காட்டுறோம் காட்டுறோம் பாருங்க பாருங்க

 

 

 

அன்பு வாசகர்களே,

காட்டியதைப் பார்த்து விட்டீர்கள். சினிமாக்கள் எதைக் காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இன்னுமொரு சம்பவத்தை இவ்விடத்தில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். அதை நீங்கள் நிச்சயம் படித்துதான் ஆக வேண்டும்.

தமிழ் நாடா அல்லது ஏழைகளின் சுடுகாடா

இதோ கீழே இருக்கும் ஜூனியர் விகடனில் வந்த பத்தியைப் படித்து விட்டு மேலே இருக்கும் தலைப்புச் சரியா இல்லை தவறா என்பதை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.

‘மாநிலத்தின் வசதியான ஒரு பதவியில் இருக்கும் மனிதர்,இதற்குப் பிறகும் தொடர்ந்து தனக்கு அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்று வெறிகொள்கிறார். மாந்திரீக ஆலோசனைகள் நடக்கின்றன. அதன்படி, அந்த மனிதரின் ஆளுகைக்கு உட்பட்ட ஏரியாவில் விளையாடிக்கொண்டு இருக்கும் எட்டு வயது சிறுமி ஒருத்தி, அடியாட்களின் உதவியோடு கோழிக் குஞ்சாக அமுக்கித் தூக்கிச் செல்லப்படுகிறாள்.துள்ளத் துடிக்க அந்தச் சிறுமி நரபலி கொடுக்கப்படுகிறாள். சிறுமி மர்ம மரணத்தின் பின்னணி புரியாமல், காவல் துறை சுறுசுறுப்பாக விசாரிக்கிறது. அவளைக் கொன்ற அடியாளை அமுக்கிவிடுகிறது. ஆனால், பிடிபட்டு போலீஸ் விசாரணைக்குப் போன சில நாட்களிலேயே அந்த அடியாளின் நாக்கு எப்படியோ அறுந்து போகிறது. பேச முடியாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலத்த காவலில் இருந்தபோதும்… மர்மமான முறையில் இறந்து போகிறார் அடியாள். அவருடைய ஒரே சொந்தமான தந்தையின் மரணமும் அதைத் தொடர்கிறது!மேற்கொண்டு இதில் எப்படி நகர்வது என்று தெரியாமல், கைகள் கட்டிப் போடப்பட்ட நிலையில் காவல் துறை தவிக்க… விஷயம் அறிந்து வழக்கில் துப்பு துலக்க முயலும் சில உயர் அதிகாரிகள் திடீரென்று அந்த ஏரியாவைவிட்டுத் தூக்கி அடிக்கப்படுகிறார்கள். சிறுமி மரணத்தில் மர்மம் விலகுமா? பதவிக்காகத்தான் இந்த பயங்கரம் நடந்ததா என்று காவல் துறை விசாரித்து உறுதி செய்யுமா? தெலுங்கு டப்பிங் படங்களை மிஞ்சும் இது – கதையல்ல நிஜம். காட்சிகள் மாறி, காவல் துறையின் கைகளுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது பதில்கள் தெரிய வரலாம்!” என்ற கழுகார் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

 

படித்து விட்டீர்களா? இப்போது உங்கள் மனதில் எழக்கூடிய உணர்வினை எழுதுங்கள் பார்ப்போம்.  மனித வாழ்க்கையின் குரூரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு மேற்கண்ட படங்களும், ஜூனியர் விகடனில் வெளிவந்த கழுகார் செய்தியும் எடுத்துகாட்டாய் நிற்கின்றன.

அன்புடன்

உங்களின் பிரிய குஞ்சாமணி

(திருந்தலாம்னு நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை)

 

3 Responses to காட்டுறோம் காட்டுறோம் பாருங்க பாருங்க

  1. ajith சொல்கிறார்:

    super kunju sir

  2. babu சொல்கிறார்:

    அஜால் குஜால் படத்தை போட்டுட்டு‍,கடைசியில் கண்களை பனிக்கச் செய்து‍ விட்டீர்களே

  3. babu சொல்கிறார்:

    ஆஹா தலைப்பே செம கிக்கே இருக்கே. குஞ்சு‍ சார் சீக்கிரம் பதிவை ஆரம்பிங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: