40,000 கோடி கிரிக்கெட் சூதாட்டம் – முட்டாள்கள் ராஜ்ஜியம்

எங்கள் பிளாக்கில் கிரிக்கெட்டை எதிர்த்து எழுதியிருப்போம். கிரிக்கெட் சூதாட்டம் எங்கெங்கு நடைபெறுகிறது என்றும் எழுதி இருந்தோம். அதைப் பற்றிய பழைய பதிவுகள் கீழே.

1) கொடூரத்தின் விளையாட்டு

2) இந்தியாவில் நடந்த மேட்ச் ஃபிக்சிங் என்னவாயிற்று?

இதோ கடந்த மாதம் நடைபெற்ற உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெற்றதாக ‘ Sports Illustrated India’ என்னும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. உடனே பிசிசிஐ ஆதாரத்தை தா என்று கேட்கிறது. பத்திரிக்கையும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்லி இருக்கிறது.

எனது நண்பர்களில் பலர் உலகக் கிரிக்கெட் போட்டியின் போது எந்த வேலையையும் பார்க்காமல் டிவியின் முன்னாலே உட்கார்ந்திருந்தனர். அதுமட்டுமா போட்டி நடக்கும் ஸ்டேடியங்களில் டிக்கெட் வாங்க அடிதடி நடந்தது. ஸ்டேடிய சீட்டுக்களில் முக்கால்வாசிப் பங்கு பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்கள் டிவியில் பார்க்கும் படி விரட்டப்பட்டார்கள். அப்போதுதான் சாட்டிலைட் உரிமையை அதிக விலைக்கு விற்க முடியும். இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத படித்த அடி முட்டாள்கள் நம் இந்தியாவில் மட்டும் அல்ல உலகெங்கும் இருக்கின்றார்கள்.

கோடிக்கணக்கான மக்கள் கிரிக்கெட்டை ரசிக்கும் படி தள்ளப்படுகின்றார்கள். கார்ப்பொரேட் கம்பெனிகளின் சித்து விளையாட்டில் மக்களின் ஆர்வம் பகடைக்காயாக உருட்டப்பட்டு டென்டுல்கர்கள், தோனிகள் உருவாக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கென அடையாளத்தை மீடியாக்கள் உருவகப்படுத்துகின்றன. பிரபல்யம் என்று விளையாட்டு வீரர்களை வைத்து மீடியாக்கல் மக்களை மூளைச் சலவை செய்கின்றன. அதன் காரணமாய் கிரிக்கெட் விளையாட்டு உலகெங்கும் பிரபல்யபடுத்தப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் ”வருவாய்”. அதுமட்டுமல்லாமல் ”மனிதர்களை ஏலம்” எடுக்கும் முறையையும் கிரிக்கெட் உலகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. எகிப்தில் அடிமைகள் வம்சம் உருவானது போல,  கிரிக்கெட்டில் அடிமைகள் வம்சம் உருவாக்கப்படுகிறது. ஜன நாயக நாடு என்று இந்தியாவில் எவனும் பேசினால் அவனைப் பட்டயக் கிளப்ப வேண்டும். காசுக்காக தன்னையே விற்கும் விலைமாதுவும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் ஒன்றாகிவிட்டார்கள். கிரிக்கெட் என்பது இன்றைக்கு விபச்சாரத்தொழிலாய் மாறி விட்டது.

கார்ப்பொரேட் நிறுவனங்கள் “குளிர் சாதன நவீன ஹோட்டல் அறைகளுக்குள்” புக்கிகளைக் கொண்டு சூதாட்டங்களைத் திறம்பட நடத்துகிறார்கள். தமிழக பத்திரிக்கைகாரர்களில் ஒருவர் ஒவ்வொரு மேட்சின் போது கோடிகளைக் குவிக்கின்றார் என்று ஹோட்டலின் சர்வர்கள் டீக்கடையில் பேசிக் கொண்டார்கள் என்று நண்பர் சொன்னார்.

இதெல்லாம் ஏன்? படித்த முட்டாள்களும், படிக்காத முட்டாள்களும் இருப்பதால் தானே ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றுகின்றார்கள். கிரிக்கெட் பார்ப்பவர்கள் எல்லாம் அடிமுட்டாள்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். யாரால் மறுக்க முடியும்???? சொல்லுங்கள் பார்ப்போம்.

– பஞ்சரு பலராமன்

4 Responses to 40,000 கோடி கிரிக்கெட் சூதாட்டம் – முட்டாள்கள் ராஜ்ஜியம்

 1. Karthik சொல்கிறார்:

  I Accept…!!

 2. Pondumani சொல்கிறார்:

  அது யாரு ? கோடிகளை குவிக்கும் தமிழக பத்திரிகைகாரர் ?
  அயோக்கிய சிகாமணி அந்துமணியா ?

 3. Muthukumar சொல்கிறார்:

  Same opinion!!!

 4. babu சொல்கிறார்:

  படித்த முட்டாள்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள் என்ற தங்களின் செய்தி எனக்கு‍ மிகப் பெரிய ஆறுதல். நான் முட்டாள்கள் நிரம்பிய தேசத்தில் வாழவில்லை என்று‍

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: