரும் தொகையை வழங்கியுள்ளது.

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இந்த ஆவணம் அம்பலப்படுத்துகிறது’’ என்று பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்து ள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் அத்தனையும், டிசம்பர் மாதத்தில் தமிழ் மையம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியபோதே கிடைத்திருந்தாலும், இது தொடர்பாக,  இன்றுவரை சி.பி.ஐ. விசாரணை நடத்தாமல் இருப்பதாகவும், அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் மையம் என்ற பதிவு பெற்ற ட்ரஸ்டில், கனிமொழி ஒரு இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. கனிமொழி முன்னின்று, சென்னை சங்கமம்  நிகழ்ச்சியை நடத்தி வருவதால் அந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ் மையத்தில் சி.பி.ஐ. சோதனைகள் நடத்திய பிறகு நடைபெற்றதால், தமிழக அரசு, சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு  எவ்வித நன்கொடையும் வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, ‘தமிழக அரசு சார்பாக எந்த நிதியும், தமிழ் மையத்திற்கு கொடுக்கப்படாது’ என்று உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, மனுவை  தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதியே தொடங்கி வைத்து,  கனிமொழிக்கு ஆதரவை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் டி.வி.க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனம் கொடுத்த 200 கோடி ரூபாயை கடன் என்று கலைஞர் டி.வி. தரப்பில் கூறினாலும், சி.பி.ஐ. இந்தப் பணத்தை  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்கு கொடுக்கப்பட்ட லஞ்சமாகவே கருதித்தான் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

இந்நிலையில், அதற்கு முந்தைய சங்கமங்களில் இத்தனை பெரிய நன்கொடைத் தொகையைக் கொடுக்காமல், தமிழக நாட்டுப்புறக் கலைகளை வளர்ப்பதில், வட இந் தியாவைச் சேர்ந்த தொலைத்

தொடர்பு  நிறுவனங்கள் இத்தனை ஆர்வத்தைக் காட்டியிருப்பது இயல்பான விஷயம் அல்ல.

லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி, கனிமொழி முன்னின்று நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு சட்ட விரோதமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், கொடுத்தி ருக்கும் பெரிய நன்கொடையை லஞ்சமாகவே சி.பி.ஐ. கருதினால், கனிமொழி மீது மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

கலைஞர் டி.வி. மற்றும் தமிழ் மையம் ஆகிய இரண்டிலும், கனிமொழி முக்கியப் பங்கு வகித்திருப்பதையும், இரண்டு நிறுவனங்களுமே, தொலைத் தொடர்பு நிறுவனங்களே £டு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும், விளக்குவது கனிமொழிக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜெகத் கஸ்பரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் அலுவலகத்தில், “ஃபாதர் இல்லை.  வந்ததும் உங்களைத் தொடர்பு கொள்வார்’’  என்றனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வருமான வரித் துறையின் விசாரணை அறிக்கையைப் பார்வையிட்ட உச்ச நீதிமன்றம், அந்த விசாரணை மந்தகதியில் நடைபெற்றுள்ளதாகக்  கண்டனம் தெரிவித்துள்ளது.

முக்கிய நபர்கள் பாதுகாக்கப்படுவதாக பிரசாந்த் பூஷண் கவலை தெரிவித்ததற்கு, “கவலைப்படாதீர்கள்.  யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரம், பதவி படைத் தவர்களானாலும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என்று உத்தரவாதம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

விசாரணையின் போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி, டாடா நிறுவனத்தின் ரத்தன் டாடா, எஸ்ஸார் குழுமத்தின் சசிகாந்த் ருய்யா ஆகியோர் பாது காக்கப்படுவதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்துக்கு, ‘‘இந்நிறுவனங்கள் தொடர்பான புலனாய்வு இன்னும் முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார் சி.பி.ஐ. தரப்பில்  ஆஜரான பிரபல வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்.

 சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வேணுகோபால், டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் பணம் தமிழ் மையம் மூலம் ‘வெள்ளை’யாக்கப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

இதன்பிறகு, தமிழ் மையம் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையில் எடுப்பதற்கு முன், முந்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறதாம் சி.பி.ஐ.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: