பாகிஸ்தான் வெர்சஸ் அமெரிக்கா

சமீபத்தில் செய்தி தாள்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தானில் இருவரை சுட்டுக் கொன்றார் என்றும், உடனே அமெரிக்கா அவரை விடுதலை செய்யும்படி பாகிஸ்தானை நிர்பந்தித்ததாகவும், அதன் தொடர்ச்சியாய் நிதி உதவி மேல்மட்ட பேச்சு வார்த்தைகளை நிராகரித்ததாகவும் அச்செய்தி சொன்னது. ஆனால் பாகிஸ்தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல்,துப்பாக்கியை எடுத்தவுடன், பயந்து தப்பிக்க பார்த்தவர்களை அந்த அமெரிக்கர் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டி கைது செய்து உள்ளது என்றும் அச்செய்தி கூடுதல் தகவல்களை தெரிவித்தது. அமெரிக்காவின் மிரட்டல்களை எல்லாம் பாகிஸ்தான் கவனத்தில் கொள்ளவே இல்லை. சட்டப்பட்டி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. ரேமண்ட் டேவிஸ் என்ற அமெரிக்கன் இன்று பாகிஸ்தான் சிறையில் கிடக்கின்றான். அமெரிக்காவின் மிரட்டல்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத பாகிஸ்தானின் செயல் நிச்சயம் பாராட்டக்கூடிய ஒன்று. கோர்ட்டில் என்ன நடக்கும் என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த கதைதான். பாகிஸ்தானின் மிகப் பெரிய டோனரான அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு பாகிஸ்தான் நிச்சயம் அடிபணிந்து தான் போகும். ஆனால் ஆரம்ப கட்டத்தில் பாகிஸ்தான் காட்டிய துணிச்சல் பாராட்டக்கூடியது. இரண்டு பேரைக் கொன்றவன் மேல் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை பாகிஸ்தான் எடுத்தது.

ஆனால் இந்தியாவிலோ, போபால் விஷவாயு சம்பவத்தில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் பேர் மடிந்தனர். ஐந்து லட்சம் பேர் வாயுவைச் சுவாசித்ததால் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை இந்திய அரசாங்கமே விமானம் ஏற்றி பாதுகாப்பாய் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது.

இந்தியா ஒரு ஜன நாயக நாடு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. பாகிஸ்தான் பாடகர் ஒருவர் கிட்டத்தட்ட 62 லட்ச ரூபாயைக் கொண்டு வந்த போது, ஏர்போர்ட்டில் நடந்த விசாரணையைக் கூட விமர்சித்தது பாகிஸ்தான். அந்தப் பாடகரை கைது செய்யும் அளவுக்கு இந்திய சட்டங்கள் இருந்த போதும், அது பற்றிய சிந்தனை எவருக்கும் இல்லாமல் போனது என்பது இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது என்பதையும் சொல்லவும் வேண்டுமோ?

ஏழைகள் என்றால் மிகக் கடுமையாகவும், கோடீஸ்வரன் என்றால் கொத்தடிமையாகவும் இந்திய சட்டங்கள் இருப்பதை நாம் மெச்சிக் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் இந்தியா ஒரு ஜன நாயக நாடு.

– பஞ்சரு பலராமன்

3 Responses to பாகிஸ்தான் வெர்சஸ் அமெரிக்கா

  1. pondumani சொல்கிறார்:

    http://www.dawn.com/2011/02/10/balancing-parking-tickets-against-murders.html

    Here is a good article. This private security guard, former special forces soldier, suspected intelligence operative was no diplomat as articulated in the above article.

  2. pondumani சொல்கிறார்:

    நம்ம ஊர் பத்திரிகைகள் அந்த ரய்மண்டு டேவிஸ்-ஐ தூதரக அதிகாரி என்றே எழுதின. அவன் ஒரு செக்யூரிட்டி கார்ட். வாட்ச்மேன், பெருக்கிறவன் எல்லாம் நம்ம பத்திரிகைகளுக்கு அதிகாரி. அவன் பெயர் கூட உண்மையானதாக இருக்காது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: