கருப்புபணம் வைத்திருப்போர் பட்டியல்

அரசை ஏமாற்றி, திருட்டுத்தனமாக, முறையற்ற வழிகளில், சட்டத்திற்குப் புறம்பான வழியில் வெளி நாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் லிஸ்ட்டுகளை பெற்றிருக்கும் காங்கிரஸ் அரசு அப்பட்டியலை வெளியிட மறுத்திருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

மேற்கண்ட குற்றம் தேசத்துரோகத்திற்கு மேலானது. நாட்டினை ஏமாற்றத்துணிபவர்களுக்கு உடனடி மரண தண்டனை வழங்க வேண்டும். ஏனென்றால் அரசுக்கு வரிக்கட்டாமல், ஏமாற்றி அப்பணத்தை சட்டத்திற்கு புறம்பான வழியில் வேறு நாடுகளில் பதுக்கியவர்கள், பிறர் கட்டும் வரிப்பணத்தில் அரசின் சலுகைகளை அனுபவிக்கின்றனர். சாலை மற்றும் இன்னபிற பொதுச்சொத்துக்களை இப்பிறவிகள் அனுபவிக்கின்றனர். பிற மக்களின் வரிப்பணத்தினை அனுபவிக்க நினைக்கும் இவர்கள், இந்திய நாட்டில் வாழவே தகுதியற்ற என்றும் சொல்லலாம்.

இப்படிப்பட்ட தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களின் பட்டியலை ஒரு பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. அதை கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கலாம். இது பற்றிய எந்த ஒரு செய்தியையும் நமது தமிழக செய்தி பத்திரிக்கைகள் வெளியிடவில்லை என்பதை இவ்விடத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் செய்திகள் அனைத்தும் அரசுக்கு ஆதரவாய் வெளியிடப்படுகிறது என்பதையும் இச்செய்தி மறைக்கப்பட்ட சம்பவத்தின் மூலமாய் அறியலாம். குற்றவாளிகளுக்கு ஆதரவாய் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என்பதைக் கீழே இருக்கும் செய்தி சொல்ல வருகிறது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இந்தியாவின் அவலம் என்று கருத நேரிடுவதை தவிர்க்க முடியவில்லை

கருப்புபண முதலாளிகளின் பெயர்கள்

– பஞ்சரு பலராமன்

கருப்புபணம் வைத்திருப்போர் பட்டியல் க்கு 2 பதில்கள்

  1. krishna சொல்லுகின்றார்:

    சரியாக சொன்னீர்கள் …. ஆனா இந்த லிஸ்ட்ல தமிழ்நாடு ஆளுங்க யாரும் இல்லையே… அடுத்த லிஸ்ட்ல வருமா?? யாரோ ஒரு தமிழ்நாட்டு ஆசாமி இறந்துட்டதால அவர் பெயர்ல நடவடிக்கை எதுவும் இல்லைன்னு சொல்லறாங்களே உண்மையா??? அப்படியே இருந்தாலும் அந்த panathai அரசு கைபற்றனுமே…இந்த லிஸ்ட்ல இருக்கும் ஆளுங்க எல்லாம் பணம் ரொம்ப கம்மியா இருக்குற மாதிரி இருக்கே…. இத பத்தி இன்னும் கொஞ்சம் விரிவா சொன்ன நாங்களும் தெரிஞ்சுக்குவோம்…. நன்றி..

    • அனாதி சொல்லுகின்றார்:

      அந்தப் பத்திரிக்கை படாத பாடுபட்டு இந்த லிஸ்டை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரையை படித்தீர்கள் அல்லவா? அதுக்கும் மேல் எனக்கு ஒன்றும் தெரியாது. மற்றவை விரைவில் – பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: