தகுதியற்றவர் தலைவரானால்

திமுகவின் எம்பி ரித்தீஸ் அவர்கள் தலித் ஒருவரை அடித்து உதைத்திருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி காவல்துறையினர் வழக்கு பதிந்திருக்கிறார்கள் என்கிறது செய்தி. இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு பெயிலே கிடைக்காது என்று சொல்கிறார்கள். நிச்சயமாய் ஆறுமாதம் சிறை கிடைக்க வேண்டும். ரித்தீஸ் அந்த தலித்தை அடித்து உதைத்ததை வீடியோ ஆதாரமாய் கொடுத்திருக்கிறார்கள். சட்டம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வழக்கம் போல பதவிக்கு முன்னே தலை குனிந்து சல்யூட் அடிக்குமா இல்லை அதன் கடமையைச் செய்யுமா என்பதை பார்க்கத்தான் போகிறோம்.

அடுத்து சுப்ரீம் கோர்ட் ஹசன் அலி விவகாரத்தில் மத்திய அரசை படுகாட்டமாக விமர்சித்திருக்கிறது. ஆனாலும் இதுவரை அவர்கள் கல்லுளிமங்கனாக இருக்கின்றார்கள். தேசத்துரோகம் குற்றம் செய்த, வெளி நாடுகளில் பணத்தைப் பதுக்கியவர்கள் மீது காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. தெஹல்ஹா பத்திரிக்கை யார் யாரெல்லாம் வெளி நாடுகளில் அக்கவுண்ட் வைத்திருக்கின்றார்கள் என்று பெயர்களை வெளியிட்டது. இந்திய நாட்டுக்கு துரோகம் செய்து, வரிப்பணத்தை ஏமாற்றி, கள்ளத்தனமாய் வெளி நாடுகளுக்கு பணத்தை கொண்டு செய்தவர்கள் மீது காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை.  அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் விசாரணை சரியில்லை என்று சுப்ரீம் கோர்ட் விமர்சிக்கின்றது. அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் நமது பாரதப் பிரதமர் மொஹாலியில் கிரிக்கெட் பார்க்கவிருக்கிறார்.  ஹசன் அலியை ஏன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கேட்கிறது. அமலாக்கப்பிரிவு இது வரை அதுபற்றி ஒன்றும் பேசவில்லை. அதுமட்டுமா, கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களிடம் அந்த ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் என்று அரசு வரி வசூல் செய்ய முயற்சிக்கிறது. குற்றவாளிகளை கைது செய்யாமல் ஏன் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்திய மக்களை அடிமுட்டாளாக்கி ஏமாற்றி வருகிறது காங்கிரஸ் கட்சி.

இது பற்றிய செய்தியை கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பாருங்கள். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=215305

இதோ இன்றைய செய்திதாளில் முதல்வர் ”ஸ்பெக்டரம் ஊழலே அல்ல” என்று அறிக்கை விட்டிருக்கிறார். பின்னே ஏன் மந்திரி ராஜா ஜெயிலில் கிடக்கிறார் என்று தெரியவில்லை. ராஜா மீது 80,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் போகின்றார்கள். அதற்குள் டிஆர் பாலு சோனியாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். பத்திரிக்கைகள் எதற்கு சந்தித்தீர்கள் என்று கேட்டால் தேர்தலைப் பற்றி பேசினோம் என்கிறார் பாலு. கேட்கின்றவன் கேனயப்பயல்கள் என்றல்லவா நினைத்திருக்கிறார்கள் இவர்கள். அதுமட்டுமா கலைஞர் டிவிக்கு வந்த பணம், வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்கிறார் கனிமொழி. என்னே ஒரு ஏமாற்று வித்தை. திமுக எப்படியெல்லாம் ஊழல் செய்யும் என்ற, சர்காரியா கமிஷனின் அறிக்கையை ஒருவரும் படிக்கவில்லை என்று கனிமொழி எண்ணி இருக்கிறார் போலும். தகுதியற்ற கம்பெனிக்கு திமுக மந்திரி, ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்குகின்றார். அந்தக் கம்பெனியிலிருந்து பணம் பெறாமல், இரண்டு கம்பெனிகள் மூலமாய் பணத்தை வரவு வைத்திருக்கிறார் கனிமொழி. கனிமொழியும் ராசாவும் டெல்லியில் அரசியல் லாபி செய்தவர்கள். ஏன் அக்கம்பெனி பணம் கொடுத்தது என்று யாருக்கும் தெரியாது என்று எப்படி இவர் சொல்கிறார்? காரணம் மக்கள் முட்டாள்கள் என்று நிச்சயமாய் நம்புகிறார்கள் இவர்கள்.

அரசன் அன்று கொல்வான். ஆனால் தெய்வம் நின்று கொல்லும்.

தகுதியற்றவர்கள் தலைவர்களானால் இப்படித்தான் நடக்கும்.

– பஞ்சரு பலராமன்

2 Responses to தகுதியற்றவர் தலைவரானால்

  1. narendran சொல்கிறார்:

    only solution is….. register your vote on “49 O”

  2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    thalaimai “kurangku” sellum vazhiyilthaan thondar kurangkum sellum!!! Iyaiyoo !! Tamilnaatai intha manitha kurangkukalidamirunthu kaappatru, kadavulae!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: