கள்ளச்சி

 

திரு.அனாதி, என்னுடைய கடிதத்தை தங்களுடைய தளதில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் நேற்று (31.01.2011) எனது பிறந்தநாளில் பதிவேற்றம் செய்ததில் மட்டற்ற சந்தோசம்.”பிறரை வாழ வைத்துப் பார்ப்பதில் உள்ள இன்பம் மட்டுமே என்றைக்கும் ஆனந்தம் தரும். அதை நாங்கள் எங்களால் முடிந்த வரைக்கும் செய்து வருகிறோம்.” இந்த வரிகளை நீங்கள் பொதுவாக குறிப்பிடிருந்தாலும், எனக்கு நேற்று இது மிகவும் பொருந்தியது. மிக்க நன்றி. ஒரு சந்தேகம்: “அநாதி” அல்லது “அனாதி” எது சரி?சிவப்பதிகாரத்தில் அநேக இடங்களில் “அநாதி” என்று தான் குறிபிட்டுள்ளது. விளக்கவும்.

http://www.youtube.com/user/reshahsin
– ஒரு வாசகர்
ஹலோ சார், சிவப்பதிகாரம் என்று ஏதாவது இலக்கியம் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்ல வந்தது சிலப்பதிகாரம் என்று நினைக்கிறேன். சரியா என்றுச் சொல்லவும்.  இரண்டு சொற்களில் எது சரி என்று தெரியவில்லை. ஒரு பெயர் பட்டியலில் அனாதி என்றால் என்றும் இருப்பவன், ஆரம்பமே இல்லாதவன் என்று எழுதி இருந்தார்கள். பிடித்திருந்ததால் அப்படியே வைத்துக் கொண்டேன். அநாதி என்றாலும் அதே அர்த்தம் தான் வரும் என்று நினைக்கிறேன். ஆனால் எது சரி என்றுத் தெரியவில்லை. எனக்கு அந்தளவுக்கு தமிழில் அனுபவம் இல்லை. ஏதோ எழுதுவேன்.

அடுத்து, உங்களுடைய இரண்டு குறும்படங்களையும் பார்த்தேன். இன்விடேஷனில் கடைசி டர்னிங் பாயிண்ட்டை எளிதில் யோசித்து விட்டேன். இசை எனக்குப் பிடிக்கவே இல்லை. இது ஒரு காதலனின் தியாகம் என்று சொல்ல முடியாது. காதலனின் மடத்தனம் என்றுதான் சொல்வேன். அம்மா, அப்பா இறந்து விடாமல் இருக்க காதலை தியாகம் செய்கிறேன் என்றால் அந்தக் காதலின் பெயர் “அரிப்பு” என்பதாகும்.அக்காதலி தவறானவள் என்று உணர்ந்து கொள்ள இயலாத காதலன் ஒரு மடையன். இது காதலே அல்ல என்பது எனது வாதம். மற்றபடி படமாக்கி இருக்கும் விதம் அருமை. இசை இன்னும் கொஞ்சம் மென்மையாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வசனங்களும் இன்னும் கூர்மையாக இருக்க வேண்டும். ஆனால் உங்களின் முதல் படம் என்பதால் அனைத்தும் மறைந்து விடுகிறது. மிக அருமையாக இருக்கிறது சார்.

நல்ல கதை இருந்தால் ஒன் லைனில் கிளைமேக்ஸ் இல்லாமல், மெயில் அனுப்பி வையுங்கள். எனக்கு அது பிடித்திருந்தால், தயாரிப்பாளரிடம் உங்களுக்காக சிபாரிசு செய்கிறேன். மற்றபடி நீங்களாச்சு அந்த தயாரிப்பாளர் ஆச்சு. ஆனால் என்னைக் கண்டுபிடிக்க முயல வேண்டாம். எனக்கு அதில் விருப்பமே இல்லை.

அடுத்து, உங்களின் சிந்தனையில் எனக்கு சில விவாதங்கள் இருக்கின்றன. அது பற்றி பிறகு பேசலாம்.

உங்களின் பிறந்த நாள் அன்று உங்களின் கடிதத்தை எனது பிளாக்கில் வெளியிடச் செய்த என் இறைவனுக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன். உங்களின் எதிர்காலம் நல்ல பிரகாசத்துடன், வளமுடனும், நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.

சமீப காலமாய் தமிழ் திரைப்படங்களில் பாடல்களும், கதையம்சம் கொண்ட நல்ல படங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படி வெளியான ஒரு பாடலை கேட்க எனக்கு மிக ஆனந்தமாய் இருந்தது. நீங்களும் கேட்டு வையுங்கள்.

– அனாதி

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: