ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னவாகும்?

சர்வேதச அளவில் ஸ்பெக்ட்ரத்தின் வீச்சு படுபயங்கரமாய் இருக்கிறது என்று ஜூனியர் விகடன் கட்டுரை எழுதி வருகிறது. ராஜா முன்பே ஜூவி மீது வழக்குப் போட்டு, ஸ்பெக்ட்ரம் விஷயம் தமிழ் நாட்டில் கசியாமல் பார்த்துக் கொண்டார். நீதியோடு போராடி ஊழல் ராஜாவின் தடையை தகர்த்தது ஜூவி. ஊழலுக்கு ஆதரவாய் சட்டங்கள் இருக்கையில் எந்த புனித ஆத்மாவும் வந்து, ஊழலில் ஊரிய நாற்றமெடுத்த இவர்களை தண்டித்து விட முடியாது. இந்தியாவை ஊழல் தேசமென்று ஆக்கியது காங்கிரஸ் கட்சி. தினந்தோறும் வசவுகள், திட்டுக்கள், கண்டனங்களை பெற்றுக் கொண்டே ஆட்சி நடத்துகிறார் பிரதமர். எந்த ஒரு நாட்டிலும் இல்லாத பிரதமராய் இருக்கிறார்.

தமிழ் நாடு இன்னொரு சுதந்திரத்தை பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு விட்டது. எங்கு நோக்கினும் ஊழல், எதேச்சதிகாரம், தடியெடுத்த அரசு அலுவலர்கள் எல்லாம் தண்டல்காரராய் மாறிய விநோதம், செயலற்ற அரசியல் தலைமை, சொத்துச் சேர்க்கவே நேரம் போதாமையால் தடுமாறும் அரசு, எந்த மக்கள் திட்டத்திலும் காசு பார்க்கும் அரசியல் தலைவர்கள் என்று தமிழ் நாடு இதுவரை இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

ஒரு தமிழனால் இந்தியாவே கேவலப்பட்டு இருக்கும் நிலைக்கு வந்த பிறகும், எந்த சட்டத்தாலும் ஒன்றும் செய்ய முடியாத, செயலற்ற சட்டங்கள் என்று இந்தியாவை முற்றிலுமாய் சீரழித்து விட்ட காங்கிரஸ் அரசு நிர்வாகம் என இந்தியா தன் ஆன்மாவை இழந்து நிற்கிறது.

இந்த சூழலில் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய, இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைத்த திமுக அமைச்சரின் ஊழல் என்னவாகும் என்று பல இடங்களில் விசாரித்த வகையில், 2ஜி ஊழல் மூடப்பட்டு விடும் என்றுச் சொல்கிறார்கள். அனைவருக்கும் பங்குப் பணம் சென்று சேர்ந்து விட்டதாம்.

செய்தி தாள்களில் 2ஜி விஷயங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் மறந்து விட்டது போல நடிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் மூலமாய் இந்தியா அன்னிய நாட்டிடம் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது என்கிறது ஜூனியர் விகடன்.

பாரதி எழுத்தில் வடிந்த சுதந்திரம் இன்று திமுக அமைச்சரால் அன்னிய நாடுகளிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசின் சட்டங்கள் தூங்குகின்றன. மக்களோ வீசப்படும் கறித்துண்டுகளுக்கு ஏங்கும் நாய்க்கூட்டமாய் நாக்கினை தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். 2ஜி விரைவில் ஊத்தி மூடப்பட்டு விடும் என்று வெகு உறுதியாய் சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்தியாவே யார் உன்னைக் காப்பாற்றப் போகிறார்கள்?

– வேதனையுடன் பஞ்சரு பலராமன்.

2 Responses to ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னவாகும்?

  1. ரவி சொல்கிறார்:

    வேதனை படுவதை தவிர நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது தோழரே.லட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்புப்பணம் வெளி நாட்டு வங்கிகளில் இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.ஏதோ இப்போதுதான் புதிதாக கேள்விப்படுவதை போல எல்லா ஊடகங்களுமே நடிக்கின்றன.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றும் செய்யாது என்பதுதான் உண்மை.எல்லோருமே கூட்டு களவாணிகள் தான்.(அரசியல்வாதிகள் .,அதிகாரிகள்.,நீதித்துறை .,பத்திரிக்கைகள் )

  2. krishna சொல்கிறார்:

    வேதனை அளிக்கும் விஷயம் இது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: