சில செக்குகளும் ஒரு நடிகையும்

”மாப்ளே, ஆளப்பார்றா, என்னாமா இருக்கிறா இவ? தூக்கிடுவோமாடா?” என்று கிளப்புகளில் சந்திக்கும் பெரும் கோடீஸ்வரர்களின் செல்லப்பிள்ளைகள் பேசிக் கொள்வது உண்டு. அப்படித்தான் ஒரு வாரிசு, நம்பர் ஒன் நடிகையின் மீது மோகம் கொண்டலைந்து, தன் நண்பர்களுடன் சென்னைக்கு படை எடுத்தார். இது எதுவும் தெரியாமல் சென்னை சென்ற கணவனை வழி அனுப்பி வைத்தார் அந்த வாரிசுவின் மனைவி.

வாரிசுவிற்கு ஏகப்பட்ட சொத்து பத்துக்கள். தகப்பனார் வாரிசின் மேல் கொள்ளைப் ப்ரியம் கொண்டவர். ஆகவே கணக்கு வழக்கில்லாமல் செலவிற்கு பணமழையாய் கொட்டினார். வாரிசும் தண்ணீர், பெண் என்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருந்தார். இதற்கிடையில் வேண்டாத விருந்தாளியாய், பெரும் பணக்கார நண்பரின் பெண்ணை மணம் முடித்து வைத்தார். வாரிசும் பெண்ணும் பாலும் தண்ணீராய் கலந்து கிடந்து ஒரு வழியாய், குடும்பப் பாதைக்குள் வந்தனர். ஆனாலும் வாரிசோ நடிகைகளின் நினைவாலே கிடந்தார்.

இது அப்படி இருக்க, சென்னை சென்ற வாரிசு, நடிகையைக் கொத்திக் கொண்டு வந்து விட்டார். இந்த நடிகைக்கு ஒரு விசேசம் இருக்கிறது. குடிக்க நல்ல சரக்கு இருந்தால் போதும் ஒரே நேரத்தில் பத்து ஆண்களை வேண்டுமானாலும் கோதாவில் பதம் பார்ப்பார். பட்டப்பகலில் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்று முகபாவனை காட்டிக் கொண்டிருக்கும் இந்த நடிகை, இரவானால் காம அரக்கியாகி விடுவார். ஆனால் கறப்பதில் கறார் பேர்வழியானவர்.

தனது நண்பர்களின் கூட்டோடு, நடிகையுடன் கெஸ்ட ஹவுசில் மல்யுத்தத்தை ஆரம்பித்தார் வாரிசு. போதையின் உச்சகட்டத்தில் வெறும் செக்குகளை கையெழுத்திட்டு நடிகையிடம் கொடுக்க, கோதா முடிந்து வீட்டுக்குச் சென்ற நடிகை, வாரிசின் மொத்த சொத்துக்கும் செக்கெழுதி வங்கியில் சேர்ப்பித்தார்.

வங்கி மேனேஜர் அலறி அடித்துக் கொண்டு, வாரிசுவின் அப்பாவிடம் கதற, மேட்டரை நூல் பிடித்த தகப்பனார் காரியத்தில் இறங்கினார். இப்படியெல்லாம் கிளம்பும் என்று பிளான் போட்ட நடிகை, அரசியல் தஞ்சமடைய, விஷயம் புரியாமல் அமைச்சரொருவர் தலை நீட்டினார். காரியம் எல்லை மீறுவதைக் கண்ட தகப்பனார் செல்லுமிடம் செல்ல, கப்சிப்பென்று ”பத்து” செக்குகளும் வீட்டிற்கு வந்தன. அன்றிலிருந்து மார்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனையான நடிகை, இன்றைக்கு சில லட்சங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார். ஒருத்தனும் பக்கத்தில் கூட போக மாட்டேன் என்கிறானாம். ரகசியமாய் விலைகுறைப்பு செய்திகளைக் கசிய விட்டாலும், செக்கை நினைத்து பயந்து ஓடுகின்றார்களாம் பலர்.

இதெல்லாம் போதாது என்று வாரிசின் மனைவி கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் விட, பஞ்சாயத்து நடந்து ஒரு வழியாக செக், நிதி என்று நிர்வாகம் அனைத்தும் மனைவியின் கையில் கொடுத்து விட்டு, இப்போது நான்கு ஜட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாய் போட்டுக் கொண்டு, நடிகைகளின் போட்டோவை தனிமையில் பார்த்து தண்ணீருடன் கண்ணீரைக் கலந்து ராவாக அடித்துக் கொண்டிருக்கிறார் வாரிசு.

– குஞ்சாமணி

8 Responses to சில செக்குகளும் ஒரு நடிகையும்

 1. Aanand Kanthasamy P சொல்கிறார்:

  அனாதி நடிகை யார்,பணகார நபர் யார்,அமைச்சர் யார்,பணக்காரர் அமைச்சரை அடக்க சென்ற இடம் எங்கே,இதற்கு குறிப்பு தரலாம்.இதனால் நாட்டு நடப்பு புரியும்.இல்லாவிட்டால் தவறாக புரியும்.

 2. asmi சொல்கிறார்:

  ந‌ம்ப‌ர் 1 ந‌டிகை யாருனு சொல்ல‌வே இல்லை

 3. swami சொல்கிறார்:

  OK. Carry on Anadhi. Neengal ippadi kisukisu ezhudhuvadhal nadigaigalum,varisugalum thirunthi, samoogam seerkedu illamal, pure aagi vidum endral thodarnthu ezhuthungal. All the best.

  • அனாதி சொல்கிறார்:

   நீங்கள் தவறாக நினைத்து விட்டீர்கள் சுவாமி. கிசு கிசு எழுதுவது நாங்கள் அல்ல. கதை எழுதுகிறோம். சமூகத்தைப் பற்றிக் கவலைப்பட உங்களைப் போன்றவர்கள் இருக்கையில், நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். திருந்தினால் எங்களுக்கு என்ன? திருந்தா விட்டால் எங்களுக்கு என்ன ஆச்சு? திரைமறைவு விஷயங்களை அப்பட்டமாய் எழுதுகிறோம் கதை வடிவில். அவ்வளவு தான் எங்களால் முடியும் – அனாதி

 4. நடிகை யமுனா சொல்கிறார்:

  விபச்சாரம் செய்து கைதாகியுள்ள கன்னட நடிகை யமுனா, எந்த ஒரு வாடிக்கையாளரையும், ஒரு தடவைக்கு மேல் ‘அனுமதிக்க’ மாட்டார் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  ‘யாராக இருந்தாலும் ஒருதடவைதான்!

 5. swami சொல்கிறார்:

  visha unavu udalukku theemai endral,indha madhiri aduthavar andharangam patriya padhivugal manadukku visham illaya?Nadigaiyar kadhaigalai thavirthu, nalla vishayangalai vivadhikkalame.

  • அனாதி சொல்கிறார்:

   சுவாமி, சொன்னீங்க பாருங்க சும்மா நச்சுன்னு ஒரு வார்த்தை. அப்படியே புல்லரிச்சுப்போச்சு. இங்கே சொன்னது போல சினிமாக்காரனிடம் சொல்லுங்களேன் பார்ப்போம். இல்லை ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிக்கைகளிடம் சொல்லுங்களேன் பார்ப்போம். அவர்கள் செய்தால் கலை. நாங்கள் எழுதினால் விஷமா? என்ன ஒரு ஞானம் உங்களுக்கு? உங்களைப் போன்றவர்களால் தான் மழையே பெய்கின்றது போலும்.

   சினிமாக்கலாச்சாரம் மனித வாழ்வில் ஒரு அசைக்கமுடியாத பங்கினை திருடிக்கொண்டு இருக்கிறது. அவர்களின் மறுமுகத்தைப் பற்றி நாங்கள் எழுதுகிறோம். இதில் என்ன விஷம் இருக்கிறது? முள்ளை முள்ளால் தான் எடுக்க இயலும். ஏதோ எங்களால் ஆன முயற்சி இது. திரைமறைவு விஷயங்களை எழுதத்தான் போகிறோம். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நாங்கள் வருந்தினாலும், எழுதுவதை விடப்போவதில்லை.

   எங்கு நோக்கினும் தவறு செய்பவர்களை முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள். இது சமூகத்தின் சீர்கேடு. இதை நாங்கள் எங்களுக்கு தெரிந்த வகையில் எழுதுகிறோம். தட்ஸ் ஆல் – அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: