தமிழகத்தின் அடுத்த முதல்வர் – எதிர்பார்ப்பு

ஸ்பெக்ட்ரம் அலை ஊழலில் திமுகவினர் செய்திருக்கும் ஊழல் அனைத்து இந்திய மக்களின் தலையிலும் விடிந்திருக்கிறது. ஊழலை விசாரிக்க காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனை நியமித்த பிறகு, வழக்கம் போல குவாட்ரோச்சி ஊழல் போல, இவ்வழக்கும் ‘விசாரிக்க முடியவில்லை’ என்று காரணம் கூறி சிபிஐயினால் மூடப்பட்டு விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற கம்பெனிகளுக்கு இது வரை நடவடிக்கை ஒன்றையும் எடுக்கவில்லை காங்கிரஸ் கொள்ளைக்கூட்டம். பிஜேபியினர் தான் ஊழல் செய்யக்காரணம் என்கிறார் கபில் சிபல். முறைகேட்டுக் கம்பெனிகளின் சார்பில் கோர்ட்டில் ஆஜரானவர் இந்தக் கபில் சிபல். காங்கிரஸ் கொள்ளைக்கூட்டமும், திமுக திருட்டுக் கூட்டமும் இணைந்து கொண்டு இந்திய மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்து, அதை மூட முயற்சித்து வருவதை நாம் கண்டு வருகிறோம்.

மனசாட்சியுடைய, இந்தியாவின் மீது பற்றுடைய, இந்திய நாட்டை நேசிக்கும் குடிமக்கள் அனைவரின் மனதும், மேற்கண்ட கொள்ளைக்கூட்டங்களின் தலைவர்களை எவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று மனம் வெதும்பி வந்த சூழ் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழ்லுக்குக் காரணமான இந்தியாவை ஆண்டியாக்கிய ஆண்டிப்பட்டி ராஜாவையும், அவரின் ‘உற்ற’ தோழி கனிமொழியையும் திமுகவிலிருந்து நீக்க வேண்டுமென்று குரல் உயர்த்தும் திரு அஞ்சானெஞ்சன் அழகிரியை நினைத்து சற்றே மனம் ஆறுதலைடைகிறார்கள்.

சோனியா காந்தியின் குடும்பக் கட்சி ‘காங்கிரஸ்’ இந்தியாவைக் கொள்ளையடிக்கும் கூட்டமாய் மாறியது ‘பல நிகழ்ச்சிகள்’ மூலம் தெரிய வருகிறது. சோனியா முன்பு மெய், வாய் பொத்தி, குனிந்து நின்று சேவகம் செய்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். அறிவுள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஊழல், காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டும் தெரியாத அளவுக்கு திறமையுடையவர்களாய் இருக்கின்றார்கள் ஆளும் காங்கிரஸ் கொள்ளைக்கூட்டத்தார். எவராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மக்கள் மனம் வெதும்பி இருக்கையில், தமிழ் நாட்டில் சுரண்டிக் கொண்டிருக்கும் ‘திமுக’ ஆட்சியிலிருந்து ஊழலுக்கு எதிராய் குரல் கொடுக்கும் ‘அஞ்சா நெஞ்சன்’ தான் தமிழகத்தில் வருங்கால முதலமைச்சராய் வர தகுதி உள்ளவர் என்று பலரும் சொல்கின்றார்கள். திரு ஸ்டாலின் இதுவரை மேற்கண்ட இல்லீகல் பெர்சனாலிட்டிகளுக்கு எதிராய் வாய் திறவாத காரணத்தால் ‘எதிர்கால முதலமைச்சராகும்’ தகுதியை இழக்கிறார் என்றும் சொல்கின்றார்கள்.

 

– பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: