தேமுதிக விஜயகாந்த் – ஒழுங்கற்ற நேர்மையாளர்

தேமுதிகவின் மக்கள் உரிமைப் போராட்டம் சேலத்தில் நடைபெற்றதை டிவியில் மிகக் கவனமாக பார்த்தேன். எனது நண்பர் தலை ஒன்றுக்கு ரூபாய் 200 கொடுத்து அழைத்துச் சென்றார்கள் என்றுச் சொன்னார். தேமுதிகவில் பெரும்பான்மையோர் தன் கைக்காசை செலவழித்து போண்டியாகி விட்டனர். இந்தத் தேர்தலிலும் காசு வாங்கிக் கொண்டு தனியாகத்தான் நிற்பார் விஜயகாந்த் என்றும் அவர் சொன்னார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் விஜயகாந்த நான் காசு வாங்க வில்லை என்றுச் சொல்லுவார். ஒரு சேட்டிலைட் சேனல் லைசென்ஸ் பெற எத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருக்க வேண்டும்? ஆனால் இவருக்கு சானலுக்கான லைசென்ஸ் மட்டும் எப்படிக் கிடைத்தது? என்று கேட்டால் விஜயாகாந்தின் மறுமுகம் வெளியே தெரியும். சற்றே யோசிக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் விஜயகாந்தின் லைசென்ஸ் மேட்டர் மூலம் நடந்திருக்கும் டீலிங் நன்கு புரியும்.

கட்சி மாநாட்டில் பேசிய எவராவது ஒழுங்குப் பாட்டுடன் பேசினார்களா? என்றால் கொடுமை. நீதியின் குரல் என்ற நிகழ்ச்சி நடத்தியவர் (பெயர் மறந்து விட்டது) ஏதோ பேசினார். மீசைக்கார நடிகர் ஒருவர் மீசையை எடுக்கிறேன் என்று சவால் விட்டார். சலூன்காரரிடம் சொன்னால் அடுத்த நிமிடத்தில் மீசையை எடுத்து விடுவார். இதற்கெல்லாம் ஒரு சவாலா? மசுறு போனா திரும்ப முளைக்காதா? தலையை வெட்டிக் கொள்கிறேன் என்று சவால் விட வேண்டியதுதானே? இந்த மாதிரி சவால் விடும் பேர்வழியின் குண்டியில் பழுக்க காய வைத்த கடப்பாறையை சொருகனும். அப்போது தான் இவர்கள் எல்லாம் திருந்துவார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மசிரை வைத்து சவால் விடுவீர்கள்?

மூச்சுக்கு முன்னூறு தரம் கலைஞரைத் திட்டினார் விஜயகாந்த். ஊழல் தலைவர் என்றுச் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் மறைமுக பேரம் நடத்தி, திமுகவை ஜெயிக்க வைத்த உங்களை விடவா ‘கலர் டிவி கலைஞர்’ கெட்டவர்?

விஜய காந்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் அதாவது டாஸ்மாக்கிற்குச் செல்லும் மக்களுக்கு அவரின் தோற்றம் சொல்லும் கதைகள் ஆயிரமாயிரம். இவரின் பேச்சில் ஒரு நேர்கோடு இருந்ததா? தொடர்ந்தாற் போல விபரங்கள் இருந்ததா? முழுமையாகப் பேசினாரா என்றால் என்ன சொல்வது? ஒழுங்கற்ற பேச்சு. அயர்ச்சியைத் தந்தது. பொதுமக்களின் பார்வைக்கு வரும்போது சில உடல் மொழிகளைத் தலைவர்கள் கொண்டிருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத பட்சத்தில், நாளடைவில் மக்கள் கொண்டிருக்கும் வசீகரம் குறைந்து போய் விடும். மக்கள் வசீகரத்தை என்றென்றும் தன்னகத்தே குவித்து வைத்தவர் திரு எம்ஜிஆர் அவர்கள் என்பதை இவ்விடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவர் ஒழுங்கற்ற நேர்மையாளர் என்று பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரை பார்க்கச் செல்லுபவர்களுக்கு “சோறு” நிச்சயம் கிடைக்கும். எவனொருவன் தன்னை நாடி வருபவருக்கு “சோறு” வழங்குகின்றானோ அவனின் அத்தனை பாவங்களும் மன்னிக்கப்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். உண்மையில் விஜயகாந்துக்கு லக் என்று தான் சொல்ல வேண்டும். இவரை நம்பி இவரின் செயல் வீரர்கள் பெரும் கூட்டங்களை கூட்டுகிறார்கள். நேற்று நல்ல வசூல் வேறு கிடைத்தது. அன்னமிட்டவனை நெஞ்சார நினைக்கும் ஏழைகள் இருக்கும் தமிழ் நாட்டில் ‘ விஜய காந்தின் அரசியல் வியாபாரம்’ மிக நன்றாகவே நடக்கும். ஆனால் நம்பிச் செலவழித்தவர்களுக்கு விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்? தனியாக நின்று தன்னை நம்பியவர்களை தற்கொலைக்குத் தள்ளப் போகின்றாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பெரிய கட்சியின் அரசியல் தலைவர் ஒருவர் இந்த தேர்தலோடு தேமுதிகவை ஒழித்து விடுவோம் என்றுச் சொன்னார். எப்படி என்று கேட்டேன். அதை திரு விஜய காந்தே செய்து கொள்வார் என்றார். அவர் ஏன் அவ்வாறுச் சொன்னார் என்பது எனக்குப் புரியவே இல்லை.

தனக்கு கூடும் கூட்டத்தினை அப்படியே புத்திசாலித்தனமாய் ஓட்டாய் மாற்றி, ஆட்சியில் அமர விஜய காந்த் சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து, திரை மறைவு பேரங்களில் ஈடுபட ஆரம்பிப்பது, கூட்டணி தவிர்த்து தனியாக நிற்பது போன்ற செயல்கள் தற்கொலைக்குச் சமானம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தினை ஆளும் திமுக முற்றிலும் செயலற்றதாய், தமிழ் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி கொஞ்சம் கூட அக்கரையில்லாமலும், தொலை நோக்குப் பார்வையற்றதாகவும் இருக்கிறது. மேலும் ஒரே குடும்பத்தின் கீழே ஆட்சியை நடத்தி வருகிறது. இது நல்ல சமயம். இச்சமயத்தில் ஆளும் கட்சிக்கு எதிராய் ஒன்று கூடி அதன் பலனாய் பிரதி நிதிகளைப் பெற்று விட வேண்டும். அதை விடுத்து விஜய காந்த் வேறு முடிவுகள் எடுப்பாரேயானால் அது அவருக்கே மிகப் பெரும் ஆபத்தை உண்டாக்கி விடும்.

இன்னும் விஜய காந்தின் “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கெதிரான வசன முகம்” நினைவில் ஆடுகிறது. இவரின் மனைவி பிரேம லதா நினைத்தால் நாளைய முதல்வர் “ திரு விஜய காந்த்” என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை.

– பஞ்சரு பலராமன்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: