நம்பிக்கை போயே போச்சு

இந்திய மக்கள் ஆன்மீக வழியில் வாழ்க்கை நடத்துபவர்கள். அறம், பொருள், இன்பம் இவற்றில் யார் எவற்றைப் பற்றி இருக்கின்றார்களோ அதைப் போலவே அவர்களின் வாழ்க்கையின் இன்பமும், துன்பமும் அமையும்.

அரசியல் என்பது எவராலும் அவிழ்க்க முடியாத, புரிந்து கொள்ள முடியாத, எண்ணற்ற சிக்கல்களைக் கொண்ட மாபெரும் புதிர். இப்புதிரானது ஆசையின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆளும், அதிகார ஆசைதான் அரசியலின் முதல் படிக்கான ஆரம்பம். இருப்பினும் அரசியல் இன்றி உலகம் இயங்குவது கடினம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நம் பாரதத்தில் இதுவரை பிரதமர் பதவிக்கு வந்தவர்கள் அனைவரும், பாரத மக்களின் நன்மைக்காகவும்,  பொது நல நோக்குடனும் ஆட்சியை நடத்தி வந்தனர். திரு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, உலகையே சுற்றி வரும் அமெரிக்காவின் கழுகு உளவு சாட்டிலைட்டுக்கு கூட தெரியாமல் அணு குண்டு சோதனை நடத்தி, உலகிற்கு இந்தியா தன்னை யாரும் நெருங்க வேண்டாம் என்று அறைகூவல் விட்டது. அன்றைய தினம் ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சம் பனிக்க, இவ்வெற்றியைப் பெற்றுத் தந்த மாபெரும் தலைவரை போற்றினர். ஆதிக்க உலக அரசுகள் விதித்த அத்தனை தடைகளையும் எதிர்த்து தூள் தூளாக்கிய மாபெரும் ஆன்மீக சக்தி கொண்டவர்கள் இந்தியர்கள்.

தமிழர்களுக்காக தொலை நோக்குப் பார்வையில் சிந்தித்த சிந்தனைச் சிற்பியின் மகள் திருமதி இந்திரா காந்தியின் திறைமைக்கு இன்றைக்கும் சான்றாய் மிளிருகிறது பங்களாதேஷ்.  இந்த வரிசையில் ஆட்சி நடத்த வந்த நமது தற்போதையை பாரதப்பிரதமரை நோக்கி, பிரபல எழுத்தாளரும், நடிகருமான திரு சோ வெகு நக்கலாய் இந்த வார துக்ளக்கில் “ பிரதமரின் தேச பக்தி” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதி இருக்கிறார். இதற்கு நம் பாரதப் பிரதமர் என்ன சொல்லப்போகிறார்?. அக்கட்டுரை பற்றிய சிறிய குறிப்பு.

‘ஆளும் காங்கிரஸ் அரசும், காஷ்மீர் மாநில அரசும் இணைந்து பாஜகவினர் குடியரசு தினத்தன்று லால் செளக்கில் தேசியக்கொடி ஏற்ற முனைந்ததை வெற்றிகரமாய் தடுத்து நிறுத்தின. 1993 லிருந்து, மத்திய ரிசர்வ் படையினர் லால் செளக்கில் குடியரசு தினத்தன்று இந்திய தேசியக் கொடியை பட்டொளி வீசிப் பறக்க விட்டனர். 2009 ஆம் ஆண்டு, இந்த நிகழ்ச்சி தடுக்கப்பட்டது.’

ஒருங்கிணைந்த இந்தியாவில் இந்தியர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், சொத்துகள் வாங்கலாம், வசிக்கலாம் என்று இருக்கும் போது, காஷ்மீரில் நமது தேசியக்கொடியை ஏன் ஏற்றக்கூடாது என்று மத்திய ரிசர்வ் படைகளை தடுத்தது காங்கிரஸ் கட்சி என்று பிரதமர் சொல்லுவாரா? உலகமே வியக்கும் அளவுக்கு ஊழல் நடைபெற்ற போதும், அதுபற்றி இரண்டு வருடம் கண்டும் காணமல் ஏன் இருந்தார் நம் பிரதமர் என்று சொல்வாரா?

அன்றாட கஞ்சிக்கும் வழியில்லாமல், பன்னாட்டுக் கம்பெனிகளில் அடிமையாய் கிடக்கும் இந்தியன் ஒவ்வொருவனின் நம்பிக்கையாய் ஜொலிக்க வேண்டிய பதவியில் இருக்கும் நம் பாரதப் பிரதமர் மீதான நம்பிக்கை போயே போச்சு. இனி என்ன செய்ய? இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் இன்னும் என்னென்ன ஊழல்கள் நடைபெறுமோ? இந்தியா சுதந்திர நாடாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது. ஆனால் இந்தியாவின் இறையாண்மை தன் மக்களை அவ்வாறு விட்டுவிடாது என்ற நம்பிக்கை மட்டும் துளிராய் துளிர்த்து நிற்கின்றது.

– பஞ்சரு பலராமன்

One Response to நம்பிக்கை போயே போச்சு

  1. krishna சொல்கிறார்:

    மிகவும் வெட்ககேடான விஷயம் இது…நாட்டை தலைகுனிவு செய்யும் விஷயம் இது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: