இதற்குத்தானா ஆசைப்பட்டீர் சாதிக்பாட்சா?

அன்பு நண்பர்களே,

எலக்‌ஷன் கமிஷனின் உண்மையான அதிகாரத்தை நாம் இந்த தேர்தலில் கண்டுகளித்து வருகிறோம். ஆளும் திமுகவினருக்கு வயித்தால போகுதுன்னு சொல்லுகின்றார்கள். சீக்கிரம் ஹாஸ்பிட்டல் வாசம் தான் என்றும் சொல்கின்றார்கள்.

ஊழலை ஒழிக்க, அதிகாரம் கொண்ட ஜன லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டுமென்று திரு அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி இருக்கிறார். அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். முடிந்தால் பிரதமருக்கு ஒரு மெயிலைத் தட்டி விடவும்.

நேற்றைக்கு தொல் திருமாவளவனின் பேச்சைக் கேட்க முடிந்தது. அன்னை சோனியா காந்தி முன்பு அதைக் கொண்டு வந்தார் கலைஞர் அம்மா கொண்டுவந்தாரா என்றெல்லாம் கேள்விகளாய் குவித்தார். ஏன் அய்யா? உங்களுக்கு மனச்சாட்சியே கிடையாதா? நீங்கள் அம்மாவைப் பார்த்துக் கேட்ட கேள்விகளெல்லாம் சரிதான். ஆனால் அதற்கும் மேலே சில கேள்விகளை வாக்காளர்கள் கேட்கின்றார்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்? கேட்கின்றவன் எல்லாம் கேனப்பயல்கள் என்றா நினைத்திருக்கின்றீர்கள்? கபட வேடதாரிகளான திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களிடம் ஓட்டுக் கேட்க கொஞ்சம் கூட அருகதை அற்றவர்கள். சக தமிழனைக் கொன்று குவித்த இலங்கைக்கு ஆயுதம் கொடுத்த இந்திய அரசை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்க திராணியற்றவர்களான உங்களுக்கு, மற்றவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்க, எந்த வித தகுதியும் இல்லை.

சாதாரண மாநிலக் கட்சியான திமுக, தமிழ் நாட்டை மட்டுமே கொள்ளை அடித்துக் கொண்டிருந்தது. என்றைக்கு மத்திய அரசில் பதவிக்கு வந்தார்களோ அன்றைக்கு இந்தியாவையே கொள்ளை அடித்தார்கள். கேப்டன் அடிக்கடிச் சொல்லுவார், திமுகவின் கொள்கை “கொள்ளை” என்று. அது சரிதான் என்று 2ஜி சொல்லிக் கொண்டிருக்கிறது. அதை திமுகவால் மறுக்க முடியுமா? யார் யாரெல்லாம் தேர்தலுக்காக திமுகவுடன் இணைந்திருக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆதரிப்பவர்கள்தானே?

சரி இப்போது மேட்டருக்கு வரலாம்.

மக்கள் பணம் மகேசன் பணம் என்றுச் சொல்லுவார்கள். சிவன் சொத்து குல நாசம் என்றும் சொல்லுவார்கள். செய்த பாவம் தீர கோயில் கோயிலாய் ஏறிக் கொண்டிருக்கின்றார்கள் தலைவர்களின் மனைவிகள். அன்னதானம், இலவசம் என்று மனைவிகள் இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை இறைவன் இன்றைக்கும் காட்டிக் கொண்டுதான் இருக்கிறான்.

கோடி கோடியாய் சம்பாதிப்பது அமைதியாய், ஆனந்தமாய் வாழத்தான். எந்த ஒரு அரசியல்வாதியாவது தனியாய் சாலையில் செல்ல முடியுமா? வெட்டிப் போட்டு விடுவார்கள் அந்த அரசியல்வாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதோ அஞ்சா நெஞ்சன் என்று சொல்லிக் கொள்ளும் அழகிரி அலறுகின்றார் என்று செய்திகள் வெளியாகின்றனவே? அன்புக்கு அடிமையாவதில் யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அதிகாரத்திற்கு அடிமையாவது என்றால், எவன் பொறுத்துக் கொள்வான்? தந்தை முதல்வரானது மட்டுமே அழகிரி அமைச்சரானதிற்கு காரணம். மதுரை அரசு அலுவலர்களை எல்லாம் வேலைக்காரன் ரேஞ்சுக்கு மிரட்டிய அழகிரி “முன் ஜாமீன்” வாங்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார். அதுமட்டுமா மதுரையில் மாநாடு நடத்திய அம்மா, என் ஆட்சியில் மதுரை அரை மணி நேரத்தில் அழகிரியிடமிருந்து மீட்கப்படும் என்று அரை கூவல் விடுத்தார். நிச்சயமாய் வயித்தால போகும் என்பது உண்மைதான் போலும். ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சு என்ன? கணக்குகளைப் போட ஆரம்பித்தால் விடை வந்துதானே ஆக வேண்டும். தப்புக் கணக்குகளின் வழியாய் சரியான விடை வந்து விட்டது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இறைவன் போடும் கணக்கின் விடை மிகச் சரியானதாகத்தான் இருக்கும்.

செய்த பாவங்களின் பலன்கள் இனி ஒவ்வொன்றாய் வீட்டு வாசலின் முன்பு வரிசை கட்டும். அனுபவித்துதான் ஆக வேண்டும். தப்பிக்க முடியாது.

சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் என்பார்கள். இதோ அதற்கொரு உதாரணம் சாதிக் பாட்சா. அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? பணப்பிரச்சினையா? குடும்பப் பிரச்சினையா? எதுவும் இல்லை. மக்களின் பணத்திற்கு ஆசைப்பட்டவர்களுக்கு துணை போனார். செத்தார். இதற்குத் தானா சாதிக் பாட்சா சம்பாதித்தார்? சாக வேண்டுமென்பதற்காகவா சம்பாதிப்பார்கள்?

பாவத்தின் சம்பளம் மரணம், அது தீர்க்கவே முடியாத ஒரு கணக்கு.

– அனாதி

6 Responses to இதற்குத்தானா ஆசைப்பட்டீர் சாதிக்பாட்சா?

 1. krishna சொல்கிறார்:

  உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்….

 2. muru சொல்கிறார்:

  we are all ssuport to Anna Hasare. who are orginal indians .they will suport.

 3. Man சொல்கிறார்:

  நண்பர்களே, அன்னா ஹசாரே அவர்களை ஆதரிக்க http://www.indiaagainstcorruption.org (official website) என்ற வலைதளத்திற்கு சென்று ஆதரவை பதிவு செய்யுங்கள்.

 4. vijay சொல்கிறார்:

  செய்த பாவங்களின் பலன்கள் இனி ஒவ்வொன்றாய் வீட்டு வாசலின் முன்பு வரிசை கட்டும். அனுபவித்துதான் ஆக வேண்டும். தப்பிக்க முடியாது………

  பாவத்தின் சம்பளம் மரணம், அது தீர்க்கவே முடியாத ஒரு கணக்கு…..

  அரசியல்வாதிகள் இதை கொச்சமாவது நினைத்து பார்க்கவேண்டும் ?
  வேதனையுடன்
  விஜய் …..

 5. D. Chandramouli சொல்கிறார்:

  Excellent write up, analyzing and arguing even from ethical angles.
  Anna Hazare should be supported by every Indian; then only the politicians who have been looting public money are brought before the court, punished and their ill-gotten wealth returned to exchequer. Kudos to you for sharing your thoughts so candidly. My sincere appreciation to you.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: