திமுக ஆட்சி மக்களுக்கு செய்த நன்மை

மார்ச் 31, 2011

இந்தக் கார்ட்டூன்களை அளித்தவர்களுக்கு மிக்க நன்றி. திமுக கட்சியின் ஆட்சியைப் பற்றிய கார்ட்டூன்கள் இவை. வெகு சுவாரசியமாய் இருக்கிறது. – பஞ்சரு பலராமன்


தகுதியற்றவர் தலைவரானால்

மார்ச் 30, 2011

திமுகவின் எம்பி ரித்தீஸ் அவர்கள் தலித் ஒருவரை அடித்து உதைத்திருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி காவல்துறையினர் வழக்கு பதிந்திருக்கிறார்கள் என்கிறது செய்தி. இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு பெயிலே கிடைக்காது என்று சொல்கிறார்கள். நிச்சயமாய் ஆறுமாதம் சிறை கிடைக்க வேண்டும். ரித்தீஸ் அந்த தலித்தை அடித்து உதைத்ததை வீடியோ ஆதாரமாய் கொடுத்திருக்கிறார்கள். சட்டம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வழக்கம் போல பதவிக்கு முன்னே தலை குனிந்து சல்யூட் அடிக்குமா இல்லை அதன் கடமையைச் செய்யுமா என்பதை பார்க்கத்தான் போகிறோம்.

அடுத்து சுப்ரீம் கோர்ட் ஹசன் அலி விவகாரத்தில் மத்திய அரசை படுகாட்டமாக விமர்சித்திருக்கிறது. ஆனாலும் இதுவரை அவர்கள் கல்லுளிமங்கனாக இருக்கின்றார்கள். தேசத்துரோகம் குற்றம் செய்த, வெளி நாடுகளில் பணத்தைப் பதுக்கியவர்கள் மீது காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. தெஹல்ஹா பத்திரிக்கை யார் யாரெல்லாம் வெளி நாடுகளில் அக்கவுண்ட் வைத்திருக்கின்றார்கள் என்று பெயர்களை வெளியிட்டது. இந்திய நாட்டுக்கு துரோகம் செய்து, வரிப்பணத்தை ஏமாற்றி, கள்ளத்தனமாய் வெளி நாடுகளுக்கு பணத்தை கொண்டு செய்தவர்கள் மீது காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை.  அமலாக்கப்பிரிவு அதிகாரிகளின் விசாரணை சரியில்லை என்று சுப்ரீம் கோர்ட் விமர்சிக்கின்றது. அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் நமது பாரதப் பிரதமர் மொஹாலியில் கிரிக்கெட் பார்க்கவிருக்கிறார்.  ஹசன் அலியை ஏன் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கேட்கிறது. அமலாக்கப்பிரிவு இது வரை அதுபற்றி ஒன்றும் பேசவில்லை. அதுமட்டுமா, கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களிடம் அந்த ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் என்று அரசு வரி வசூல் செய்ய முயற்சிக்கிறது. குற்றவாளிகளை கைது செய்யாமல் ஏன் ஒப்பந்தம் போடுகிறார்கள் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்திய மக்களை அடிமுட்டாளாக்கி ஏமாற்றி வருகிறது காங்கிரஸ் கட்சி.

இது பற்றிய செய்தியை கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பாருங்கள். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=215305

இதோ இன்றைய செய்திதாளில் முதல்வர் ”ஸ்பெக்டரம் ஊழலே அல்ல” என்று அறிக்கை விட்டிருக்கிறார். பின்னே ஏன் மந்திரி ராஜா ஜெயிலில் கிடக்கிறார் என்று தெரியவில்லை. ராஜா மீது 80,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் போகின்றார்கள். அதற்குள் டிஆர் பாலு சோனியாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். பத்திரிக்கைகள் எதற்கு சந்தித்தீர்கள் என்று கேட்டால் தேர்தலைப் பற்றி பேசினோம் என்கிறார் பாலு. கேட்கின்றவன் கேனயப்பயல்கள் என்றல்லவா நினைத்திருக்கிறார்கள் இவர்கள். அதுமட்டுமா கலைஞர் டிவிக்கு வந்த பணம், வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்கிறார் கனிமொழி. என்னே ஒரு ஏமாற்று வித்தை. திமுக எப்படியெல்லாம் ஊழல் செய்யும் என்ற, சர்காரியா கமிஷனின் அறிக்கையை ஒருவரும் படிக்கவில்லை என்று கனிமொழி எண்ணி இருக்கிறார் போலும். தகுதியற்ற கம்பெனிக்கு திமுக மந்திரி, ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்குகின்றார். அந்தக் கம்பெனியிலிருந்து பணம் பெறாமல், இரண்டு கம்பெனிகள் மூலமாய் பணத்தை வரவு வைத்திருக்கிறார் கனிமொழி. கனிமொழியும் ராசாவும் டெல்லியில் அரசியல் லாபி செய்தவர்கள். ஏன் அக்கம்பெனி பணம் கொடுத்தது என்று யாருக்கும் தெரியாது என்று எப்படி இவர் சொல்கிறார்? காரணம் மக்கள் முட்டாள்கள் என்று நிச்சயமாய் நம்புகிறார்கள் இவர்கள்.

அரசன் அன்று கொல்வான். ஆனால் தெய்வம் நின்று கொல்லும்.

தகுதியற்றவர்கள் தலைவர்களானால் இப்படித்தான் நடக்கும்.

– பஞ்சரு பலராமன்


காட்டுறோம் காட்டுறோம் பாருங்க பாருங்க

மார்ச் 26, 2011

 

 

 

அன்பு வாசகர்களே,

காட்டியதைப் பார்த்து விட்டீர்கள். சினிமாக்கள் எதைக் காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இன்னுமொரு சம்பவத்தை இவ்விடத்தில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். அதை நீங்கள் நிச்சயம் படித்துதான் ஆக வேண்டும்.

தமிழ் நாடா அல்லது ஏழைகளின் சுடுகாடா

இதோ கீழே இருக்கும் ஜூனியர் விகடனில் வந்த பத்தியைப் படித்து விட்டு மேலே இருக்கும் தலைப்புச் சரியா இல்லை தவறா என்பதை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.

‘மாநிலத்தின் வசதியான ஒரு பதவியில் இருக்கும் மனிதர்,இதற்குப் பிறகும் தொடர்ந்து தனக்கு அந்தப் பதவி கிடைக்க வேண்டும் என்று வெறிகொள்கிறார். மாந்திரீக ஆலோசனைகள் நடக்கின்றன. அதன்படி, அந்த மனிதரின் ஆளுகைக்கு உட்பட்ட ஏரியாவில் விளையாடிக்கொண்டு இருக்கும் எட்டு வயது சிறுமி ஒருத்தி, அடியாட்களின் உதவியோடு கோழிக் குஞ்சாக அமுக்கித் தூக்கிச் செல்லப்படுகிறாள்.துள்ளத் துடிக்க அந்தச் சிறுமி நரபலி கொடுக்கப்படுகிறாள். சிறுமி மர்ம மரணத்தின் பின்னணி புரியாமல், காவல் துறை சுறுசுறுப்பாக விசாரிக்கிறது. அவளைக் கொன்ற அடியாளை அமுக்கிவிடுகிறது. ஆனால், பிடிபட்டு போலீஸ் விசாரணைக்குப் போன சில நாட்களிலேயே அந்த அடியாளின் நாக்கு எப்படியோ அறுந்து போகிறது. பேச முடியாத நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலத்த காவலில் இருந்தபோதும்… மர்மமான முறையில் இறந்து போகிறார் அடியாள். அவருடைய ஒரே சொந்தமான தந்தையின் மரணமும் அதைத் தொடர்கிறது!மேற்கொண்டு இதில் எப்படி நகர்வது என்று தெரியாமல், கைகள் கட்டிப் போடப்பட்ட நிலையில் காவல் துறை தவிக்க… விஷயம் அறிந்து வழக்கில் துப்பு துலக்க முயலும் சில உயர் அதிகாரிகள் திடீரென்று அந்த ஏரியாவைவிட்டுத் தூக்கி அடிக்கப்படுகிறார்கள். சிறுமி மரணத்தில் மர்மம் விலகுமா? பதவிக்காகத்தான் இந்த பயங்கரம் நடந்ததா என்று காவல் துறை விசாரித்து உறுதி செய்யுமா? தெலுங்கு டப்பிங் படங்களை மிஞ்சும் இது – கதையல்ல நிஜம். காட்சிகள் மாறி, காவல் துறையின் கைகளுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது பதில்கள் தெரிய வரலாம்!” என்ற கழுகார் சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

 

படித்து விட்டீர்களா? இப்போது உங்கள் மனதில் எழக்கூடிய உணர்வினை எழுதுங்கள் பார்ப்போம்.  மனித வாழ்க்கையின் குரூரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு மேற்கண்ட படங்களும், ஜூனியர் விகடனில் வெளிவந்த கழுகார் செய்தியும் எடுத்துகாட்டாய் நிற்கின்றன.

அன்புடன்

உங்களின் பிரிய குஞ்சாமணி

(திருந்தலாம்னு நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை)

 


ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னானாம்

மார்ச் 23, 2011

உதய நிதி படு சூடானவர் என்று கேள்விப்பட்டேன். குட்டிக்கு அது தெரியுமா என்பது தான் தெரியவில்லை. உதய நிதி தன் நண்பர் விஜய், அசினின் குண்டியில் கை வைத்தது போல, இந்தக் குட்டியின் குண்டியின் மீது கை வைக்க மறந்து விட்டா என்று நினைக்கையில் எனக்கு உண்டாகும் சோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. இனி அந்தச் சீனையும் பார்த்து வையுங்கள். யாரோ ஒரு ஹீரோவைப் போட்டு, புரட்டி எடுத்து விட்டாராம் உதய நிதி என்று பேசிக் கொள்கிறார்கள். யார் அது என்று வாசகர்கள் யாருக்காவது தெரியுமா? இல்லை அது வதந்தியா? தெரிந்தவர்கள் பின் ஊட்டத்தைப் போடுங்கள். ஆனால் நம் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு பின்னூட்டம் போடுவது பிடிக்காது போலிருக்கே.

– உங்கள் குஞ்சு


கே ஃபேமிலி – தமிழகத்தின் சாபம்

மார்ச் 23, 2011

கே ஃபேமிலி பற்றிய ஒரு கட்டுரையை தெஹல்கா வெளியிட்டு உள்ளது. வாசகர்கள் அனைவரும் சிரமம் பாராமல் ஒரு பார்வை பார்த்து விடுங்கள். இந்த தேர்தலில் கே ஃபேமிலியின் வதந்திகள் பலவும் மக்கள் மனதினை குழப்ப ஆரம்பித்து விட்டன. மீடியாவைக் கையில் வைத்திருக்கும் கே ஃபேமிலியின் வளர்ச்சியும் அதன் தொடர்ச்சியான தமிழகத்தின் வீழ்ச்சியினையும் இக்கட்டுரை மிகத் தெளிவாக இயம்புகிறது.

நன்றி தெஹல்கா

– பஞ்சரு பலராமன்


நாய் குணமும் அரசியல் வேஷமும்

மார்ச் 23, 2011

கடந்த வாரம் நண்பரொருவரின் அழைப்பை ஏற்று, அவரைச் சந்திக்க சென்றிருந்தேன். நண்பர் சினிமா உலகின் பிதாமகர். சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

“குரங்குகள் பன்னுக்காக அடித்துக் கொள்கின்றன” என்றார்.

“அரசியல் என்றால் டெட் எண்ட் ரிஸ்க் அல்லவா?” என்று கேட்டேன்.

“ஆமாம். பதவியின் சுகத்தில் திளைத்தவர்கள் பதவியில்லாமல் இருப்பது செத்த பிணத்திற்குச் சமானம் என்று கருதுவார்கள்” என்றார்.

”மனிதர்கள் ஒவ்வொருவரும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. ஒவ்வொருவருக்குள் பெரும் அணுகுண்டுகள் இருக்கின்றன. மிகவும் ஆபத்தானவர்கள். கட்டுப்பாடுகள் இல்லா மனிதன் மிகவும் மோசமான கொடூரமானவன் என்றுச் சொல்வார்கள். இந்தக் கட்டுப்பாட்டினை ஏழைகள் மட்டுமே வலிந்து சுமப்பர். இக்கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிவது பணமும் பதவியும்” என்றார் தொடர்ந்து.

”ஏன் இப்படி சொல்கின்றீர்கள்?” என்றேன்.

”குஞ்சு, சினிமா உலகில் அரசியல் பற்றிப் படமெடுத்து வரும் ஒருவரின் அந்தரங்கம் பற்றிச் சொல்லப் போகின்றேன். புதுமுகம் அதுவும் கன்னி கழியாத பெண்களாய் பார்த்து, பிடித்து வந்து, அவளை மோகிப்பதும், அவளையே பிறரை அனுபவிக்க வைத்து பார்த்து ரசிப்பதுமாய் இன்று வரைக்கும் அவரின் அழிச்சாட்டியம் குறைந்த பாடில்லை. இவரைப் பற்றிய ஒவ்வொரு ஆதாரத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டு, இவர் எப்போது வெளிப்படுவார், அப்போது இவருக்கு பெரும் ஆப்பு அடிக்கலாம் என்று சினிமா உலகில் ஒரு குரூப்பே காத்துக் கொண்டிருக்கிறது. இவர் அந்த நடிகைகளிடம் கொட்டுவது அரைக் கோடிகள் ” என்றார்.

”யார் அது?” என்றேன்.

காதருகில் வந்து மெதுவாய்ச் சொன்னார்.

கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது. ”தான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலனுண்டு என்பதை இவர் நிச்சயம் ஒரு நாள் அறிந்து கொண்டு விடுவார்” என்றுச் சொல்லி அத்துடன் பேச்சை முடித்தேன்.

அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் பற்றிய பேச்சு வர, ”காமெடி டைம் முடிந்து விட்டதே” என்றுச் சொல்லி கட் செய்ய, மனிதர் “அனுஷ்காவைப் பற்றிப் பேசலாமா?” என்றார்.

”ஆஹா, ஆஹா” என்றேன்.

முறைத்தார்.

– குஞ்சாமணி

 


தேர்தல் கமிஷன் கவனத்திற்கு

மார்ச் 22, 2011

திமுகவினரின் தேர்தல் அறிக்கையை தேர்தல் கமிஷன் எப்படி அனுமதிக்கிறது என்பதே புரியவில்லை. நாங்கள் ஜெயித்தால் இன்னின்ன இலவசம் என்று தேர்தல் அறிக்கை வெளியிடுவதே ஓட்டுக்கு லஞ்சமாய் கொடுப்பது போலத்தான். ஓட்டுப் போட்ட பின்பு கொடுக்கும் கையூட்டை அனுமதிக்கும் தேர்தல் கமிஷன், ஓட்டுப் போடுவதற்கு முன்பு கொடுக்கும் கையூட்டை தடுப்பது எவ்விதத்தில் நியாயம்?

ஆகவே இலவச திட்டங்களை அறிவிக்கும் கட்சியின் தேர்தல் அறிக்கையினையும் கமிஷன் தடுத்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் பெரும்பான்மையான மக்கள் நலத்திட்டங்களையும், ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான நலத்திட்டங்களையும் மட்டும் தான் தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும்.

இலவச அரிசி, இலவச டிவி, இலவச கிரைண்டர், இலவச மொபைல், இலவச மிக்சி என்பதெல்லாம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படப்போகும் லஞ்சம் என்பதை மீடியாக்கள் கூட எழுத மறுக்கின்றன.

எவரும் இதைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டேன் என்கிறார்கள். பொது நலத்தில் அக்கறை உடையவர்கள் இலவச அறிக்கையின் லட்சணத்தை தேர்தல் கமிஷனுக்கு அறிவுறுத்தி, இவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளைத் தடை செய்ய வேண்டும்.

தேர்தல் கமிஷன் சிந்திக்குமா?

– பஞ்சரு பலராமன்


%d bloggers like this: