ஹரியுடன் நான் அபத்தம்

ஹரிஹரன் தன் சாயம் வெளுத்து, இசையுலகில் அம்மணமாய் நிற்கின்றார். ஒரு டிவி புரோகிராமை உலகம் முழுவதும் பார்க்கின்றார்கள் என்ற சிறு கவனிப்பு ஏதுமின்றி, பாடவே தெரியாதவர்களை தேர்ந்தெடுத்து, இந்த புரோகிராம் தேவைச்சார்புடையதாக இருப்பதை வெளிக்காட்டினார் ஹரிஹரன். இயக்குனருக்கு வேண்டப்பட்ட வகையிலோ அல்லது தனக்கு வேண்டப்பட்ட வகையிலோ தேர்வுகளை நடத்திய ஹரிஹரனை இசை உலக பிரம்மாக்கள் என்றைக்குமே மன்னிக்கவே மாட்டார்கள். வாசகர்கள் இது பற்றிய கண்டனங்களை கீழ்கண்ட இமெயில் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

http://maximummedia.co.in
CONTACT US
MAXIMUM MEDIA
email : info@maximummedia.co.in

ஹரியுடன் நான் தொடர்பான பதிவுகளை கீழே படிக்கலாம்.

பதிவு 1 (ஹரியுடன் நான் திமிர்த்தனம்)

பதிவு 2 (ஹரியுடன் நான் விகடனில்)

பதிவு 3 (ஹரியுடன் நான் வாசகரின் பின்னூட்டம்)

பதிவு 4 (தொடர்ச்சி : ஹரியுடன் நான் திமிர்த்தனம் – ரமேஷ் )

பதிவு 5 (ஹரியுடன் நான் நல்ல ந(டு)வர்கள்)

முத்துக்காளையின் பேட்டியை நேற்றைக்கு ஜீ டிவியில் காண நேர்ந்தது. சாப்பாடு மீது பிரியம் இல்லாமையை கண்ணீர் முட்ட தெரிவித்தார். வாழ்க்கையில் துன்பப்பட்டவர்கள் அனைவருக்கும் அவரின் அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். ஏனென்றால் விதியின் கைகளில் சிக்கும் மனிதனின் எதிர்காலம், கால ஓட்டத்தின் இடையே சில கொம்புகளை நம்மை நோக்கி நீட்டும். அப்போது அக்கொம்புகளைப் பிடிக்கும் எண்ணமிருக்குமே தவிர உடல், உணவு பற்றிய பிரக்ஞைகள் இல்லாமல் போய் விடும். ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாடு தேடிச் செல்லுகையில் அங்கு போ, இங்கு போ என்று சொல்லுவார்களாம். சினிமாவில் இயக்குனர், ஹீரோ, ஹீரோயினுக்கு ஒரு வகை சாப்பாடும், பிறருக்கு ஒரு வகை சாப்பாடும், அடிமட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு வகை சாப்பாடும் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சாப்பாடு கொடுக்காமல், இப்படி அல்லலுற வைப்பார்கள் என்று அவர் பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன். எம்ஜியார் இறந்து விட்டார் என்று எனது சினிமா நண்பர் தெரிவித்தார்.

முதல்வர் கருணா நிதி தற்போது அறுவடையை ஆரம்பித்திருக்கின்றார் என்று செய்திகள் சொல்கின்றன. காங்கிரஸ் திமுகவை அடியோடு முடித்துக் கட்ட முடிவெடுத்து விட்டார்கள் என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் எதுவும் நம்பும்படியாக இல்லை என்பதுதான் இதில் விசேஷம். முதல்வர் மஞ்சள் துண்டை நம்பினார் என்றால் விதி விளையாடுவது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். மொத்தத்தில் பார்த்தோமென்றால் இவரால் பயனடைந்தவர்களுக்கு எல்லாம் பாவங்கள் இல்லை என்று முன்னோர்கள் நூல்களில் சொல்லி இருக்கின்றார்கள். மொத்த பிரதிபலனும் இனி படையெடுத்து வரிசையாய் வாசலில் நிற்கும் போலும்.

– குஞ்சாமணி

 

One Response to ஹரியுடன் நான் அபத்தம்

  1. asmi சொல்கிறார்:

    த‌ல‌, ஹ‌ரியுட‌ன் நான் விம‌ர்ச‌ன‌ம் ச‌ரி, எப்ப‌ மானாட‌ மயிலாட‌ ப‌த்தி எழுத‌ போறீங்க‌, அது ஒரு மாய‌லோக‌ம் மாதிரி ல‌ இருக்கு,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: