ஸ்பெக்ட்ரம் – சரத்பவார் அட்டூழியம்

இத்தனை நாளாக சும்மா இருந்து விட்டு, நேற்றைக்கு ஊழல் மன்னன் ஸ்பெக்ட்ரம் ராஜா ஜாமீன் கேட்டிருக்கிறார். ஏன் இத்தனை நாளும் ஜாமீனுக்கு முயலவில்லை என்பதை வாசகர்களின் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்களின் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்படவில்லையே ஏன்? தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யவில்லையே ஏன்?என்கிற போதே ஊழல்வாதிகளுக்கு சாதகமான செயல்களை சிபிஐ செய்து வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உச்ச நீதிமன்றம் லலித் அவர்களை சிபிஐ தரப்பு வக்கீலாக நியமித்திருக்கிறது. மத்திய அரசு அதற்கும் ஒரு இடைஞ்சலை உருவாக்கினார்கள்.

இதற்கிடையில் நம் பாரதப் பிரதமரைப் பற்றி விக்கிலீக்ஸ் அசாஞ்ச் கடுமையான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். பாரதப் பிரதமர் விக்கிலீக்கின் தகவல்களுக்கான நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அமெரிக்ககாரன் ஏன் தேவையின்றி பொய் சொல்லப்போகிறான் என்று கேட்டிருக்கிறார். மன்மோகன் சிங்க் மக்களின் முன்னே நிராதரவாய் நின்று கொண்டிருக்கிறார். அயோக்கிய சிகாமனிகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை தலைமேற் கொண்டு செயலாற்றுகிறார் என்று மீடியாக்கள் கிழித்துத் தொங்க விடுகின்றன. எதற்கும் பதில் சொல்லாமல் ஒரு பிரதமர் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமா, சர்க்கரை ஆலை அதிபர், மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், மத்திய அமைச்சர் திரு சரத்பவார் மீது லாபியிஸ்ட் நீரா ராடியா ஸ்பெக்ட்ரம் ஊழலில் மிகப் பெரும் லாபம் அடைந்து, இந்திய மக்களின் சொத்தைக் கொள்ளையடித்த டிபி ரியாலிட்டி கம்பெனியில் மறைமுகமாக ஆளுமை செய்ததாக சிபிஐயில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சரத்பவாரின் குடும்ப உறுப்பினர்கள் ஊழல் டிபி ரியாலிட்டி கம்பெனியில் ஆளுமை செய்திருக்கிறார்கள் என்று கூடுதல் தகவல் கொடுத்திருக்கிறார். இந்த சரத்பவரை யாரால் என்ன செய்து விட முடியும்? இந்திய அரசியல் சட்டங்கள் இவரின் காலடியில் அல்லவா கிடக்கும்? ஊழல் கிரிக்கெட் வாரியத்தை அரசாங்கம் இதுவரை ஏன் கண்டு கொள்ளவில்லை?

ஊழல் ஊழல் ஊழல் என்பதே காங்கிரஸ் அரசின் கொள்கையாய் அல்லவா வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதோ இன்னொரு கூத்தைக் கேளுங்கள். ராஜா ஊழலே செய்யவில்லை என்று முதல்வர் சொல்லிக் கொண்டிருக்கிறார். மதுரை அமைச்சர் அழகிரியோ 2ஜியும் இல்லை, 1ஜியும் இல்லை என்று பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். லாபியிஸ்ட் நீரா ராடியா மூலம் மேற்படி இருவரின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. ஊழல் மன்னன் ராஜா, டாடா ஸ்கையில் கலைஞர் டிவி ஒளிபரப்பாக வேண்டுமென்பதற்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்று ராடியா சொல்லி இருக்கிறார்.கலைஞர் டிவிக்காக ஏன் ஊழல் மன்னன் ராஜா பேச வேண்டும்? ஏன் என்று மதுரை அமைச்சர் அழகிரியும், முதல்வரும் சொல்வார்களா?அதுமட்டுமா தயாநிதிமாறனால் டாடா நிறுவனத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன என்றும் சொல்லி இருக்கிறார். ஒரு குடும்பம் எத்தனை செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். மக்கள் நலன் திட்டங்களை செயல்படுத்துவதில் இவர்கள் ஈடுபட்டதை விட ஊழல் செயல்களில் ஈடுபட்டதே அதிகம்.

அது மட்டுமா, இன்றைக்கு காலையில் டைம்ஸ் நவ்வில் அதிமுக சார்பில் மைத்ரேயனும், திமுக சார்பில் குஷ்பூ பேட்டி காணப்பட்டார்கள். இரண்டு கழகங்களும் ஓட்டுப் போட வாக்காளர்களுக்கு காசு கொடுத்திருக்கிறார்கள். குஷ்பூ நாங்கள் கொடுக்கவே இல்லை என்றார். மைத்ரேயனும் கொடுக்கவே இல்லை என்றார். காவல்துறையில் 160 காசு கொடுத்ததாய் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றனவே அது எப்படி என்று இருவரும் சொல்வார்களா?

ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்போரை தண்டிக்க முடியாத சட்டங்களும், நீதிமன்றங்களும் இருந்தும் என்ன பயன்? இல்லாமல் போனாலும் என்ன பயன்?

திருடர்களும்,அக்கிரமக்காரர்களும், அயோக்கியவாதிகளும், கொலைகாரர்களும், தேசத்துரோகிகளும் தலைவர்களாய் இருக்கும் அரசியல் கட்சிகளை யாரால் என்ன செய்து விட இயலும்? அரசியல் கட்சிகள் கறுப்புப் பணத்தை பதுக்கி தேசத்திற்கே கேடுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. அரசியல்கட்சிகளின் மீது நடவடிக்கை எடுப்பது யார்? யார்?யார்?????????

ஏ இந்தியாவே உன்னை இந்த அரசியல்வாதிகளிடமிருந்து காப்பற்றப் போவது யார்????? யார்???? யார்???????

மக்களுக்கு எந்த வித நன்மையையும் ”ஜனநாயகம் “ பெற்றுத் தரவில்லை.

–  பஞ்சரு பலராமன்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: