மஞ்சள் துண்டின் மனசு – புற்றுநோய்

அன்பு நண்பர்களே, கடந்த வாரம் எனது நண்பரின் அழைப்பின் பேரில் சென்னையின் பிரதான இடத்த்திலிருக்கும் அபார்ட்மெண்டிற்கு இருவரும் சென்றிருந்தோம். அங்கு பெரும் கோடீஸ்வரர் ஒருவரைச் சந்தித்தோம். என் தோள்மீது கை போட்டு, வெகு சகஜமாய் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நண்பரின் நண்பர் என்பதால் எனக்கு கொஞ்சம் சங்கோஜம் இருந்தாலும், என் நண்பரோ பேசிக் கொண்டிரு ஸ்ரீ என்றுச் சொல்லி விட்டு நாங்கள் உரையாடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கோடீஸ்வரருக்கு புற்று நோய் என்றுச் சொன்னார். ஆள் பார்க்க பளபளப்பு, மினுமினுப்புடன் வெகு களையான முகத்துடன், கிளீன் ஷேவுடன் ஹீரோ போலவே இருந்தார். பையனும், பெண்ணும் அமெரிக்க வாசம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால் என்ன பலன்? அனுபவிக்க உடம்பில்லை, தெம்பில்லை பிற எதுவும் இல்லை. வெறும் காகிதக் கட்டாய் வங்கியில் வட்டிக் காசு சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட பதினைந்து வருடமாய் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். ”எப்படி உங்களுக்கு இந்த நோய் வந்தது?” என்று கேட்டேன்.

”ஏசி” என்றார். ”பிறந்த நாள் முதல் இது நாள் வரையிலும் ஏசி இல்லாமல் இருந்ததே இல்லை” என்றார். அந்த ஏசி ஆக்சிஜனைக் குறைத்து விடுமாம். அது புற்று நோய் உருவாக ஏதுவாக இருப்பதால், உடலில் இருக்கும் ஒருவகை ஜீன் புற்று நோயை, குதி போட்டுக் கொண்டு வளர்க்க ஆரம்பிக்குமாம். டாக்டர் ”ஏசியில் இருப்பதைத் தவிருங்கள்” என்றுச் சொல்லி இருக்கிறார். சென்னை வெயிலில் எப்படி இருப்பார். அவரின் வீடு சில்லிட்டது. ”ஏசி இல்லாமல் என்னால் முடியவில்லை” என்றுச் சொன்னார்.

காசைக் கொட்டி, நோயை விலை கொடுத்து வாங்கி, மரண அவஸ்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு, இந்த நோய் விதியினால் வந்தது என்றா நினைக்கின்றீர்கள்? இல்லை இது அவரின் முட்டாள்தனத்தால் வந்தது.

நாமெல்லாம் வெளியூர் சென்றால் பாட்டிலில் அடைத்திருக்கும் தண்ணீரை வாங்கிக் குடிக்கின்றோமே அந்தப் பாட்டிலில் இருக்கிறது புற்று நோய்க்கான விதை. இதைப் பற்றிய கட்டுரை ஒன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருக்கிறது. தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

அன்பார்ந்த நண்பர்களே, உடம்பினைக் கோயில் என்றுச் சொல்வார்கள் முன்னோர்கள். சிறு வயதிலிருந்து உடம்பைப் பேணாமல், மனம் போன போக்கில் வாழ்வீர்கள் என்றால், பின்னாட்களில் நீங்கள் வாழ்க்கையை மரண அவஸ்தையோடு கழிக்க வேண்டி இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உணவில் எந்த உணவு உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

முக்கியக் குறிப்பு : நாளைக்கு பஞ்சு அண்ணாவின் குட்டிகளுடன் கும்மாளம் போட்ட கதை என்ற ஹாட் பதிவொன்றினை வெளியிடப் போகின்றாராம். உங்களிடம் சொல்லச் சொன்னார். சொல்லி விட்டேன்.

வாழ்க அன்போடு,

உங்கள் ஸ்ரீ

3 Responses to மஞ்சள் துண்டின் மனசு – புற்றுநோய்

 1. Pondumani சொல்கிறார்:

  Some cancers are caused by viruses.Recently researchers have found out that most oral cancers are due to human papiloma virus spread thru oral sex.
  Most people who got oral cancer, might have got it due to their oral sex activities than tobacco chewing.

  Same virus causes cervical cancer in women.

  http://oralcancerfoundation.org/hpv/

 2. Sankar சொல்கிறார்:

  Cancer is not an infection by any “Kirumi”. Please correct your understanding on Cancer.

  • அனாதி சொல்கிறார்:

   ஆரம்பகாலங்களில் புற்று நோய்க்கு காரணமென்ன என்பது புரியாமலே இருந்தது. ஏதோ ஒரு வைரஸ் கிருமித் தொற்றாகத்தான் புற்று நோய் பரவுகிறது என்று மருத்துவ உலகம் கருதி வந்தது. அதன் காரணமாய் கிருமி என்று எழுதி விட்டேன். சுட்டியதற்கு நன்றி. ஆனால் அதற்கான காரணங்களாய் இருக்கும் ஜீன்களை தற்போது தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ரத்தப்புற்று நோய்க்கு காரணமான லூக்கேமியாவை உருவாக்குவது ஒரு ஜீன் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். விரைவில் அதற்குண்டான அலோபதி மருந்தும் தயாராகி விடும். நன்றி சங்கர். -ஸ்ரீ

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: