திருடர்கள் சமூகம்

அனாதி தளத்தை ரெகுலராக படித்து வரும் பல வாசகர்களுக்கு இன்றைக்கு மிக முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகின்றோம். தமிழ் வாசகர்களுக்கு ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற புலனாய்வு பத்திரிக்கைகள் பற்றி தெரியவரும். தெஹல்கா மற்றும் இன்ன பிற இதழ்களும் புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.

மனசாட்சி இருப்பவர்கள், இந்திய தேசத்தின் மீது பற்றுக் கொண்டோர், தர்மத்தின் படி வாழ்பவர்கள், நீதி நேர்மை தவறாமல் வாழ்பவர்கள் போன்றோர் மேற்படி பத்திரிக்கைகளைப் படிக்கும் போது, அதீத கோபம் கொள்வார்கள் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் கோபம் கொண்டு என்ன செய்து விட முடியும்? திரு முத்துக்குமார் போல தற்கொலை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். ஏதோ ஒரு படத்தில் திரு மாதவன் போல தங்களைச் சுற்றி நடக்கும் அயோக்கியத்தனங்களைத் தட்டிக் கேட்டு “பைத்தியக்காரன்” என்று பெயர் எடுக்கலாம். என்கவுண்டரில் சுட்டுக் கொல்லவும் படலாம். சட்டம் இருக்கிறது என்றெல்லாம் நீங்கள் கோபப்பட்டால் மேற்கண்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும்.

மேற்கண்ட புலனாய்வு பத்திரிக்கைகளில் வெளிவரும் முக்கால் வாசி செய்திகள் எதுவும் முற்றிலும் உண்மை இல்லை. அரசியல்வாதிகளின் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் இவையெல்லாம் எந்த ஒரு சட்டத்தாலும் தண்டிக்கப்பட மாட்டாது என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அதற்கு ஒரு உதாரணமாய், உலகையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னவானது? மக்களை மனச்சாந்தி செய்ய ஆளும் காங்கிரஸ் அரசு செய்து வரும் மாய்மாலங்கள் தான் சிபிஐ, கைது நடவடிக்கைகள். ஸ்பெக்ட்ரத்தின் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டனவாம். யாரையும் தண்டிக்க முடியாதாம்.

இது போல பல அரசியல் ஊழல்கள், கொலைகள், கொள்ளைகள், அராஜகங்கள் அனைத்தும் மாபெரும் ஜன நாயக நாடு என்றுச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் சட்டப்படி தண்டிக்கப்படுவதில்லை என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது வரை அரசியல்வாதிகளுக்கு இந்தியாவில் தண்டனைகள் ஏதாவது விதிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

நமது இந்திய சமூகம் “ திருடர்களைக் கொண்டாடும்” சமூகமாக மாறி விட்டது.

– பஞ்சரு பலராமன்

2 Responses to திருடர்கள் சமூகம்

  1. A Satishkumar சொல்கிறார்:

    If the is no proof for corruption then how they will assign the spectrum to various fake companies. The spectrum assigned to fake companies may reallocate on open tender. Why don’t the supreme court make the direction in this regard.

  2. krishna சொல்கிறார்:

    “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மாந்தரை நினைந்துவிட்டால்” என்று பாடமட்டுமே முடியும் ஆத்திரத்தில்… வேறு என்ன செய்யமுடியும்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: