ஏன் மாறவேண்டும் திமுக ஆட்சி?

”கோட்டைக்குச் செல்ல வேண்டியவர் இல்லை கருணாநிதி. டெல்லி திகார் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டியவர்! அடித்துக் கொடுத்த ஆ.ராசா சிறைச்சாலையில் இருக்கும்போது, அடிக்கச் சொன்ன கருணாநிதி வெளியே இருப்பது நியாயமா? கருணாநிதி மட்டும் அல்ல… கருணாநிதியோடு பங்கிட்டுக்கொண்ட மகள் கனிமொழியும் துணைவி ராஜாத்தியும் இருக்க வேண்டிய இடமும், திகார் சிறைச்சாலை​தான்!

உலக வரலாற்றிலேயே எந்த ஜனநாயக நாட்டிலும்  1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு இவ்வளவு பெரிய தொகை கொள்ளை போனது இல்லை. இவருக்கு ஒரு கட்சி, இவ்வளவுக்கும் பிறகு ஒரு கூட்டணி. வெட்கம் இல்லாமல் கருணாநிதியின் பெயரால் வாக்குக் கேட்கிற கூட்டணிக் கட்சிக்காரர்கள், தங்களின் சுய மரியாதையை மட்டும் அல்ல, சுரணையையும் இழந்துவிட்டார்களோ என்று ஐயுறுகின்றேன்!

இன உணர்வுக்காகவும் மொழி உணர்வுக்காகவும், அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, சோனியாவுடனும்  ராஜபக்​ஷேவுடனும் சேர்ந்து, ஈழத்தை மயானமாக்கிய​போதே, அந்தக் கட்சி வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டது. தமிழினம் அறிந்த மிகப் பெரிய துரோகிகளில் முதலானவர், கோபாலபுரத்துக் கருணாநிதி. இரண்டாமவர் ஈழத்துக் கருணா. இவர்களை வரலாறு மன்னிக்காது!

அண்ணா, தன்னை அறியாமல் தமிழ்நாட்டுக்குச் செய்த தீமை… கருணாநிதி வளர இடம் கொடுத்தது. எம்.ஜி.ஆர். அறிந்தே தமிழ்நாட்டுக்குச் செய்த நன்மை… அம்மாவை அரசியலில் வளர்த்தது!

ஈழத் தமிழர்களின் உயிர்கள் மட்டும் அல்ல… தமிழ் மீனவர்களின் உயிரும் பறிபோவதற்குக் கருணாநிதிதான் காரணம். இனத்தின் மீது அவருக்கு அக்கறை இல்லை. கருணாநிதி ஆட்சியின் எழுதப்படாதக் கொள்கை… ‘நாட்டைச் சுரண்டுவதுதான்’. அதனால்தான் ஆறுகளை எல்லாம்கூட கட்டாந்தரைகளாக்கிவிட்டார்கள். இவர்கள் சுரண்டிய மணல் மீண்டும் ஊற 500 ஆண்டுகள் ஆகும்!

‘நான் தொலைக்காட்சிப் பெட்டி தரவில்​லையா?’ என்கிறார் கருணாநிதி. ஒன்றரைக் கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் போகின்ற, வருகின்றவர்களுக்கு எல்லாம் விரட்டி விரட்டிக் கொடுத்தார். அது யாருடைய நன்மைக்காக? தன்னுடைய குடும்பத்துக்கு கேபிள் பணம் வர வேண்டும் என்பதற்காக! கேபிளை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குவதற்காக கடந்த ஆட்சி காலத்தில் அரசுடமை ஆக்கினார் அம்மா. அந்த அரசுத் தீர்மானத்தில் தன்னுடைய அன்புக்குரிய கவர்னரைக் கையெழுத்துப் போடவிடாமல் செய்தது மட்டும் அல்லாமல், அடுத்து ஆட்சி மாறியவுடன் அந்தச் சட்டத்தையே ரத்து செய்தவர் கருணாநிதி!

அம்மா ஆட்சியில், 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. 7,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தேவையாக இருந்தது. மீதம் உள்ள உபரி மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அம்மா ஆட்சிக் காலத்தில் விற்கப்பட்டது. இன்று கருணாநிதி ஆட்சியில், தரக் குறைவான நிலக்கரியின் காரணமாகவும், ஆட்சித் திறன் இல்லாத காரணத்தினாலும்  மின் உற்பத்தி சுருங்கிவிட்டது. மக்களுடைய பயன்பாடு பெருகிவிட்டக் காரணத்தினால், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு… தமிழ்நாடு இருளில் தத்தளிக்கிறது. மக்களின் அடுத்த கட்டத் தேவைகளுக்கு ஏற்ப மின்சாரத்தைப் பெருக்குகின்ற ஆட்சித் திறன் அவருக்கு இல்லை. இவர் ஆட்சிக்கு வந்தபோது அதை செய்ய முடியவில்லை என்றாலும், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி இருந்தால், நான்கு ஆண்டுகளுக்கு உள்ளாகவே பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்திருக்குமே.!

அம்மாவின் காலத்தில்,  12-க்கு விற்ற அரிசி இன்று  40. அம்மாவின் காலத்தில் அரிசி விற்ற விலைக்கு இன்று உப்பு விற்கிறது. டாடா உப்பு  12. கல் உப்பு  9.  கேட்டால், ‘உப்பையா சாப்பிடுகிறீர்கள்?’ என்று திருப்பிக் கேட்கிறார். அவர், உப்பில்லாமல் சாப்பிடுகிறவர்போல் இருக்கிறது. உப்புப் போட்டுக்கொண்டால்,  நியாயமான பதில் சொல்லியாக வேண்டுமே?

அம்மாவின் காலத்தில், ஒரு பவுன் தங்கம்  4,500. இன்று அது  15,500! ஏழைப் பெண்கள் திருமணத்தன்று அரைப் பவுன் தாலிக்குக்கூட வக்கில்லாமல் செய்துவிட்டது கருணாநிதி அரசு. அதனால்தான் அம்மா தான் ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்குவதாக வாக்கு அளித்திருக்கிறார்.

அம்மாவின் ஆட்சியில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.89 சதவிகிதம். இன்று வளர்ச்சி விகிதம் 4.49 சதவிகிதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காக சரிந்துவிட்டது. ஒரு ஆட்சியின் அளவுகோல், அதனுடைய பொருளாதார வளர்ச்சிதான். தமிழ்நாட்டை சத்தீஸ்கருக்கும் மத்திய பிரதேசத்துக்கும் பழைய பீகாருக்கும் கீழாகவே கொண்டுவந்துவிட்டார் கருணாநிதி!

இவருடைய ஆட்சியில் தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் கடன்  1 லட்சத்து 10 ஆயிரம் கோடி. இது மத்திய அரசு அனுமதித்த கடன் தொகையைவிடக் கூடுதலானது. சிறப்பு அனுமதி பெற்று, நம்மைக் கூடுதல் கடனாளியாக்கிவிட்டார். கதை, வசனம் எழுதும் கருணாநிதியும், பச்சையப்பன் கல்லூரி தமிழ் பேராசிரியர் அன்பழகனும் எந்தப் பொருளாதாரத்தை அறிவார்கள்?

ஈழத்தை மயானமாக்கிய, கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு மௌன ஒப்புதல் அளித்த, மக்களை ஐந்து ஆண்டுகளாக இருளில் மூழ்கச் செய்த, விலைவாசி உயர்வைத் தடுக்கத் திறன் இல்லாத, ஆறுகளைச் சுரண்டிய, தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்த… ஊழலையே ஒரு வரிக் கொள்கையாகக்கொண்ட இந்தக் கருணாநிதி ஆட்சி… தொலைய வேண்டுமா? வேண்டாமா?

மக்கள் சொல்வார்கள்!

சந்திப்பு: த.கதிரவன்

மேற்படி கருத்துக்குச் சொந்தக்காரர் : திரு பழ. கருப்பையா அவர்கள்.

கட்டுரை வெளியிட்டதற்கும், இங்கு பதிவிட்டதற்கும் நன்றியைப் பெறுபவர்கள் : ஜூனியர் விகடன்

6 Responses to ஏன் மாறவேண்டும் திமுக ஆட்சி?

 1. swami சொல்கிறார்:

  anadhi anna,
  naan pudhiya thalaimai pathi sonna neenga kuttiyai pathi pesareenga.enneram kutti ninaippu ungalukku thaan!!

 2. swami சொல்கிறார்:

  andha amma romba ozhungu. indha Iyya than mosam. pongappa,rendum ore kuttayil oorena mattaigal.pudusa,ilasa,padichadha,cinemakkaran sagavasame illadha aal yarachum irundha sollunga.

  • அனாதி சொல்கிறார்:

   சாமி, பேருக்கு ஏத்தா மாதிரியே சிந்திக்கிறீங்களே சூப்பரு. பொடிசா, இளசா, படிச்சதா எந்தக் குட்டியை போட்டா, ஓட்டுப் போடூவீங்கனு சொல்லுங்க. உங்க சார்பா நம்ம குஞ்சை பேசச் சொல்லுவோம். – பலராமன்

 3. subbu சொல்கிறார்:

  வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
  சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

  இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
  சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

 4. thendral சொல்கிறார்:

  நம்மை சுரண்டி சுரண்டி கொழுத்துவிட்டது ஒரு குடும்பம்…பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்டதை போல ஒரு மக்கள் புரட்சி ஏற்படாவிட்டாலும்…இந்த தேர்தலின் மூலமாகவாவது ஒரு மட்ட்ரத்தை மக்கள் தரவேண்டும்… அவர்கள் இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை கொள்ளை அடித்தனர் என்பதை அந்த அம்மா ஆட்சிக்கு வந்தால் தான் வெளியில் தெரியும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: