திமுக கூட்டணியை தோற்கடிக்கும் வழிகள்

எதிர் கட்சிக் கூட்டணிகள் ஒன்றாய்ச் சேர்ந்து வெகு அழகாய் காய் நகர்த்தினால் காங்கிரஸ் மற்றும் திமுகவினரை முற்றிலுமாய் ஒரு சீட்டுக் கூட வெற்றி பெற விடாமல் செய்து விடலாம்.

டிவி மூலமும், தினசரிகள் மூலமும் பிரச்சார உத்தி என்பது திமுகவினர் முன்னால் நடக்காது. ஏனென்றால் மீடியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ஆக, நேரடிப் பிரச்சாரம் மட்டுமே பலன் தரும். அப்பிரச்சாரத்திற்கான உத்திகளைத்தான் இப்போது சொல்லப் போகின்றேன்.

148 டாலராய் கச்சா எண்ணெய் இருந்த போது பெட்ரோல் விலை 42 ரூபாய் இருந்தது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பொறுத்து தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறது. ஆனால் தற்போது 100 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை இருக்கும் போது பெட்ரோல் விலை ரூபாய் 63 ஆக இருப்பதை, இதில் இருக்கும் கொள்ளையை மக்களுக்கு பிட் நோட்டீஸ், வீடு வீடாய் பிரச்சாரம், சிடிக்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.

அடுத்து திமுகவினரின் கூட்டுக் கொள்ளையும் கண்டு கொள்ளாத காங்கிரஸ் அரசும் என்பது பற்றிய பிரச்சாரம். இன்றைய திமுக தலைவரின் குடும்பவாரிசுகளின் சொத்துப் பட்டியலை ஒவ்வொரு வீட்டிலும் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமா ஸ்பெக்ட்ரம் பற்றி ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வெளி வந்த கட்டுரைகளையும், கொள்ளையடித்த பண விபரத்தையும் விரிவாய் பிட் நோட்டீஸ், சிடிக்கள் மூலமாய் ஒவ்வொரு வீட்டிற்கும் தெரிவிக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இந்திய மக்களை கொல்லத்துடிக்கும் தீவிரவாதிகளிடம் தொடர்புடையவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் திமுகவினரைப் பற்றியும் தனிப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அடுத்து, ஒவ்வொரு மந்திரியும் வைத்திருக்கும் கல்லூரி,பள்ளிகள், பிசினஸ் பற்றியும், திமுகவினரின் சினிமா, மீடியா மற்றும் அனைத்து சொத்துப் பட்டியல்களும் ஒவ்வொரு வீட்டிலும் கிடைக்கும் படிச் செய்ய வேண்டும்.

காங்கிரஸ்ஸும், திமுகவும் சேர்ந்து கொண்டு இலங்கை தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்த விபரங்களை ஒவ்வொரு தமிழனின் நினைவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு மேலும் இன்னும் பல உத்திகள் உண்டு.

மேற்படி பிரச்சார உத்திகளைச் செய்தாலே போதும். திமுக கூட்டணி மண்ணைக் கவ்வி விடும்.

செய்வார்களா எதிர்கட்சிகள் ??????

பொறுத்திருந்து பார்ப்போம்.

– பஞ்சரு பலராமன்

4 Responses to திமுக கூட்டணியை தோற்கடிக்கும் வழிகள்

  1. M.S.Vasan சொல்கிறார்:

    ம‌திம‌க‌ கேட்ட‌ 21ல் குறை(ரை‌)த்துள்ள வெறும் 9 தொகுதிக்காக‌, கிடைக்கும் தூரத்திலுள்ள‌ அர‌சு வாய்ப்பை, ஜெயா ந‌ழுவ‌ விடும் சூழல் அதிக‌ரித்திருக்கிற‌து. ந‌மக்கு பீகார் நிதீஸ் குமார் போன்ற‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் கிடைப்ப‌தில்லை. காம‌ராஜ‌ரை தோற்க‌டித்து திமுக‌வைக் கொண்டுவ‌ந்த‌ ந‌மக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும். எப்ப‌டிப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் வாழ்ந்த‌ ம‌ண் இது.ஹும்…

  2. நல்ல உத்தி தான். ஆனால் அவர்களும் ஜெ ஆட்சியில் நடந்த ஊழல்களை, பழைய குப்பைகளை கிளறி பிட் நோட்டீஸ் அடிக்க வாய்ப்பிருக்கிறது.

    இருந்தாலும் எந்த கொள்ளியில் நல்ல கொள்ளி என்று பார்த்தால் அதிமுக கூட்டணி தேவலாம் என்று தோன்றுவதால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது

  3. வேந்தன் சொல்கிறார்:

    நண்பனே கடைசியில் எங்கள் இனத்தை கொன்ற படுபாதகத்தை மறந்துவிட்டிர்களே நியாயமா உங்களுக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: