மர்மம் நிறைந்த திமுக காங்கிரஸ் பிரச்சினை

ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் தன் மகளுக்கு சிபிஐ மூலம் வந்த ஓலையைக் கண்டு கதிகலங்கிய முதல்வர், அதைத் தடுக்கும் விதமாய் சில காய்களை நகர்த்தியதாகவும், விஷயம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் கை விரித்து விட்டதாகவும், அதன் தொடர்ச்சியாய் காங்கிரஸ்ஸுக்கு கடைசி செக் வைக்கும் முயற்சியாகத்தான் கூட்டணி விலகல் அறிக்கை என்றும் அரசியலில் கொட்டையும் பழமும் போட்டவர்கள் சொல்கின்றார்கள்.

இந்தச் சூழலில் திமுக குடும்ப டிவிக்களில் இதுகாறும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளில் தலைகாட்டா கனிமேடம், உயிர் போன கோழிக்குஞ்சாய் முகத்தை வைத்துக் கொண்டு தலைக் காட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட என் நண்பர் “ஆஸ்கார் அவார்டு நடிப்பு” என்று விமர்சித்தார்.

உலகமே அதிரும் ஊழல் மன்னன் ராஜா அனைத்து விஷயங்களையும் சிபிஐயிடம் கக்கி விட்டதாகவும், சுப்ரீம் கோர்ட்டின் கழுகுப் பார்வையின் கீழ் விசாரணை செல்லுவதாலும் திமுகவின் எதிர்காலம் அதோகதியாய் நிற்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்தச் சூழலில் காங்கிரஸ் திமுகவை முற்றிலுமாய் அரசியலில் இருந்தே அழித்து விட முயற்சிப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஸ்பெக்ட்ரம் பணம் திமுகவின் தலைவர் குடும்பத்தில் டெபாசிட்டாக வந்து விட்டதை சிபிஐ மோப்பம் பிடித்து, அதை மேலிடத்தில் ரிப்போர்ட்டாக கொடுத்து விட்டதாகவும், இதொன்றினை வைத்தே தமிழக அரசியலில் ஒரு கட்சியை துடைத்தெரிந்து விட காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனாலும் இவை எதையும் நான் நம்பப்போவதில்லை. திமுகவும், காங்கிரஸ்ஸும் மக்களை திசை திருப்பவும், ஸ்பெக்ட்ரம் விஷயத்தை மறைக்கவும் இந்த அதிரடி சம்பவங்களை உருவாக்குகின்றனவோ என்ற சந்தேகம் எழுந்து கொண்டே இருக்கிறது.

அரசியல் என்பதை மக்களை முட்டாளாக்குவது என்பதை நம் வாசக நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவை எழுதுகிறேன்.

– அனாதி

 

 

 

2 Responses to மர்மம் நிறைந்த திமுக காங்கிரஸ் பிரச்சினை

  1. L.C.NATHAN சொல்கிறார்:

    UNMAIYAANA SEITHI!! THAMIZH NAATIL IRUNTHU CONGRESS KATCHIYUM THI MU KA VUM THOLAIYANUM!!

  2. krishna சொல்கிறார்:

    அப்போ உறுதியா நடவடிக்கை இருக்கும்னு சொல்லறீங்களா… ரொம்ப சந்தோசம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: