தேர்தல் கமிஷன் கவனத்திற்கு

திமுகவினரின் தேர்தல் அறிக்கையை தேர்தல் கமிஷன் எப்படி அனுமதிக்கிறது என்பதே புரியவில்லை. நாங்கள் ஜெயித்தால் இன்னின்ன இலவசம் என்று தேர்தல் அறிக்கை வெளியிடுவதே ஓட்டுக்கு லஞ்சமாய் கொடுப்பது போலத்தான். ஓட்டுப் போட்ட பின்பு கொடுக்கும் கையூட்டை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன், ஓட்டுப் போடுவதற்கு முன்பு கொடுக்கும் கையூட்டை தடுப்பது எவ்விதத்தில் நியாயம்?

ஆகவே இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சியின் தேர்தல் அறிக்கையினையும் கமிஷன் தடுத்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெரும்பான்மையான மக்கள் நலத்திட்டங்களையும், ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான நலத்திட்டங்களையும் மட்டும் தான் தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும்.

இலவச அரிசி, இலவச டிவி, இலவச கிரைண்டர், இலவச மொபைல், இலவச மிக்சி என்பதெல்லாம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படப்போகும் லஞ்சம் என்பதை மீடியாக்கள் கூட எழுத மறுக்கின்றன.

எவரும் இதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்கள். பொது நலத்தில் அக்கறை உடையவர்கள் இலவச அறிக்கையின் லட்சணத்தை தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்தி, இவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளைத் தடை செய்ய வேண்டும்.

தேர்தல் கமிஷன் சிந்திக்குமா?

– பஞ்சரு பலராமன்

4 Responses to தேர்தல் கமிஷன் கவனத்திற்கு

 1. sethuraman சொல்கிறார்:

  Yes. u are 100% correct.

 2. mohna சொல்கிறார்:

  நான் இதை வழிமொழிகின்க்றேன், மேலும் தங்களுக்கு முன்பே நண்பர்கிளடமும் மற்றும் அனைவரிடத்திலும் கூறுவது யாதெனில் “Election Commission” திட்ட வட்டமாக வரையறுக்க வேண்டும் “கட்சிகள் அறிவிக்கும் வாக்குறுதி பட்டியலே இலவசம் எனும் வார்த்தையே இடம் பெற கூடாது” என்று சட்டமாகவே இயற்ற வேண்டும்

 3. krishna சொல்கிறார்:

  கேடு கெட்ட நாடு இது … விட்டுருங்க பாஸ் எப்படியோ அழிந்து தொலையட்டும்…. மக்களுக்கு ஓரளவு கல்வி அறிவு வந்து 20 வருடமாகிறது தமிழகத்தில்.. ஆனால் இன்னும் நாங்கள் விழிக்கமாட்டோம்… அடுத்தவர் துதி பாடி அவர் போடும் பிச்சைகளை ஏற்போம் என்ற மன நிலையில் உள்ளவர்களை நாம் எந்த இனத்தில் சேர்ப்பது… கேட்டும் திருந்தாத ஜென்மங்கள்…

 4. muru சொல்கிறார்:

  boath are same

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: