ஒரு பெண்ணின் அந்தரங்கம் (20+)

 

இந்தக்கால இளம் ஐடிப் பெண் ஒருத்தி, தன் லவ்வரை விட அதிக அழகும், பணமும் இருக்கும் மற்றொருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டு, முன்பே காதலித்த காதலனை கழட்டி விட, ஐடியா சொல்வதை கீழே படியுங்கள்.

“இருவரும் மோதிரம் மாற்றி காந்தர்வ மணம் செய்து கொள்வோம். போலி ஹனிமூன் டிரிப் மேற்கொண்டு, ஒரு வாரம் அலுக்க அலுக்க தாம்பத்யம் நுகர்வோம். குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளும் மிலிட்டரி டாக்டர் மூலம்தான். திருமணத்திற்கு பின்னும் நம் தொடர்பு தொடரும். என் மரணம் வரை எனக்கு இரு கணவன்கள். ஒரு காந்தர்வ கணவன்; ஒரு தாலி கட்டிய கணவன். எதாவது ஒரு கட்டத்தில், நீ திருமணம் செய்து, என்னை விட்டு விலக விரும்பினால், தாராளமாக நீ விலகலாம். காந்தர்வ மணம், ஹனிமூன் ட்ரிப் வேண்டாம் என்றால், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருகிறேன்; வாங்கிக் கொள். இப்பணம் நீ காதல் தோல்வியால் தற்கொலை செய்யாமலிருக்க அல்லது நீ என்னை எதிர்காலத்தில் பிளாக்-மெயில் பண்ணா திருக்க. சொன்ன இரு யோசனைகளில் உனக்கு எது பிடித்திருந்தாலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் தயாரித்து, கையெழுத்து இட்டுக் கொள்வோம்…’ என்றேன்

மேற்படி பத்தி வாரமலரில் வெளியாகி இருக்கிறது.

அன்பார்ந்த வாசகர்களே அனாதி பிளாக்கில் இதுவரை நீங்கள் படித்து வந்த அந்த மாதிரி சம்பவங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கும் மேற்படி பத்தியை தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் வாசிக்கும் தினசரியில் வெளிவந்திருப்பதை சற்றுக் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இப்படியும் ஒரு பெண் யோசிப்பாளா என்றெல்லாம் யோசித்து மூளையைச் சூடாக்கிக் கொள்ளாதீர்கள். இதற்கும் மேலே யோசிக்கும் பெண்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கின்றார்கள்.

சரி இப்போது நம்ம கதைக்கு வருவோம். மேற்படி யோசனை தெரிவித்த பெண் கிடைத்தால் நம் வாசகர்களில் எவராவது திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கின்றீர்களா என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். (யார் யாரைக் கல்யாணம் பண்ணா குஞ்சுக்கு என்னா வந்தது? அதுக்கு அது கிடச்சா போதுமேன்னு குடிகாரக் கம்னாட்டி கத்துரான்)

ஆனால் உங்களின் பிரிய குஞ்சாமணியாகிய நான், இப்பெண்ணை மிகுந்த ஆவலுடன் திருமணம் செய்வேன். ஏனென்றால் எனக்கு அடங்காத குதிரை மேல் ஒரு பிரியம் இருக்கிறது. ஒரு கிக் இருக்கிறது இம்மாதிரிப் பெண்களோடு வாழ்வதில். வாழ்க்கையில் ஒரு சுவாரசியம் வேண்டுமல்லவா? ஆனால் என் பிரியத்துக்குரிய அன்பான வாசகர்களே, வாழ்க்கை என்பது இதுவல்ல.

ஏன் இந்தப் பெண் இம்மாதிரி யோசித்தது? இப்படிப்பட்ட சிந்தனை ஏன் வந்தது? அதற்கு காரணம் “வாரமலர்”. ஏன் என்று யோசியுங்கள்.

பெண்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவர்கள். அவர்கள் திசைமாறிச் செல்வது எந்தச் சமூகத்திற்கும் நல்லதல்ல.  (போடாங்.. சாத்தான் வேதம் ஓதுதான்னு கேக்குறான் குடிகாரன்)

– குஷியுடன், குஷாலுடன் உங்கள் பிரிய குஞ்சாமணி

 

 

7 Responses to ஒரு பெண்ணின் அந்தரங்கம் (20+)

 1. ஆறுமுகம் சொல்கிறார்:

  சரியாக சூப்பர்

 2. அது எதுக்கு? சொல்கிறார்:

  இப்படித்தான்யா எனக்கும் இப்போ நடந்து முடிஞ்சுருக்கு…:(

  ஆனாலும் அவ நல்லவ தான்….

 3. நிலா சொல்கிறார்:

  கடவுள் என்னை போன்ற பெண்களுக்கு அழகை கொடுத்து ஆண்களை கொள்கிறான்

 4. pondumani சொல்கிறார்:

  அய்யா, இது ஒரு கற்பனைக் கதை. இதை எழுதியவர் IT துறையை சேர்ந்தவராக இருக்கலாம். அவர் அனேகமாக ஆணாகவும் இருக்கலாம்.
  Outsourced என்று படம் வந்துள்ளது. அதை பாருங்கள். அதில் Goa vacation என்று ஒன்று வசனம் வரும்.
  கதாநாயகன் அப்படி என்றால் என்ன என்று கேட்பான்?

  ஒரு பெண் காதலிக்கிறாள். அவளுடைய பெற்றோர் வேறு ஒருவனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விடுகிறார்கள்.
  அவளுடைய காதலனை மறக்க முடியாதலால், அவளை காதலனுடன் கோவா-வுக்கு vacation அனுப்பி வைக்கிறார்கள்.
  அங்கே தேனிலவை முடித்துவிட்டு ஊருக்கு வந்து நிம்மதியாக பெற்றோர் பார்த்து வைத்த பையனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.

  அனேகமாக எல்லா அன்புடன் அந்தரங்க கடிதங்களும் அலுவலகத்திலேயே தயார் செய்யபடுபவை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
  இதற்கு(அன்புடன் அந்தரங்கத்திற்கு) நிறைய பேர் பின்னுட்டமும் இடுவார்கள்.

  • அனாதி சொல்கிறார்:

   அடடா, பொந்துமணிங்கற பேர் சூப்பர்…

  • காளை சொல்கிறார்:

   “அனேகமாக எல்லா அன்புடன் அந்தரங்க கடிதங்களும் அலுவலகத்திலேயே தயார் செய்யபடுபவை” சரிதான். இதை நான் என்னுடைய டீன் ஏஜ்-ஜிலேயே உணர்ந்து கொண்டேன். அதனாலேயே படித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன! நெட்டில் அன்புடன் அந்தரங்கம் படித்துவிட்டு சூடாக விமர்சனமும் கண்டால் இதழ்களில் மெல்லிய சிரிப்பு இழையோடுகிறது.

 5. anvarsha சொல்கிறார்:

  கையில் பணம் குறையும்போதும் ( recession நினைவிருக்கிறதா) ரத்தம் சூடு குறைந்தவுடனும் தெரியும் இந்த தறிகெட்ட சிந்தனையின் விளைவு. அதுவரை ‘இதுவும் கடந்து போகும்’ என்று பார்த்திருப்போம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: