வெட்கமாயிருக்கிறது தமிழனென்றுச் சொல்ல

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்ட பால்வாவிற்கு டி கம்பெனியின் தாவூத் இப்ராகிமுடனும், சோட்டா ஷகிலுடனும் தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் பால்வாவின் உறவினர்களின் மீது கொலைக்குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக அண்டர்வேர்ல்ட் கேங்க்குகளுடன் பாவ்லாவிற்கு தொடர்பு இருப்பதாக ஒரு சீனியர் ஆஃபிசர் சொன்னதாகவும் எழுதி இருக்கிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தலைமை வகித்த திரு ராஜாவிற்கும் மேற்படி தொடர்புகள் இருக்க கூடுமோ என்ற சந்தேகமும் எழுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஸ்பெக்ட்ரம் ராசாவிற்கு ஆதரவாய் இருக்கும் கட்சி பற்றியும் நமக்கு பெரும் சந்தேகமும் எழுவதில் வியப்பேதும் இல்லை. இதையெல்லாம் விடுத்து இப்படிப்பட்டவர்களிடம் கூட்டணி போட்டவர்களின் தகுதி பற்றியும் நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

காசுக்காக இந்தளவுக்கு கீழே இறங்குவார்களா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை என்கிற போது, நம்பித்தான் ஆக வேண்டும்.

மக்கள், மக்கள் என்றுச் சொல்வதெல்லாம் வெளி வேஷம் என்பதும், நாட்டின் மீது பற்றே இல்லாதவர்கள் இந்த அரசியல்வாதிகள் என்பதும் நமெக்கெல்லாம் நன்கு புலப்படுகிறது. ஆயினும் இன்னும் கூட கொஞ்சம் கூட கவலையே படாமல்,  மனச்சாட்சி இல்லாமல் எப்படி இவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்கிற போது, இந்த மாதிரி அரசியல்வாதிகளை நம்புவர்களையும், ஆதரிப்பவர்களையும் பார்க்கிற போது ”அரக்கர்களை” பார்ப்பது போல தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தீவிரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள். இந்தியாவின் பாதுகாப்பு அட்சர சுத்தமாய் வெளி நாட்டுச் சக்திகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் காரணமானவர்களை ஆதரிப்பவர்களை என்னவென்று சொல்லுவது? அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டு போரிட ஆரம்பித்தவன் ஒரு தமிழன். ஆனால் இன்றைக்கு இந்தியாவையே விற்றவர்களும் ஒரு தமிழ் கொள்ளைக் கூட்டம் என்கிற போது நாம் ஏன் தமிழனாய் பிறந்தோம் என்று வெட்கப்பட வேண்டி இருக்கிறது.

– பஞ்சரு பலராமன்

6 Responses to வெட்கமாயிருக்கிறது தமிழனென்றுச் சொல்ல

 1. M.S.Vasan சொல்கிறார்:

  தாவூதின் தொட‌ர்ப்பு, க‌றையான் புற்றாய் இந்தியாவின் எல்ல‌த்துறை‌க‌ளிலும் குறிப்பாய் அர‌சிய‌ல், விளையாட்டு, சினிமா, ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வான்வ‌ழி, ப‌ங்குச்ச‌ந்தை ஆகிய‌வற்றில் ப‌ல‌ கால‌மாய் இருந்து வ‌ருகிற‌து. ம‌த்திய‌ ம‌ந்திரிக‌ள், பெரும் வ‌ணிக‌ர்க‌ள், ப‌ங்குச்ச‌ந்தை முத‌லீட்டாள‌ர்க‌ள், நில‌ த‌ர‌க‌ர்க‌ள், க‌ட்ட‌ட‌ அமைப்பின‌ர், மும்பை சினிமா சூப்ப‌ர் ஸ்டார்க‌ள், கிரிகெட் வீர‌ர்க‌ள், த‌னியார் விமானக் க‌ம்ப‌னி முத‌லாளிக‌ள் என ப‌ல‌ரும் அவ‌ர‌து வ‌லைக்குள் தான். அமெரிக்கா எப்ப‌டி வ‌ல்ல‌ரசாய் ம‌ற்ற‌ நாட்டினிரை ஆட்டுவிக்கிற‌தோ, அதே போல் இந்தியாவின் பொருளாத‌ர‌ த‌ல‌ந‌க‌ரை ஆட்டுவித்துக் கொண்டிருப்ப‌து, இங்கிருந்து ஓடி, பாகிஸ்தானிலும், துபாயிலும் வாழும் தாவூத் தான். ச‌ட்ட‌ம், ஒழுங்கு, வ‌ரி, வ‌ட்டி, வாக்குச்சீட்டு, அடையாள அட்டை, மீன‌வ‌ர் கொலை, எந்திர‌ன் சினிமா, ந‌டிக‌ர் ந‌டிகைக‌ள் கிசுகிசு, ச‌ன் டிவி சீரிய‌ல், மானாட‌ ம‌யிலாட‌, கிரிக்கெட், அர‌சிய‌ல், டாஸ்மாக் என ச‌ராசரி இந்திய‌னாய் செத்துச் செத்து வாழும் இந்தியனாய் நாம். (இது க‌ட‌ந்த‌ மும்பை ப‌ங்குச்ச‌ந்தை குண்டு வெடிப்பிக்கு முன்பிருந்தே அர‌சிய‌ல்வாதிக‌ளுக்கு, ஊட‌க‌ங்க‌ளுக்கு தெரிந்த‌ மிக‌ப்ப‌ழைய‌ செய்திதான்).

 2. babu சொல்கிறார்:

  கொள்ளை கூட்டம் இந்தியா முழுவதும் அடித்துக் கெண்டேதான் இருக்கிறது. நாட்டுக்கு‍ துரோகம் இழைப்பவர்கள் நாடும் முழுவது‍ம் இருந்து‍ கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் 2Gஐ குறிப்பிடும்போது‍ ஊழல், கொள்ளை கூட்டம், தேசத் துரோகம் என்ற சொற்களை பயன்படுத்துவது‍ சரிதான். ஆனால் தேவையில்லாமல் தமிழன், தமிழன் என கூறுவது‍ சரியாகப்படவில்லையே. தமிழ்நாடு‍ முழுக்க கொள்ளைக் கும்பலே வாழ்ந்து‍ கொண்டிருப்பது‍ போலவும், நாமெல்லாம் கொள்ளை அடிப்பதற்காகவே அவர்களை தேர்ந்தெடுத்து‍ அனுப்பியது‍ போலவும் அல்லவா அர்த்தப்படுத்துகிறீர்கள். தமிழன் என சந்தோஷப்படுவதற்கு‍ நிறைய விடயங்கள் இருப்பதாக கருதுகிறேன்.

  • அனாதி சொல்கிறார்:

   பாபு உங்களின் பதில் வியப்பேதும் ஏற்படுத்தவில்லை. தமிழர்களை அடையாளப்படுத்துவது அரசியல். அரசியலை ஒட்டித்தான் பிற நிகழ்வுகளும் நிகழ்கின்ற போது, அரசியல் தலைவர்களின் மீதான குற்றச்சாட்டுகளும், குற்றங்களும் முழு இனத்திற்குமான அடையாளமாகத்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. டெல்லியில் சென்று பாருங்கள். தமிழன் என்றால் பிறர் சொத்துக்கும், அரசுக்கும் தீங்கிழைப்பவன் என்று கிண்டலடிக்கின்றார்கள். இங்கிலாந்து சென்று இந்தியன் என்றுச் சொல்லிப் பாருங்கள். படு கேவலம். எங்குச் சென்றாலும் இந்தியனான தமிழனால் தலைகுனிவே ஏற்படுகிறது. நன்கு விசாரித்துப் பாருங்கள். மற்றபடி தமிழர் கலாச்சாரம், தமிழ் பண்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து வருகிறது. அது நிச்சயம் ஒரு நாள் மீளும். அது மனிதக் கலாச்சாரத்தின் நன்மைக்கு உதவும் என்பதால். – பலராமன்

 3. thendral சொல்கிறார்:

  நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மாந்தரை நினைந்துவிட்டால் …… சொல்லடி சிவசக்தி… இந்த பாவிகளை கொல்லடி சிவசக்தி கொல்லடி….

 4. மு.சரவணக்குமார் சொல்கிறார்:

  வெறும் பத்திரிக்கை செய்திகளை மட்டுமே வைத்து தீர்ப்பெழுதிவிட்டீர்கள்.நீங்கள் குறிப்பிடும் செய்தியினை நானும் படித்தேன்….அநேகமாய் ஒரு சினிமா கிசு கிசுவின் பாணியில்தான் எழுதப் பட்டிருக்கிறது அந்த செய்தி.

  இதற்காகவெல்லாம் உங்கள் அடையாளத்தை நினைத்து வெட்கப் படுகிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். தேவைக்கதிகமாய் உணர்ச்சிவயப் படுவது உடலுக்கும், மனதிற்கும் நல்லதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: