2000 ஆயிரம் கோடி பேரம் : தேர்தல் திருட்டுவிழா ஆரம்பம்

அரசியலில் ஒரு பாலபாடம் இருக்கிறது. பொண்டாட்டியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக் கொடுத்தாவது பதவியைப் பிடிக்க வேண்டுமென்பது தான் அது. ஏன் இப்படி வல்கராக எழுதுகிறேன் என்றால், கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

எந்த அரசியல்வாதியாவது ஊழல் செய்யாமல் இருக்கின்றானா? பிராடு செய்யாமல், அரசுப் பணத்தை திருடாமல் இருக்கின்றானா என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். அரசியல்வாதி தெரிந்தே திருடுகிறான். ஆனால் அவன் எங்கு வந்தாலும் மக்கள் அவனுக்கு மரியாதை செய்கிறார்கள். இது இன்று வரை நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஊழல் செய்த அரசியல்வாதியைப் பார்த்தால் செருப்பால் அடித்து துரத்தியிருக்கின்றார்களா மக்கள்? இல்லையே? ஏன்? அதுமட்டுமல்ல, மக்களுக்கு நன்றாகத் தெரிந்த அயோக்கிய சிகாமணிகளை, அவன் எந்த தவறு செய்தாலும், அந்த தவற்றைப் பொருட்படுத்தாமல் கொண்டாடுவதால், அந்த மொள்ளமாறிகளுக்கு மக்களின் மீது எந்த விதப் பயமும் ஏற்படுவதில்லை.

இன்னும் ஒரு உதாரணத்தை தருகிறேன். “இளைஞன்” திரைப்பட புரோமோவைப் பார்த்தீர்களா? மனச்சாட்சி உள்ளவர்கள் அப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்களா? உள்ளுக்குள் தைரியமும், உண்மையும் நிரம்பிய எவராவது அப்படத்தைப் பாராட்டுவார்களா? பாருங்கள் பச்சோந்தி சினிமாக்காரர்களை. ஆஹா ஓஹோ என்று பாராட்டித்தள்ளுகின்றார்கள். இவர்கள் எல்லாம் யார்? எப்படிப் பட்டவர்கள்? என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

தர்மம், நியாயம், நீதி, உண்மை, நேர்மை எல்லாம் எங்கே சென்றன மேற்படி மைக்கில் பேசியவர்களுக்கு? பொதுவில் உருப்படிக்கு ஆகாத திரைப்படத்தை ஏன் இவர்கள் எல்லாம் பாராட்டுகின்றார்கள்? என்ன காரணம்? ஒரே காரணம் அப்படிப் பாராட்டிப் பேசினால் ஏதாவது தேறும் என்பது தான். மக்கள் திருந்தவில்லை என்றால் எவனும் திருந்தப் போவதில்லை. திருடியவனைக் கொண்டாடும் சமூகம் ஒரு திருட்டுச் சமூகத்தானே இருக்க முடியும். திருடர்கள் ஒன்று சேர்ந்து சமூகத்தையே திருட்டுக்கூட்டமாய் மாற்றி வைத்திருக்கின்றார்கள்.

இதோ இன்னும் சிறிது காலத்தில் தேர்தல் திருட்டுவிழா ஆரம்பிக்கப்போகிறது. தேர்தல் கமிஷன் என்ற ஒரு டம்மி பீஸ் இருக்கிறது. இத்தேர்தலில் ஒரு கட்சி ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி செலவழிக்கப் போகின்றார்கள். வீடுதோறும் பரிசாய், பணமாய் கொட்டப்போகிறது. மக்களும் வாங்கிக் கொள்ளப் போகின்றார்கள். தேர்தல் கமிஷன் இதுவரை நடந்த தேர்தல் அத்துமீறலுக்கு யாரையாவது தண்டித்திருக்கிறதா என்று கேளுங்கள். பதிலே பேசமாட்டார்கள். ஒரு சாதாரண கட்சி 5 கோடி ரூபாய் செலவு செய்யப்போகின்றார்கள். மற்றொரு கட்சிக்கு 2000 கோடி ரூபாய் தனியான, ஸ்பெஷல் கவனிப்பு கொடை கொடுக்க ஒரு கட்சி தயாராக இருக்கிறது. பேச்சு வார்த்தை இன்னும் முடிவடையவில்லையாம்.

தேர்தல் என்பது திருடர்கள் கூடும் இடமாகி விட்டது. அத்திருடர்களை கொண்டாடப்போகும் மக்கள் இருக்கின்றார்கள். பேரங்கள் சூடாய் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் சொத்துக்கள் இனி யார் யாருக்கோ தாலி செயினாய், தோப்பாய், மாட மாளிகையாய் போக விருக்கிறது. மக்களின் வரிப்பணத்தினைக் கூட்டாய் கொள்ளையடிக்கப் போகும் கொள்ளைக்கூட்டங்கள் இனி வீதி தோறும் உலாவரப்போகின்றார்கள். அவர்களுக்கு மஞ்சள் கரைத்து ஆரத்தி எடுத்து தட்டில் விழப்போகும் காசுக்காக காத்திருப்பார்கள் மக்கள்.

இந்தியா ஒரு போதும் வல்லரசாகப்போவதில்லை. தேடி வரும் கொள்ளைக்கூட்டத்தினை செருப்பால் அடித்து விரட்டும் நாள் வரும் வரை இந்தியா ஒரு போதும் நல்லரசாகப் போவதில்லை.

– பஞ்சரு பலராமன்

 

2 Responses to 2000 ஆயிரம் கோடி பேரம் : தேர்தல் திருட்டுவிழா ஆரம்பம்

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    MIKA SARIYAAKA SOLLIULLIIRKAL, PAARAATTUKKAL!! AANAALUM, NAMATHU THAMIZH MAKKAL THIRUNTHUVAARKALAA??

  2. anvarsha சொல்கிறார்:

    சத்தியமான வார்த்தைகள். வல்லரசு கனவு எல்லாம் நம் மீது அரைக்கப்படும் மிளகாய்! எல்லா மக்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நாடு வல்லரசாக ஆகவே முடியாது. அதற்கு நீங்கள் சொன்னது போல், தீயவர்களை மோதி மிதித்தால்தான் நடக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: