குட்டிகளுடன் கும்மாளம் – உண்மைச் சம்பவம்

வட நாட்டில் இருக்கும் எனது நண்பனின் அழைப்பை ஏற்றுச் சென்றேன். நண்பன் ஒரு மினிஸ்டரின் மகன். அவன் அப்பா மினிஸ்ட்ராய் இருப்பது எனக்கு லேட்டாகத்தான் தெரியும். நானும் அவனும் ஐபிஎம்மில் படித்த போது நண்பர்கள் ஆனவர்கள். படிக்கும் போது, அவனைப் போன்ற தன்மையானவனைப் பார்க்கவே முடியாது.

நான் சென்ற ஊர் அந்த ஸ்டேட்டின் தலைநகரம். அங்கு ஹோட்டல்கள், பப்புகள் என்று இரவில் ஒரே அதகளமாய் இருக்கும். விடிய விடிய மன்மதக் கூத்துகளை அரங்கேற்றுவார்கள். விதவிதமாய் பெண்களும், ரக ரகமாய் ஆண்களும் போதையில் பப்புகளின் இருட்டு மூலைக்குள் ஜோலிகளைப் பார்ப்பதும் உண்டு. பெரும்பாலும் இந்த மாதிரி பப்புகள் ஹோட்டல்களில் தான் இருக்கும். ஏனென்றால் ”அந்த மூடு” அதிகமானால் அவசரத்திற்கு தள்ளிக் கொண்டு போக அறை கிடைக்குமல்லவா? ஹோட்டல்காரர்கள் அந்த மாதிரி அஜால் குஜால் பேர்வழிகளிடம் தாளித்து விடுவார்கள்.

காசு போகிறதே என்று எவரும் கோவப்படுவதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. மன்மத ரசம் தலைக்கேறினால் அதை சரி செய்வதற்கான மனிதர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், அவருக்கு வயது கிட்டத்தட்ட 70 இருக்கும். இளம் பிஞ்சுகளாய் குட்டிகளைக் கூட்டி வந்து ஜோலி பார்ப்பார். அந்தக் குட்டிகள் ஒவ்வொருவருக்கும் காசால் மழை பொழிய வைப்பார். அப்படி காசு மழையில் நனைந்த ஒரு குட்டியை நான் சமீபத்தில் சந்தித்த போது அவள் மொபைல் கேமிராவில் அந்தக் கிழட்டு மன்மத ராசாவின் லீலைகளை ரகசியமாய் படம் பிடித்ததைக் காட்டினார். ”அடியே குட்டி, இதை வெளியில் சொல்லி விடாதேடி. அவன் உன்னை நடு ரோட்டில் வைத்து கொன்று போட்டு விடுவான்” என்று சொல்லி, அந்தப் படத்தை நைசாக லவட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

சரி நம்ம கதைக்கு வருவோம்.

மாலையில் வீட்டிலிருந்து இருவரும் பப்புக்கு கிளம்பினோம். வழியில் மூன்று குட்டிகளை ஆடியில் ஏற்றிக் கொண்டான். கருப்புக்கலர் ஆடி பாம்பு போல ஊர்ந்தது. அவன் அப்பாவின் ரகசிய பண்ணை வீட்டுக்குச் சென்றவன் வெளி நாட்டு சரக்குகளை ஏற்றிக் கொண்டு இரண்டு குட்டிகளுடன் அறைக்குள் நுழைந்து கொண்டான். தனித்து விடப்பட்ட நானும், இன்னொரு குட்டியும் ஹாலில் ஷோபாவில் அமர்ந்திருந்தோம். அதைத் தொடர்ந்து நான் என்ன செய்தேன் என்பதெல்லாம் எழுத ஆரம்பித்தால் இது ஒரு செக்ஸ் கதை போல ஆகிவிடும் என்பதால் அதையெல்லாம் சென்ஸார் செய்து விடுகிறேன்.

மட்டுப்படுத்த இயலாத போதையுடன் வெளியில் வந்தார்கள் இருவரும். வாடா பப்புக்குச் சென்று ஆட்டம் போட்டு விட்டு வருவோம் என்றுச் சொன்னான். நான் தயங்கினேன். நீயே காரை ஓட்டு என்றான். நால்வரும் பப்புக்குச் சென்றோம். அது மிகப் பிரபலமான ஹோட்டல். ஹோட்டலின் வாசலுக்குள் நுழைந்தோம். காரில் இருந்து இரண்டு பக்கமும் குட்டிகளை அணைத்துக் கொண்டே இறங்கினான். ஹோட்டலின் ரிசப்ஷனுக்குச் சென்றவன்” ஓடிச் சென்று பப் அனுமதி வாங்கி வா” என்றுச் சொன்னான். ரிசப்ஷனிஸ்ட் பையன் ”நாங்கள் அதை வேறொருவருக்கு லீசுக்குக் கொடுத்து விட்டோம். என்னால் முடியாது” என்றுச் சொன்னான். அந்தப் பையனை காச் மூச் என்று கத்தியவன் கோபமாய் வெளியே வந்தான். சத்தம் ஓவராய் விட்டு, போலீசாருக்குப் போன் போட்டான். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று ஒரே ரகளை. தொட்டிகள், அலங்காரம் எல்லாம் உடைத்தெறிந்தான். கொஞ்ச நேரத்தில் போலீஸ்காரர்கள் வர, அதற்கு ஹோட்டல்காரர் பத்திரிக்கைகளுக்கு போனைப் போட, அவர்களும் வர போலீஸ்காரர்கள் பத்திரிக்கைக்காரர்களை அடித்து விரட்டினார்கள். அந்த அதகளத்திலும் போலீஸ்காரர்கள் நண்பனைச் சமாதானம் செய்து, வேறோரு பப்பினைச் சொல்லி அங்கே செல்லும் படி கெஞ்ச,”குஞ்சு வண்டியை அங்கே விடு” என்றுச் சொன்னான். நால்வரும் அங்கேச் சென்றோம். விடிய விடிய கூத்தை அரங்கேற்றி விட்டு விடிகாலையில் வீட்டிற்கு வந்தோம்.

அப்போது அவன் அப்பாவை அவரின் பிஏ வேட்டி இல்லாமல் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார். அவன் அம்மா டூர் சென்றிருந்தார்.

மதியம் 12 மணிக்கு பெட்டில் இருந்து எழுந்தவன் நேராக அப்பாவிடம் சென்றான். உள்ளே விட மறுத்த ரிஷப்ஷனிஸ்ட் பற்றியும் அந்த ஹோட்டல் பற்றியும் அப்பாவிடம் முறையிட அடுத்த நொடி அரசு அலுவலர்கள் அனைவரும் அந்த ஹோட்டலில் கூடினார்கள். கேட் கட்டப்பட்டது சரியில்லை என்று ஹோட்டலின் முன்னால் இருந்த சுவற்றை இடித்துத் தள்ளினார்கள்.  ஹோட்டலுக்குள் இருந்தவர்கள் அனைவரும் அலறினார்கள். அதைப்பற்றி எவரும் கண்டு கொள்ளவே இல்லை. விதிமுறைப்படி கட்டப்பட்ட ஹோட்டல் சுவர், கேட் இவற்றினை அரசாங்க ஊழியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

குட்டியோட டான்ஸ் ஆட முடியவில்லை என்பதற்காக ஒரு மினிஸ்டரின் பையனுக்காக ஒரு அரசாங்கமே மக்களுக்கு எதிராய் நடந்து கொள்வதைக் கண்டு என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அடுத்த நாளே அவனிடமிருந்து பிரிந்து ஊருக்குக் கிளம்பி விட்டேன்.

சாகும் வரையிலாவது பதவியில் இருந்து விட வேண்டுமென்று ஏன் அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள் என்பதை அன்று கண்கூடாக நான் புரிந்து கொண்டேன். பதவி இருந்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் புரிந்து கொண்டேன்.

பதவி கிடைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த அரசியல்வாதிகள்.

இந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போரை நிகழ்த்த வேண்டும். அரசியல்வாதிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இந்தியா “அன்னா ஹசாரே” மூலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான வெளிச்சம் தான் “ அன்னா ஹசாரே”.

மக்கள் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் மயங்கி விடாமல் இருக்க வேண்டும். மயங்காமல் இருப்பார்களா?

– குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: