ஜெயலலிதாவின் திட்டம் – திமுக அதோகதி

ஏப்ரல் 25, 2011

அம்மையார் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாய் திமுக தலைமை மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீதும் வரிசையாய் வழக்குகளைப் போட்டு, அடுத்து வரும் ஐந்தாண்டு காலம் தோறும் கோர்ட் படியேற வைக்கப்போகின்றார் என்று அதிமுகவில் பேசிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லமாமல், முதல் களப்பலியாய் பட்டயக் கிளப்ப “வடிவேலுவை” டார்கெட் குறித்து வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியில், அதிமுகவிலிருந்து தாவியவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடக்கப் போவுதாம்.

அழகிரியின் கதியோ அதோகதி என்கிறார்கள். வரும் ஐந்தாண்டுகளுக்குள் திமுக என்ற கட்சி இருந்த சுவடே தெரியாமல் மேட்டரை அழித்து துடைத்து விட ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றனவாம். இதற்கிடையில் யாரோ ஒருவர் அழகிரியின் நியூமராலாஜியில் அவருக்கு களிதான் இனி என்றுச் சொல்லி இருக்கின்றாராம். கனிமொழியின் கதை என்னவாகப்போகின்றதோ தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் ஆடுகளத்தில் ஆடிய அனைத்து அதிகாரிகளுக்கு ஆப்புமேல் ஆப்பு காத்திருக்கிறதாம். இதையெல்லாம் டாஸ்மாக்கில் பேசிக் கொண்டார்கள். திமுக அனுதாபியான எனக்கு பகீர் என்றது. தலிவர் மீது நான் கொண்டுள்ள பற்றுக்கு வார்த்தைகளில் எல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது. தலிவர்மீது அப்படி ஒரு பாசப் பிணைப்பு.

”அட, இத்தனை நாளா குஷியா குஷாலா சுத்தி சுத்தி வந்தானுவ, கொஞ்ச நாளைக்கு கோர்ட்டுக்கும் போயிட்டு அப்படியே மாமியார் வீட்டுக்கும் (அது ஏன் ஜெயிலை மாமியார் வீடு என்று சொல்கிறார்கள்?) போய்ட்டு வரட்டுமே” என்கிறார் டாஸ்மாக் கூட்டாளி.

உடனே பஞ்சுக்கிட்டே போனைப் போட்டு ”என்னடா இது பலே திட்டமா இருக்கே?” என்றேன். ”அடப் போடா குடிகாரா, அரசியல்ல இதெல்லாம் ஒரு மேட்டரா? திமுக அளவுக்கு சிந்திக்க, மேட்டரை திசை திருப்ப இந்த உலகத்திலேயே இன்னும் எவனும் பிறக்கவில்லையடா குடிகாரா” என்றான்.

ஆக, அதிமுக ஆட்சிக்கு வந்தால் சுமார் நூறு வழக்காவது வரிசையாக படையெடுக்கும் போல. அது யார் யார் மீது என்பதெல்லாம் வரக்கூடிய காலங்கள் நமக்குச் சொல்லும். திமுக அமைச்சர்களில் எத்தனை பேர் கட்சி தாவப்போகின்றார்களோ தெரியவில்லை.

அனைவரும் அதிமுகவே ஜெயிக்கும் என்பது போல பேசிக் கொள்கிறார்கள். உள்ளடி வேலைகளில் மன்னரான திமுகதான் ஜெயிக்கும் என்கிறேன் நான். ஆக என்னதான் நடக்கும் பார்ப்போம்.

குவார்ட்டர் முடிஞ்சு போச்சு, ஒரு ஆஃப்பைப் அடிக்கப் போகிறேன். நீங்களும் வருகின்றீர்களா?

– குடிகாரன்


ஜாய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் விஜய் ஏன்?

ஏப்ரல் 23, 2011

அன்பு நண்பர்களே,

ஊழல், செக்ஸ் டார்ச்சர் பிற குற்றங்களை நாம் வெகு எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மிக நல்ல புத்திசாலிகளுக்கு கூட புரியாத பல விஷயங்களை பெரிய இடங்களில் நடக்கும். அவர்கள் நடத்துவார்கள். அந்த விஷயங்களைத்தான் அனாதி பிளாக் இலைமறைக்காயாக வெளிப்படுத்தி வருகிறது. அதனால் யாரும் பலனடைய வேண்டுமென்பதல்ல நோக்கம். உஷாராகி விட வேண்டுமென்பதுதான் நோக்கம்.

அதே போல இன்னும் எண்ணிலடங்கா விஷயங்களை மீடியாக்களும், பத்திரிக்கைகளும் உங்களிடமிருந்து மறைத்தே வந்து கொண்டிருக்கின்றன. இது அத்தனையும் மீடியா, பத்திரிக்கைகளில் இருப்பவர்களுக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி மூச்சே காட்ட மாட்டார்கள். ஏனென்றால் வியாபாரம் படுத்து விடும். பின்னர் நீங்களா சோறு போடுவீர்கள். ஆகவே வியாபார நுணுக்கங்களை நாம் விட்டு விடலாம். விஷயங்கள் என்னவென்று மட்டும் எழுதுகிறோம். படித்து மனதில் வாங்கிக் கொண்டு, உஷாராகி விடுங்கள். மேட்டர் முடிந்தது.

ஓகே.

ஆலுக்காஸின் விளம்பரத்தில் ஏன் விஜய்க்கு வாய்ப்புக் கொடுக்கின்றார்கள்? ஏன் என்பதை நீங்கள் இன்னேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள். அதை நான் சொல்ல வேண்டியதில்லை. தெரியாதவர்கள் மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள். புரிந்து விடும். கொஞ்சூண்டு யோசிக்க வேண்டும். விடை கிடைத்து விடும். ஓகே..

ஏன் விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்ற காரணத்தால் தான், இன்றைய மனித குலம் மிகப் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. அது என்ன? அது அப்பேர்ப்பட்ட ஒரு விஷயமா என்பதை வரக்கூடிய பதிவுகளில் வெளிப்படுத்துவோம். புரிந்து கொள்ள முயலுங்கள்.

குறிப்பு : இப்படி நாங்கள் எழுதுவதற்காக, யாரும் எவரும் விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டியதில்லை. வங்கி அக்கவுண்டில் பணம் செலுத்த வேண்டியதில்லை. உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் இருக்கிறதோ அப்போது இத்தளத்தைப் படித்தால் போதும். உங்களின் நேரம் வெகு பொன்னானது. போனால் கிடைக்காது. எப்போதெல்லாம் மனதுக்கு ஒரு மாற்று எண்ணம் தேவைப்படுகிறதோ அப்போது எங்களின் பிளாக்கிற்கு வந்தால் போதும். ஓகே வா.

விரைவில் அடுத்த பதிவு

– அனாதி


ஏமாற்றுவித்தைக்காரர்கள் – கூருகுர்ச்சி

ஏப்ரல் 22, 2011

இது யாரையையும் எவரையும் குறிப்பிடுவன இல்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதுமட்டுமின்றி இது ஒரு சிறுகதை என்றும் சொல்லி விடுகிறேன்.

குர்ச்சியின் கும்மாங்குத்துகளை ஒரு பதிவர் அட்சர சுத்தமாய் வெளியிட, ஓடி வந்து அணை கட்டி இருக்கிறார் கூரு. இதே வேறொரு ஆளாக இருந்திருந்தால் அவரின் எழுத்து எப்படி இருந்திருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவனை உலக மகா அயோக்கியர்களுக்கெல்லாம் அயோக்கியன் என்றும், வழக்குப் போடுவேன் என்றும் உதார் விட்டு, கடித்துக் குதறி இருப்பார். ஓடி வந்து குட்டிக் கொள்வேன் என்று ஒரு உரசல் வேறு. ஒரு தடவை ஒரு பங்சனுக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவழித்தவர்தான் அந்த குர்ச்சி. இதை கூரு எழுதி இருக்கிறார். ஏமாந்து செலவழித்த குர்ச்சியை காப்பாற்ற வேண்டுமல்லவா? அதற்குத்தான் ஒரு தடவல் பதிவினை வெளியிட்டு இருக்கிறார் கூரு. கூருவின் அடிப்பொடி அவரைப் போலத்தானே இருப்பார். இதில் என்ன ஆச்சரியம் இருக்கப் போகிறது? ஏமாந்தவர்கள் தான் பாவம்.

மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று கூரு போடும் வேஷத்தை வாசகர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இப்பதிவினை எழுதுகிறேன். இது மட்டுமல்ல கூரிவிடம் ஏமாந்த பல வாசகர்களின் கண்ணீர்க் கதைகள் மெயிலாய் எங்களிடம் இருக்கின்றன. சரியான சந்தர்ப்பங்கள் வரும்போது அவைகளை ஒவ்வொன்றாய் வெளியிடுவோம்.

குறுக்கு வெட்டு : அடப்போடா புண்ணாக்கு. இவனெல்லாம் நாட்டைத் திருத்த வந்துட்டானுவன்னு நினைச்சியாடா? கு.போடவும், கூ.கொவும், த.போடவும் தான் எழுத வந்து இருக்கானுவ. அதைப் புரியாமல் இலக்கியம் இலக்கியமுன்னு அலையுறவனுங்களைப் பத்தி நீ ஏண்டா கவலைப்படுறே? – குஞ்சு

– பஞ்சரு பலராமன்


குட்டிகளுடன் கும்மாளம் – உண்மைச் சம்பவம்

ஏப்ரல் 22, 2011

வட நாட்டில் இருக்கும் எனது நண்பனின் அழைப்பை ஏற்றுச் சென்றேன். நண்பன் ஒரு மினிஸ்டரின் மகன். அவன் அப்பா மினிஸ்ட்ராய் இருப்பது எனக்கு லேட்டாகத்தான் தெரியும். நானும் அவனும் ஐபிஎம்மில் படித்த போது நண்பர்கள் ஆனவர்கள். படிக்கும் போது, அவனைப் போன்ற தன்மையானவனைப் பார்க்கவே முடியாது.

நான் சென்ற ஊர் அந்த ஸ்டேட்டின் தலைநகரம். அங்கு ஹோட்டல்கள், பப்புகள் என்று இரவில் ஒரே அதகளமாய் இருக்கும். விடிய விடிய மன்மதக் கூத்துகளை அரங்கேற்றுவார்கள். விதவிதமாய் பெண்களும், ரக ரகமாய் ஆண்களும் போதையில் பப்புகளின் இருட்டு மூலைக்குள் ஜோலிகளைப் பார்ப்பதும் உண்டு. பெரும்பாலும் இந்த மாதிரி பப்புகள் ஹோட்டல்களில் தான் இருக்கும். ஏனென்றால் ”அந்த மூடு” அதிகமானால் அவசரத்திற்கு தள்ளிக் கொண்டு போக அறை கிடைக்குமல்லவா? ஹோட்டல்காரர்கள் அந்த மாதிரி அஜால் குஜால் பேர்வழிகளிடம் தாளித்து விடுவார்கள்.

காசு போகிறதே என்று எவரும் கோவப்படுவதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. மன்மத ரசம் தலைக்கேறினால் அதை சரி செய்வதற்கான மனிதர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், அவருக்கு வயது கிட்டத்தட்ட 70 இருக்கும். இளம் பிஞ்சுகளாய் குட்டிகளைக் கூட்டி வந்து ஜோலி பார்ப்பார். அந்தக் குட்டிகள் ஒவ்வொருவருக்கும் காசால் மழை பொழிய வைப்பார். அப்படி காசு மழையில் நனைந்த ஒரு குட்டியை நான் சமீபத்தில் சந்தித்த போது அவள் மொபைல் கேமிராவில் அந்தக் கிழட்டு மன்மத ராசாவின் லீலைகளை ரகசியமாய் படம் பிடித்ததைக் காட்டினார். ”அடியே குட்டி, இதை வெளியில் சொல்லி விடாதேடி. அவன் உன்னை நடு ரோட்டில் வைத்து கொன்று போட்டு விடுவான்” என்று சொல்லி, அந்தப் படத்தை நைசாக லவட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

சரி நம்ம கதைக்கு வருவோம்.

மாலையில் வீட்டிலிருந்து இருவரும் பப்புக்கு கிளம்பினோம். வழியில் மூன்று குட்டிகளை ஆடியில் ஏற்றிக் கொண்டான். கருப்புக்கலர் ஆடி பாம்பு போல ஊர்ந்தது. அவன் அப்பாவின் ரகசிய பண்ணை வீட்டுக்குச் சென்றவன் வெளி நாட்டு சரக்குகளை ஏற்றிக் கொண்டு இரண்டு குட்டிகளுடன் அறைக்குள் நுழைந்து கொண்டான். தனித்து விடப்பட்ட நானும், இன்னொரு குட்டியும் ஹாலில் ஷோபாவில் அமர்ந்திருந்தோம். அதைத் தொடர்ந்து நான் என்ன செய்தேன் என்பதெல்லாம் எழுத ஆரம்பித்தால் இது ஒரு செக்ஸ் கதை போல ஆகிவிடும் என்பதால் அதையெல்லாம் சென்ஸார் செய்து விடுகிறேன்.

மட்டுப்படுத்த இயலாத போதையுடன் வெளியில் வந்தார்கள் இருவரும். வாடா பப்புக்குச் சென்று ஆட்டம் போட்டு விட்டு வருவோம் என்றுச் சொன்னான். நான் தயங்கினேன். நீயே காரை ஓட்டு என்றான். நால்வரும் பப்புக்குச் சென்றோம். அது மிகப் பிரபலமான ஹோட்டல். ஹோட்டலின் வாசலுக்குள் நுழைந்தோம். காரில் இருந்து இரண்டு பக்கமும் குட்டிகளை அணைத்துக் கொண்டே இறங்கினான். ஹோட்டலின் ரிசப்ஷனுக்குச் சென்றவன்” ஓடிச் சென்று பப் அனுமதி வாங்கி வா” என்றுச் சொன்னான். ரிசப்ஷனிஸ்ட் பையன் ”நாங்கள் அதை வேறொருவருக்கு லீசுக்குக் கொடுத்து விட்டோம். என்னால் முடியாது” என்றுச் சொன்னான். அந்தப் பையனை காச் மூச் என்று கத்தியவன் கோபமாய் வெளியே வந்தான். சத்தம் ஓவராய் விட்டு, போலீசாருக்குப் போன் போட்டான். உன்னை என்ன செய்கிறேன் பார் என்று ஒரே ரகளை. தொட்டிகள், அலங்காரம் எல்லாம் உடைத்தெறிந்தான். கொஞ்ச நேரத்தில் போலீஸ்காரர்கள் வர, அதற்கு ஹோட்டல்காரர் பத்திரிக்கைகளுக்கு போனைப் போட, அவர்களும் வர போலீஸ்காரர்கள் பத்திரிக்கைக்காரர்களை அடித்து விரட்டினார்கள். அந்த அதகளத்திலும் போலீஸ்காரர்கள் நண்பனைச் சமாதானம் செய்து, வேறோரு பப்பினைச் சொல்லி அங்கே செல்லும் படி கெஞ்ச,”குஞ்சு வண்டியை அங்கே விடு” என்றுச் சொன்னான். நால்வரும் அங்கேச் சென்றோம். விடிய விடிய கூத்தை அரங்கேற்றி விட்டு விடிகாலையில் வீட்டிற்கு வந்தோம்.

அப்போது அவன் அப்பாவை அவரின் பிஏ வேட்டி இல்லாமல் இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார். அவன் அம்மா டூர் சென்றிருந்தார்.

மதியம் 12 மணிக்கு பெட்டில் இருந்து எழுந்தவன் நேராக அப்பாவிடம் சென்றான். உள்ளே விட மறுத்த ரிஷப்ஷனிஸ்ட் பற்றியும் அந்த ஹோட்டல் பற்றியும் அப்பாவிடம் முறையிட அடுத்த நொடி அரசு அலுவலர்கள் அனைவரும் அந்த ஹோட்டலில் கூடினார்கள். கேட் கட்டப்பட்டது சரியில்லை என்று ஹோட்டலின் முன்னால் இருந்த சுவற்றை இடித்துத் தள்ளினார்கள்.  ஹோட்டலுக்குள் இருந்தவர்கள் அனைவரும் அலறினார்கள். அதைப்பற்றி எவரும் கண்டு கொள்ளவே இல்லை. விதிமுறைப்படி கட்டப்பட்ட ஹோட்டல் சுவர், கேட் இவற்றினை அரசாங்க ஊழியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

குட்டியோட டான்ஸ் ஆட முடியவில்லை என்பதற்காக ஒரு மினிஸ்டரின் பையனுக்காக ஒரு அரசாங்கமே மக்களுக்கு எதிராய் நடந்து கொள்வதைக் கண்டு என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அடுத்த நாளே அவனிடமிருந்து பிரிந்து ஊருக்குக் கிளம்பி விட்டேன்.

சாகும் வரையிலாவது பதவியில் இருந்து விட வேண்டுமென்று ஏன் அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள் என்பதை அன்று கண்கூடாக நான் புரிந்து கொண்டேன். பதவி இருந்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதையும் புரிந்து கொண்டேன்.

பதவி கிடைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இந்த அரசியல்வாதிகள்.

இந்தியா மீண்டும் ஒரு சுதந்திரப் போரை நிகழ்த்த வேண்டும். அரசியல்வாதிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இந்தியா “அன்னா ஹசாரே” மூலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான வெளிச்சம் தான் “ அன்னா ஹசாரே”.

மக்கள் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் மயங்கி விடாமல் இருக்க வேண்டும். மயங்காமல் இருப்பார்களா?

– குஞ்சு


தமன்னாவின் இடுப்பும் சில பாடங்களும்

ஏப்ரல் 21, 2011

ஹலோ குஞ்சாமணியின் பிரிய ரசிகக் குஞ்சுகளே, பிஞ்சுகளே உங்கள் அனைவருக்கும் உங்கள் குஞ்சின் வணக்கம். நலம் தானே????

ஸ்ரீயை எழுத விடாதேன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அனாதி கேட்க மாட்டேன் என்கிறான். இனிமேல் அனாதியின் ஹோட்டலில் சரக்கு போடும் மாஸ்டர் கூட எழுத வந்து விடுவார் போல.

ஸ்ரீ ஓவரா பில்டப் போடுவான். அவனை நம்பாதீர்கள். எதுவுமே செய்யக்கூடாது என்று வேறு சொல்லுவான். பின்னே எதுக்கு வாழனும்? சொல்லுங்க.

அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதேன்னு ஒரே லந்து. அவனைப் பார்த்தாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. சரி போவட்டும் எங்க கதை.

இப்போது உங்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தைச் சொல்லித் தரப்போகிறேன்.

கிராமப்புறங்களில் மீன் குழம்போ கறிக் குழம்போ வைக்கும் போது, நல்லா புழங்குன சட்டியாப் பார்த்து எடுத்துட்டு வான்னு சொல்லுவாங்க. அந்தச் சட்டியில குழம்பு வைத்தால் தான் குழம்புருசியா இருக்கும்.

மண் சட்டியில் குழம்பு வைத்து சாப்பிட்டிருக்கின்றீர்களா? அதன் டேஸ்டே வேறுதான். உடனே சாரு மாதிரி எனக்கு இரண்டு மண் சட்டி யாராவது வாங்கி அனுப்புங்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன்.

சரி நமக்கு எதுக்கு குழம்பு. இப்போது மேட்டருக்கு வருகிறேன். தமன்னா ஆரம்ப காலங்களில் நடித்த படங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சமீபத்தில் சிறுத்தை என்ற படத்தில் ஒரு பாடலில் ஆடியிருப்பார் ஒரு ஆட்டம். வாயாலே படம் போடுவது என்றுச் சொல்லுவார்கள். அந்த வாயை கீழே இருக்கும் பாடலில் பாருங்கள். அது மட்டுமல்லாமல் தமன்னாவின் ஆட்டமும், இடுப்பின் துடிப்பும், வளைந்து வளைந்து ஆடும் ஆட்டமும் உங்களுக்கு பல வித கதைகளைச் சொல்லுமே. அதே தான். பிடித்துக் கொள்ளுங்கள். பாடலைப் பாருங்கள். நான் என்ன மனதுக்குள் நினைத்தேனோ அது உங்கள் மனதுக்குள் உதிக்கும். உதிக்காதவர்கள் தயவு செய்து, இனி ஸ்ரீயின் பதிவுகளை படித்துக் கொண்டிருங்கள். என்னடா இவன் குழம்புச் சட்டிக் கதை சொன்னான். திடீரென்று தமன்னாவின் இடுப்பைப் பற்றி எழுதுகிறானே என்று குழம்பும் வாசகர்களுக்கு ( வேண்டாம் திட்டிடுவேன் ஆமாம்) என்ன சொல்வது?

உங்களின் பிரிய

குஞ்சு


மஞ்சள் துண்டின் மனசு – புற்றுநோய்

ஏப்ரல் 17, 2011

அன்பு நண்பர்களே, கடந்த வாரம் எனது நண்பரின் அழைப்பின் பேரில் சென்னையின் பிரதான இடத்த்திலிருக்கும் அபார்ட்மெண்டிற்கு இருவரும் சென்றிருந்தோம். அங்கு பெரும் கோடீஸ்வரர் ஒருவரைச் சந்தித்தோம். என் தோள்மீது கை போட்டு, வெகு சகஜமாய் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நண்பரின் நண்பர் என்பதால் எனக்கு கொஞ்சம் சங்கோஜம் இருந்தாலும், என் நண்பரோ பேசிக் கொண்டிரு ஸ்ரீ என்றுச் சொல்லி விட்டு நாங்கள் உரையாடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கோடீஸ்வரருக்கு புற்று நோய் என்றுச் சொன்னார். ஆள் பார்க்க பளபளப்பு, மினுமினுப்புடன் வெகு களையான முகத்துடன், கிளீன் ஷேவுடன் ஹீரோ போலவே இருந்தார். பையனும், பெண்ணும் அமெரிக்க வாசம். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஆனால் என்ன பலன்? அனுபவிக்க உடம்பில்லை, தெம்பில்லை பிற எதுவும் இல்லை. வெறும் காகிதக் கட்டாய் வங்கியில் வட்டிக் காசு சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட பதினைந்து வருடமாய் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். ”எப்படி உங்களுக்கு இந்த நோய் வந்தது?” என்று கேட்டேன்.

”ஏசி” என்றார். ”பிறந்த நாள் முதல் இது நாள் வரையிலும் ஏசி இல்லாமல் இருந்ததே இல்லை” என்றார். அந்த ஏசி ஆக்சிஜனைக் குறைத்து விடுமாம். அது புற்று நோய் உருவாக ஏதுவாக இருப்பதால், உடலில் இருக்கும் ஒருவகை ஜீன் புற்று நோயை, குதி போட்டுக் கொண்டு வளர்க்க ஆரம்பிக்குமாம். டாக்டர் ”ஏசியில் இருப்பதைத் தவிருங்கள்” என்றுச் சொல்லி இருக்கிறார். சென்னை வெயிலில் எப்படி இருப்பார். அவரின் வீடு சில்லிட்டது. ”ஏசி இல்லாமல் என்னால் முடியவில்லை” என்றுச் சொன்னார்.

காசைக் கொட்டி, நோயை விலை கொடுத்து வாங்கி, மரண அவஸ்தையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு, இந்த நோய் விதியினால் வந்தது என்றா நினைக்கின்றீர்கள்? இல்லை இது அவரின் முட்டாள்தனத்தால் வந்தது.

நாமெல்லாம் வெளியூர் சென்றால் பாட்டிலில் அடைத்திருக்கும் தண்ணீரை வாங்கிக் குடிக்கின்றோமே அந்தப் பாட்டிலில் இருக்கிறது புற்று நோய்க்கான விதை. இதைப் பற்றிய கட்டுரை ஒன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருக்கிறது. தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

அன்பார்ந்த நண்பர்களே, உடம்பினைக் கோயில் என்றுச் சொல்வார்கள் முன்னோர்கள். சிறு வயதிலிருந்து உடம்பைப் பேணாமல், மனம் போன போக்கில் வாழ்வீர்கள் என்றால், பின்னாட்களில் நீங்கள் வாழ்க்கையை மரண அவஸ்தையோடு கழிக்க வேண்டி இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உணவில் எந்த உணவு உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

முக்கியக் குறிப்பு : நாளைக்கு பஞ்சு அண்ணாவின் குட்டிகளுடன் கும்மாளம் போட்ட கதை என்ற ஹாட் பதிவொன்றினை வெளியிடப் போகின்றாராம். உங்களிடம் சொல்லச் சொன்னார். சொல்லி விட்டேன்.

வாழ்க அன்போடு,

உங்கள் ஸ்ரீ


மஞ்சள் துண்டின் மனசு தொடர் 1

ஏப்ரல் 15, 2011

அன்பார்ந்த வாசக பெருமக்களே! வணக்கம்.

அனாதி அண்ணாவின் ஹோட்டலுக்கு காஃபி பொடி சப்ளை செய்யும் ஸ்ரீ ஆகிய நான் இனிமேல் ஆன்மீக சம்பந்தமாக சிலவற்றை எழுதப் போகிறேன். அதற்குள்ளே ஆரம்பிச்சுட்டானுங்கடா அறிவுரை சொல்ல என்று நினைத்து விடாதேள்.

அறிவுரை சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கிறது? நானென்ன முதல்வர் கருணாநிதியா? (தலைப்பிற்கு பொருத்தமாய் வந்து விட்டதா?).

மஞ்சள் என்பது மங்களத்தின் அறிகுறி. பொம்மனாட்டிகள் மஞ்சளை துண்டாய் எடுத்துதான் அம்மிக் கல்லில் வைத்து அரைத்து எடுப்பார்கள்.

அந்த மஞ்சள் துண்டு இறைவனின் நெற்றியை அலங்கரிக்கப் போவதால் தன்னைத் தானே வருத்தி அம்மிக் கல்லால் அடிக்கும் வலியைப் பொறுத்துக் கொள்ளுமாம். மானிட ஜென்மங்கள் இறைவனின் முன்னே அடி தொழுது நிற்கும் போது இறைவனின் முகத்தில் திலகமாய் தெரியும் நம்மையும் ஜீவிக்கின்றார்களே என்ற சந்தோசத்தால் அம்மிக்கல்லால் படும் வலியையும் மறந்து விடுமாம்.

அந்த மஞ்சள் துண்டின் மனசு தான் இனி உங்களுடன் பேசப் போகிறது.

ஆசை காட்டி மோசம் செய்வோரைத் தொழும் உலகத்தார் வீணிலே துன்பத்தில் உழண்டு, வேதனையில் சிக்கி சிதறிப் போவார்கள். ஒரு ரூபாய்க்கு பத்து விலை சேர்த்து,  கடன் தருகிறோம் என்றுச் சொல்லி, ஆசையைக் காட்டி விற்று விட்டு, காசு வரவில்லை என்றவுடன் கூப்பாடு போட்டு, அடியாளை விட்டு அடிக்க வைப்போரை தொழிலதிபர்கள் என்று சொல்லும் உலகத்தார் துன்பக் கேணியில் உழண்டு வெந்து நொந்து செத்துப் போவார்கள்.

– ஸ்ரீ


%d bloggers like this: