மஞ்சள் துண்டின் மனசு தொடர் 1

அன்பார்ந்த வாசக பெருமக்களே! வணக்கம்.

அனாதி அண்ணாவின் ஹோட்டலுக்கு காஃபி பொடி சப்ளை செய்யும் ஸ்ரீ ஆகிய நான் இனிமேல் ஆன்மீக சம்பந்தமாக சிலவற்றை எழுதப் போகிறேன். அதற்குள்ளே ஆரம்பிச்சுட்டானுங்கடா அறிவுரை சொல்ல என்று நினைத்து விடாதேள்.

அறிவுரை சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கிறது? நானென்ன முதல்வர் கருணாநிதியா? (தலைப்பிற்கு பொருத்தமாய் வந்து விட்டதா?).

மஞ்சள் என்பது மங்களத்தின் அறிகுறி. பொம்மனாட்டிகள் மஞ்சளை துண்டாய் எடுத்துதான் அம்மிக் கல்லில் வைத்து அரைத்து எடுப்பார்கள்.

அந்த மஞ்சள் துண்டு இறைவனின் நெற்றியை அலங்கரிக்கப் போவதால் தன்னைத் தானே வருத்தி அம்மிக் கல்லால் அடிக்கும் வலியைப் பொறுத்துக் கொள்ளுமாம். மானிட ஜென்மங்கள் இறைவனின் முன்னே அடி தொழுது நிற்கும் போது இறைவனின் முகத்தில் திலகமாய் தெரியும் நம்மையும் ஜீவிக்கின்றார்களே என்ற சந்தோசத்தால் அம்மிக்கல்லால் படும் வலியையும் மறந்து விடுமாம்.

அந்த மஞ்சள் துண்டின் மனசு தான் இனி உங்களுடன் பேசப் போகிறது.

ஆசை காட்டி மோசம் செய்வோரைத் தொழும் உலகத்தார் வீணிலே துன்பத்தில் உழண்டு, வேதனையில் சிக்கி சிதறிப் போவார்கள். ஒரு ரூபாய்க்கு பத்து விலை சேர்த்து,  கடன் தருகிறோம் என்றுச் சொல்லி, ஆசையைக் காட்டி விற்று விட்டு, காசு வரவில்லை என்றவுடன் கூப்பாடு போட்டு, அடியாளை விட்டு அடிக்க வைப்போரை தொழிலதிபர்கள் என்று சொல்லும் உலகத்தார் துன்பக் கேணியில் உழண்டு வெந்து நொந்து செத்துப் போவார்கள்.

– ஸ்ரீ

One Response to மஞ்சள் துண்டின் மனசு தொடர் 1

  1. சுரேஷ் சொல்கிறார்:

    உங்கள் தொடர் சிறக்க வாழ்த்த வயதிலாதலால் வணகுகிறேன்!…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: