விஞ்ஞான ஊழல் என்றால் என்ன?

அன்பு நண்பர்களே,

தமிழக அரசியலில் அடிக்கடி விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தை திமுகவை நோக்கி வீசப்படும். பிற அரசியல்வாதிகளை விட திமுகவினர் புத்திசாலிகள் என்பதை அவ்வார்ததைச் சொல்லும்.சரி, அது என்ன விஞ்ஞான ஊழல்? சாட்சி இல்லாமல், ஊழல் செய்த சுவடே தெரியாமல் ஊழல் செய்வதைத்தான் விஞ்ஞான ஊழல் என்றுச் சொல்வார்கள். இதோ கீழே இருக்கும் செய்தி அதற்கு கட்டியம் கூறுவதைப் பாரீர். திமுக தலைவர் திரு ராஜா குற்றமே செய்யவில்லை என்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். நேற்றைக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியை படிப்பீர். நீங்களே விஞ்ஞான ஊழல் எப்படி நடந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளவும்.

– பஞ்சர் பலராமன்

தினமணிச் செய்தி கீழே ( நன்றி )

புது தில்லி, பிப். 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான “”ஸ்வான்” நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் டி.வி.யில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்தது.

“”பல்வாவுக்குச் சொந்தமான “சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள “”டி.பி.” குழும நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு கலைஞர் டி.வி.க்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக” சிபிஐ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது “”ஸ்வான்” டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு அலைக்கற்றை விற்கப்பட்டது.

இந்த நிறுவனம் அலைக்கற்றையை வாங்கிய சில மாதங்களில் 45 சதவீத அலைக்கற்றையை ஐக்கிய அரபு அமீரக தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு விற்று லாபம் ஈட்டியது.

“”ஸ்வான்” நிறுவனம் பெருமளவில் ஆதாயம் பெறும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராசா செயல்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அந் நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவை மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இந்த வழக்கில், ஆ. ராசா, பல்வாவிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்துவதற்காக அவர்களின் காவலை நீட்டிக்குமாறு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை மனு செய்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரையும் மேலும் 4 நாள்கள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து கலைஞர் டி.வி. வட்டாரத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

 


மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: