ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றப்பத்திரிக்கை – ஒரு விமர்சனம்

சிபிஐயை நாங்கள் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று சொல்லுவோம். அது உண்மையாக இருக்குமோ என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிக்கை காட்டுகிறது.

ராஜா குற்றவாளி என்றும் 125 சாட்சிகள் மற்றும் 654 டாக்குமென்ட்டுகளுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பிரிவுகளோ நகைப்பு இடமளிக்கிறது. அதனால் தான் சிபிஐயை ”காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன்” என்றுச் சொன்னேன். அது என்ன பிரிவுகள் என்பதை தொடர்ந்து வாசித்துப் புரிந்து கொள்ளவும்.

எத்தனை சாட்சிகள் இருந்தால் தான் என்ன?ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சாமானியர்களா என்ன? அவ்வளவு பேரும் பெரும் கோடீஸ்வரர்கள். இவர்களிடம் பணம் இருக்கிறது. பதவி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. ஆட்சி இருக்கிறது. ஒரு சாமியாரால் செய்யப்பட்ட கொலை என்று பத்திரிக்கைகள் சொல்லிய போதும், ஆதாரங்களைக் காட்டிய போதும் இன்றைக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவது என்ன? ஒவ்வொரு சாட்சியும் அடிக்கும் அந்தர் பல்டிகளைத் தான் நாம் கேட்டு வருகின்றோமே?அது போல இந்த வழக்கிலும் நடக்காது என்பதற்கு என்ன இருக்கிறது.

சாமியார் வழக்கில் என்ன நடக்கும் தெரியுமா?

சங்கர் ராமன் ஆள் வைத்து தன்னைத் தானே கொலை செய்யச் சொல்லி இருக்கிறார் என்று கூட எதிர்காலத்த்தில் சொல்லப்படக்கூடும்.

ஆட்சியும் அதிகாரமும், பணபலமும் கொண்டவர்களால் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் வெகு எளிதாய் தூசு போல துடைத்து எறியப்படும். அதுமட்டுமா, குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட 214 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதன் பிறகு திருப்பிக் கொடுத்ததாய் சொல்லப்படும் கலைஞர் குடும்பத்தினைப் பற்றி பெரிதாய் ஒரு லைன் கூட இல்லை. திமுக அமைச்சர் அதுவும் தமிழக முதல்வரின் நிழல் போலவே இருந்தவர் ஊழல் செய்திருக்கிறார். ஊழல் செய்த கம்பெனியிடமிருந்து கலைஞர் டிவிக்கு பணம் வந்திருக்கிறது.கலைஞர் டிவியின் உரிமை அத்துணையும் முதலமைச்சரின் குடும்பத்திடம் இருக்கிறது.

சிறுவனுக்கு கூட தெரிந்த ஊழல்வாதிகள் யார் யார் என்ற விஷயம் ஏன் சிபிஐக்குத் தெரியவில்லை? அடுத்த குற்றப்பத்திரிக்கையில் ஊழல் பணம் பெற்றவர்கள் மீது குற்றச்சாட்டினை சுமத்துவார்களா? ஏன் இன்னும் ஊழல் பணம் பெற்றவர்கள் மீது நடவடிக்கையோ அல்லது குற்றப்பத்திரிக்கையில் பெயரோ இல்லை? ஏன் என்றுச் சொல்லுமா சிபிஐ?

யாரும் எதுவும் சொல்லப்போவதும் இல்லை.எதுவும் நடக்கப் போவதும் இல்லை.

ஸ்வான், ரிலையன்ஸ் மற்றும் யூனிடெக் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் மீது நடவடிக்கை எடுத்து விட முடியுமா ஆளும் காங்கிரஸ் கட்சியினால். இல்லை சிபிஐ தான் நடவடிக்கை எடுத்து கம்பெனியை இழுத்து மூடுவார்களா? இதெல்லாம் நடக்கக்கூடிய ஒன்றா? நினைத்துப் பாருங்கள்.

கொள்ளையடித்தவர்களும், அவர்களுக்கு துணை போனவர்களும் வெகு எளிதாய் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து வெளி வந்து விடுவர். மக்கள் பணம் இனிமேல் திரும்பக் கிடைக்கவே கிடைக்காது. இதுவரை காங்கிரஸ் கட்சி இல்லீகலாக லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளின் உரிமையை ரத்து செய்ததா? செய்யவில்லையே ஏன்?

இந்தியத் தேசத்திற்கே துரோகம் செய்து, இந்தியாவை தீவிரவாதிகளின் கைகளுக்குள் கொண்டு சென்ற திமுக அமைச்சர் ராஜா செய்திருப்பது தேசத்துரோக குற்றம்.தேச்த்துரோகம் செய்த அமைச்சருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் தமிழக முதலமைச்சரும், ராஜ்ய சபா எம்பிக்களும், எம்எல்யேக்களும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை பாயும்? ஆதரித்தவர்களும் ஒரு வகையில் குற்றவாளிகள் என்று சட்டம் சொல்கிறதே?

ராஜா அமைச்சராய் பதவியேற்கும் போது செய்த உறுதிமொழியை மீறி நடந்திருக்கிறார். கொலைக்கும் மேலான குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும். ஆனால் சிபிஐ கீழ்க்கண்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறது.

120பி – இரண்டு வருடமோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்க கூடிய பிரிவு

468, 471, 420 – ஆயுள் தண்டனையோ அல்லது ஏழு வருடமோ அல்லது பைனுடன் கூடிய தண்டனையோ வழங்கக் கூடிய பிரிவு

109 – குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது ( ஜெயலலிதா மீது இக்குற்றச்சாட்டின் படி வழக்கு இருக்கிறது)

மேற்கண்ட பிரிவுகளால் எளிதில் ஜாமீன் கிடைத்து விடும். நாளை திரு ராஜா தமிழ்நாட்டின் முதலமைச்சராய்க் கூட ஆகி விடுவார். ஆனால் அவர் இந்திய மக்களை ஏமாற்றிய குற்றம், நீதிமன்றத்தில் இருக்கும். அவர் தமிழகத்தின் முதலமைச்சராய் வரக்கூடும். இதோ ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் ஜெயலலிதா நாளை தமிழகத்தின் முதல்வராய் வரப்போகின்றார் என்று பத்திரிக்கைள் முதற்கொண்டு அனைவரும் சொல்லி வருகின்றார்களே? போதாதற்கு திமுகவின் ஒவ்வொரு செயலும் அதற்கு கட்டியம் கூறுகின்றனவே? ஊழல் குற்றச்சாட்டின் படி வழக்கு இருப்பவர் முதலமைச்சரானால் ஏன் ராஜாவாலும் முதலமைச்சராய் ஆக முடியாது?

யாரால் என்ன செய்து விட முடியும்?

கலைஞர் டி.வி., சினியுக் பிலிம்ஸ், கிரீன் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் குஷேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தங்களது விசாரணை பட்டியலில் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை கலைஞர் டிவிக்கு எதிராய் ஒரு சிறு நடவடிககையும் எடுக்கப்படவில்லை. அது ஏன் என்றுச் சொல்லுமா சிபிஐ?

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்தியாவின் சொத்துக்கள் கொள்ளை போகின்றன. நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன. கொள்ளை அடிப்பவர்களும், ஊழல் வாதிகளும் மீண்டும் மீண்டும் அரசாட்சிக்கு வருகின்றனர். யார் இவற்றைத் தடுக்கப் போவது? வேறு வழியே இல்லையா? என்னதான் வழி இருக்கிறது? கேள்விகள் கேள்விகள். அனைத்துக்கும் பதில் என்ன?

இத்தகைய ஒரு இழி நிலையை மாற்றி, உண்மையாகவே இந்திய தேசத்தை இந்தக் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றப் போவது யார்?

விடை எப்போது கிடைக்கும்?

– பஞ்சரு பலராமன்

========================================

இப்பதிவு எழுதிய பின்னர் டைம்ஸ் நவ்வில் கிடைத்த செய்தியில், கலைஞர் டிவியின் வெறும் இருபத்தைந்து சதவீத பங்குகள் வைத்திருக்கும் சரத் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்றும், பெரும்பான்மையான பங்குகள் வைத்திருக்கும் கனிமொழி மீது இந்தக் குற்றப்பத்திரிக்கையில் ஒன்றும் இல்லை என்றும், அடுத்த சார்ஜ் சீட்டில் வரலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Sources: CBI to chargesheet 5 in spectrum scam
22 Mar 2011, 1805 hrs IST
TIMES NOW has accessed exclusive details of CBI’s spectrum scam chargesheet that would be filed by March 31. Sources said the chargesheet would name former Telecom Minister A Raja who is currently lodged in Tihar jail, Delhi, and three of his aides along with Kalaingar TV’s managing director Sharad Kumar. According to sources, these scmasters are likely to be charged with criminal conspiracy, cheating and forgery.According to sources, the CBI chargesheet also names Shahid Balwa, the Managing Director of DB Realty, and a known promoter of Swan Telecom. Sources say Raja’s former personal secretary RK Chandolia and former telecom Secretary Siddhrath Behura – all of whom are in Tihar Jail with Raja – could also be named.Where are they now:

1. A Raja, Fmr Telecom Minister
– Is currently in Tihar Jail

2. Shahid Balwa, MD, DB Realty & Swan Telecom promoter
– Is currently in Tihar Jail

3. RK Chandolia, Fmr personal secy to Raja
– Is currently in Tihar Jail

4. Siddharth Behura, Fmr Telecom Secy
– Is currently in Tihar Jail

5. Sharad Kumar
– Has been quizzed by CBI – is in Chennai

‘Not sure on Kanimozhi’

According to the CBI sources, another name that could feature in a supplementary chargesheet is that of DMK Rajya Sabha MP Kanimozhi.

http://www.timesnow.tv/Sources-CBI-to-chargesheet-5-in-spectrum-scam/articleshow/4368482.cms

One Response to ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றப்பத்திரிக்கை – ஒரு விமர்சனம்

  1. Dinesh சொல்கிறார்:

    நிச்சயமாக கனிமொழியின் பெயர் வரும், ஆனால் அது இரண்டாவது குற்றப்பத்திரிகையில் வரும். ஆனால் அது தேர்தல் முடிந்து வரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: