நாய் குணமும் அரசியல் வேஷமும்

கடந்த வாரம் நண்பரொருவரின் அழைப்பை ஏற்று, அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர் சினிமா உலகின் பிதாமகர். சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

“குரங்குகள் பன்னுக்காக அடித்துக் கொள்கின்றன” என்றார்.

“அரசியல் என்றால் டெட் எண்ட் ரிஸ்க் அல்லவா?” என்று கேட்டேன்.

“ஆமாம். பதவியின் சுகத்தில் திளைத்தவர்கள் பதவியில்லாமல் இருப்பது செத்த பிணத்திற்குச் சமானம் என்று கருதுவார்கள்” என்றார்.

”மனிதர்கள் ஒவ்வொருவரும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. ஒவ்வொருவருக்குள் பெரும் அணுகுண்டுகள் இருக்கின்றன. மிகவும் ஆபத்தானவர்கள். கட்டுப்பாடுகள் இல்லா மனிதன் மிகவும் மோசமான கொடூரமானவன் என்றுச் சொல்வார்கள். இந்தக் கட்டுப்பாட்டினை ஏழைகள் மட்டுமே வலிந்து சுமப்பர். இக்கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிவது பணமும் பதவியும்” என்றார் தொடர்ந்து.

”ஏன் இப்படி சொல்கின்றீர்கள்?” என்றேன்.

”குஞ்சு, சினிமா உலகில் அரசியல் பற்றிப் படமெடுத்து வரும் ஒருவரின் அந்தரங்கம் பற்றிச் சொல்லப் போகின்றேன். புதுமுகம் அதுவும் கன்னி கழியாத பெண்களாய் பார்த்து, பிடித்து வந்து, அவளை மோகிப்பதும், அவளையே பிறரை அனுபவிக்க வைத்து பார்த்து ரசிப்பதுமாய் இன்று வரைக்கும் அவரின் அழிச்சாட்டியம் குறைந்த பாடில்லை. இவரைப் பற்றிய ஒவ்வொரு ஆதாரத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டு, இவர் எப்போது வெளிப்படுவார், அப்போது இவருக்கு பெரும் ஆப்பு அடிக்கலாம் என்று சினிமா உலகில் ஒரு குரூப்பே காத்துக் கொண்டிருக்கிறது. இவர் அந்த நடிகைகளிடம் கொட்டுவது அரைக் கோடிகள் ” என்றார்.

”யார் அது?” என்றேன்.

காதருகில் வந்து மெதுவாய்ச் சொன்னார்.

கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. ”தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலனுண்டு என்பதை இவர் நிச்சயம் ஒரு நாள் அறிந்து கொண்டு விடுவார்” என்றுச் சொல்லி அத்துடன் பேச்சை முடித்தேன்.

அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் பற்றிய பேச்சு வர, ”காமெடி டைம் முடிந்து விட்டதே” என்றுச் சொல்லி கட் செய்ய, மனிதர் “அனுஷ்காவைப் பற்றிப் பேசலாமா?” என்றார்.

”ஆஹா, ஆஹா” என்றேன்.

முறைத்தார்.

– குஞ்சாமணி

 

2 Responses to நாய் குணமும் அரசியல் வேஷமும்

  1. pondumani சொல்கிறார்:

    please remove my previous comment, I realised that it is a bad idea to have a nasty comment.
    Thanks

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: