3600 கோடி ஹசன் அலியும் இந்தியாவும்

ஹசன் அலி சாதாரண ஒரு பழைய இரும்பு விற்பனை செய்த ஒரு வியாபாரி. இவரை ரூபாய் 50,000 கோடி ரூபாய் வரி கட்டும்படி ஐடி சொல்லி இருக்கிறது. அது பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி, ரேஸ்ஸில் பணம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும், இவர் மீதான ஹவாலா வழக்குகான ஆதாரங்கள் 2007 ஆம் ஆண்டு கிடைத்தும், இந்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்றும் இந்தியா டுடே கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஹசன் அலியின் அத்தனை ஹவாலா மோசடிகளும் இந்திய அரசுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தும், அத்தனை ஆதாரங்களும் இருந்தும் இதுவரை அவர் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை என்றும் யார் இவரைக் காப்பாற்றுகிறார்கள் என்றும் கேள்வி கேட்டிருக்கிறது.

யூபியெஸ் பேங்கில் ஹசன் அலி டெபாசிட் செய்திருக்கும் தொகை அமெரிக்க டாலர் 8,000,453,000. அதாவது எட்டு பில்லியன் டாலர்கள். இதை இந்திய ரூபாயில் கணக்கிட வேண்டுமெனில் இத்துடன் 45ஆல் பெருக்கிக் கொள்ளவும். அது இப்படி இருக்கும். ரூபாய் 3602,03,85,000

ஒரு அக்கவுண்டில் மட்டும் இத்தனை அமவுண்ட் வைத்திருக்கும் ஹசன் அலி, இன்னும் எத்தனை அக்கவுண்டுகளை வைத்திருக்கின்றாரோ? யாருக்குத் தெரியும்?

இத்தனை பெரிய தொகை ஹசன் அலிக்கு எப்படிக் கிடைத்தது? அதற்கும் ஆதாரங்களை இந்திய அரசு வைத்திருக்கிறது. ஏர் இந்தியாவிற்கு போயிங் விமானம் வாங்கிய வகையில் இவருக்கு கிடைத்த கமிஷன் தான் இது. அதுமட்டுமின்றி ஆயுத வியாபாரிகளிடமிருந்தும் கமிஷன் வந்திருக்கிறது என்று இந்தியா டுடே சொல்கிறது. ஏகப்பட்ட கேள்விகள்? எதற்கும் பதில் சொல்வார் யாருமில்லை.

இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய வரிகளை ஏமாற்றி தேசத்துரோக குற்றத்தை செய்த ஹசன் அலிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆதாரங்கள் கொட்டிகிடந்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் ஹசன் அலி யாராலோ காப்பாற்றப்படுகிறார்? அவர் யார்?

இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கிறது? இந்திய வளங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. திருட்டுக்கூட்டங்களின் ஆட்சியில் இந்தியா திருடப்பட்டுக் கொண்டிருப்பதை யார் தடுப்பது?

ஓ என் அருமை இந்திய தேசமே? உன்னைக் காப்பாற்றுவார் யாருமில்லையா? நீயும் உன் மக்களும் அதோகதியாகப் போகின்றீர்களா? – நன்றி இந்தியா டுடே

– பஞ்சரு பலராமன்

One Response to 3600 கோடி ஹசன் அலியும் இந்தியாவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: