வாசகர் கடிதம் – செம கிளுகிளுப்பு

ஜனவரி 31, 2011

நண்பர் அனாதி, குடிகாரன் மற்றும் பஞ்சர் பலராமன் மற்றும் இருட்டில் நடக்கும் விசயங்களை வெளிச்சத்தில் எழுதும் நண்பர்களுக்கு என் வணக்கம்.  நான் எத்தனை வலைப்பூக்களுக்கு ரசிகன் என்றாலும் உங்கள் வலைத்தளத்திற்கு ஸ்பெசல் ரசிகன் என்றே சொல்ல வேண்டும்.  தினமும் அலுவலகத்திற்கு வந்தவுடன் முதலில் பார்ப்பது மின்னஞ்சல் என்றால் இரண்டாவது உங்களுடைய வலைத்தளம்.  ஆனால் என் அலுவலகத்தில் வலைத்தளம் பார்க்க தடைசெய்யப்பட்டுள்ளது என்பதால் கூகிள் ரீடர் மூலமாக படித்து வரும் ரசிகன்.  இப்படி திடிரென்று சொல்லாமல் கொள்ளமால் கூகிள் ரீடரில் முழு பதிவையும் படிக்க விடாமல் ஏன் தடுத்து விட்டீர்கள்.  உங்கள் வலைத்தளத்திற்கு கூட்டம் சேர்க்கும் எண்ணமா ஏன் உங்களுக்கு தானாக சேரும் கூட்டம் இருக்க இப்படி நீங்களும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் நடிகர் நடிகைகள் போல கூட்டம் சேர்க்க ஆசைப்படுகிறீர்கள்.  என்னுடைய கோரிக்கை ஒன்று தொடர்ந்து எழுதுங்கள் அனைத்து வழிகளாலும் உங்கள் வலைத்தளத்தை முழுவதும் படிக்க வழி செய்யுங்கள் அவ்வளவே.   உங்கள் எழுத்துக்கள் மிக பிரபலமாக இருக்கும் அனைவருடைய இன்னொரு பக்கத்தையும் படிக்க உதவியாக இருக்கிறது.  இது எனக்கு உதவி மட்டுமல்ல என்னுடைய தாழ்மையான கோரிக்கை.  நானும் ஒரு வலைப்பதிவாளன் ஆனால் தொழில் ரீதியாக  அல்ல ஆத்மதிருப்திக்காக மட்டுமே எழுதி வருகிறேன். முடிந்தால் ஒரு எட்டு வந்து என் வலைத்தளத்தை பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.  முடிந்தால் மட்டுமே.  தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை இன்னும் கூர்மையாக எழுத வாழ்த்தும் உங்கள் தோழன் <<<<<<< .  நன்றி வாழ்க வளமுடன்.

– வாசகரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.

கூகுள் ரீடர் ஆக்டிவேட் எப்படி செய்வது என்றே தெரியாது. ஆனாலும் முயற்சிக்கின்றோம். நிச்சயம் செய்து விடுகிறோம். கோரிக்கையெல்லாம் வைக்க வேண்டாம். இது வேண்டுமென்று சொல்லுங்கள். நிச்சயம் செய்கிறோம். கோடிக் கணக்கில் பணமா கேட்கின்றீர்கள்?  உங்கள் பிளாக்கை படித்தோம். கம்யூட்டர் ஆசாமியாய் இருப்பீர்கள் போல. வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்கிறோம். நீங்கள் விரும்பினால் ஒரு தனி இணைப்பை போட்டு விடுகிறோம். பாராட்டுக்கு நன்றி

– அனாதியும், நண்பர்களும்


அமலா பால் தொடர்ச்சியாய்

ஜனவரி 31, 2011
திரு.அனாதி, தங்களுடைய பத்திகளை தினமும் விரும்பி படிக்கும் வாசகன் நான். தங்களுடைய அரசியல் பார்வை சிந்திக்கதக்கதாகவும் மிகுந்த கோபம் எழச்செய்கின்றதாகவும் உள்ளது (தங்கள் மேல் அல்ல). அதே போல் சில பத்திகள் கிளுகிளுபுடுவதாகவும் (சரியா?!) பொறாமையாகவும் உள்ளது. சமிபத்தய அமலா பால் பத்தி மிகுந்த சுவாரஸ்யமான ஒன்று. அதில் வரும் பெண் “சிநேஹா” என்று கணிக்கிறேன். என் கணிப்பு சரியா?. உங்கள் பத்திகளை படித்த பிறகு உங்களுக்கு அதிகார மையத்தில் நல்ல பழக்கம் இருக்கலாம் என்று கணிக்கமுடிகின்றது. நீங்கள் ஏன் தமிழ் நாட்டுக்கு ஒரு “Julian Paul Assange” ஆக சேவை செய்யக்கூடாது?.

– வாசகர் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.

அன்பு வாசகரே,

அதிகார மையத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா மூலைகளிலும் அனாதிக்கு தொடர்பு உண்டு. அனாதி ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர். அதனால் பல பேருடன் அதிக தொடர்பு கிடைத்திருக்கிறது. அரசியல், சினிமா மற்றும் பிசினஸ் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் எதையும் அனாதி பயன்படுத்துவதே இல்லை. அதனால் இதுவரை அவனுக்கு எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. வேலை வேண்டுமென்று கேட்டால் கூட முடியாது என்றுச் சொல்லி விடுவான். ஏனென்றால் வேலை வாங்கிக் கொடுத்து, ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தான்.

சில பத்திகள் கிளுகிளுப்பாய் இருக்கிறது என்று எழுதி இருக்கின்றீர்கள். அது உங்களின் வயசுக் கோளாறு. அமலா பால் பத்தியில் எழுதப்பட்டிருக்கும் நடிகை சினேகா அல்ல. மார்கெட்டே இல்லாமல் இருப்பவரையெல்லாம் அதுவும் கிழவிகளையெல்லாம் நாங்கள் எழுத மாட்டோம். எங்களுக்கு டிடெக்டிவ், தெஃப்ட் ஜர்னலிஷத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் பிரச்சினை மக்களின் சமூகவியலிலும், எண்ணங்களிலும் இருக்கின்றது. மக்கள் திருந்தாவிட்டால் என்றைக்கும் பிரச்சினை தீரவே தீராது. அதிகார மையங்களின் ரகசியங்களை படிப்பதில் இருக்கும் சுவாரசியம், அதிகார மையத்தை எதிர்ப்பதில் இருக்காது. இது போல ஜர்னலிஷ பாதைகள் என்றைக்காவது ஒரு நாள் நிச்சயம் தடம் மாறும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

பிறரை வாழ வைத்துப் பார்ப்பதில் உள்ள இன்பம் மட்டுமே என்றைக்கும் ஆனந்தம் தரும். அதை நாங்கள் எங்களால் முடிந்த வரைக்கும் செய்து வருகிறோம்.

உங்கள் கடிதத்திற்கு நன்றி

– அனாதியும் அவனது நண்பர்களும்


ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னவாகும்?

ஜனவரி 31, 2011

சர்வேதச அளவில் ஸ்பெக்ட்ரத்தின் வீச்சு படுபயங்கரமாய் இருக்கிறது என்று ஜூனியர் விகடன் கட்டுரை எழுதி வருகிறது. ராஜா முன்பே ஜூவி மீது வழக்குப் போட்டு, ஸ்பெக்ட்ரம் விஷயம் தமிழ் நாட்டில் கசியாமல் பார்த்துக் கொண்டார். நீதியோடு போராடி ஊழல் ராஜாவின் தடையை தகர்த்தது ஜூவி. ஊழலுக்கு ஆதரவாய் சட்டங்கள் இருக்கையில் எந்த புனித ஆத்மாவும் வந்து, ஊழலில் ஊரிய நாற்றமெடுத்த இவர்களை தண்டித்து விட முடியாது. இந்தியாவை ஊழல் தேசமென்று ஆக்கியது காங்கிரஸ் கட்சி. தினந்தோறும் வசவுகள், திட்டுக்கள், கண்டனங்களை பெற்றுக் கொண்டே ஆட்சி நடத்துகிறார் பிரதமர். எந்த ஒரு நாட்டிலும் இல்லாத பிரதமராய் இருக்கிறார்.

தமிழ் நாடு இன்னொரு சுதந்திரத்தை பெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு விட்டது. எங்கு நோக்கினும் ஊழல், எதேச்சதிகாரம், தடியெடுத்த அரசு அலுவலர்கள் எல்லாம் தண்டல்காரராய் மாறிய விநோதம், செயலற்ற அரசியல் தலைமை, சொத்துச் சேர்க்கவே நேரம் போதாமையால் தடுமாறும் அரசு, எந்த மக்கள் திட்டத்திலும் காசு பார்க்கும் அரசியல் தலைவர்கள் என்று தமிழ் நாடு இதுவரை இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

ஒரு தமிழனால் இந்தியாவே கேவலப்பட்டு இருக்கும் நிலைக்கு வந்த பிறகும், எந்த சட்டத்தாலும் ஒன்றும் செய்ய முடியாத, செயலற்ற சட்டங்கள் என்று இந்தியாவை முற்றிலுமாய் சீரழித்து விட்ட காங்கிரஸ் அரசு நிர்வாகம் என இந்தியா தன் ஆன்மாவை இழந்து நிற்கிறது.

இந்த சூழலில் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய, இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைத்த திமுக அமைச்சரின் ஊழல் என்னவாகும் என்று பல இடங்களில் விசாரித்த வகையில், 2ஜி ஊழல் மூடப்பட்டு விடும் என்றுச் சொல்கிறார்கள். அனைவருக்கும் பங்குப் பணம் சென்று சேர்ந்து விட்டதாம்.

செய்தி தாள்களில் 2ஜி விஷயங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் மறந்து விட்டது போல நடிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் மூலமாய் இந்தியா அன்னிய நாட்டிடம் அடிமைப்படுத்தப்பட்டு விட்டது என்கிறது ஜூனியர் விகடன்.

பாரதி எழுத்தில் வடிந்த சுதந்திரம் இன்று திமுக அமைச்சரால் அன்னிய நாடுகளிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசின் சட்டங்கள் தூங்குகின்றன. மக்களோ வீசப்படும் கறித்துண்டுகளுக்கு ஏங்கும் நாய்க்கூட்டமாய் நாக்கினை தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். 2ஜி விரைவில் ஊத்தி மூடப்பட்டு விடும் என்று வெகு உறுதியாய் சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்தியாவே யார் உன்னைக் காப்பாற்றப் போகிறார்கள்?

– வேதனையுடன் பஞ்சரு பலராமன்.


தேசத்துரோகிகளை பாதுகாக்கும் காங்கிரஸ்

ஜனவரி 26, 2011

எழுபது லட்சம் கோடி ரூபாயை வெளி நாடுகளில் கள்ளத்தனமாய் பதுக்கி வைத்து, இந்திய நாட்டிற்குச் சேர வேண்டிய வரிப்பணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தேசத்துரோகிகளை காங்கிரஸ் அரசு பாதுகாத்து வருகிறது என்பதற்கு ஹசன் அலி என்பவரின் மீது டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு ஒன்றே சாட்சி.

உச்ச நீதிமன்றம் வெளியிடக் கோரியிருக்கும் தேசத்துரோகிகளின் பட்டியலை காங்கிரஸ் அரசு வெளியிட முடியாது என்றுச் சொல்லி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயலை காங்கிரஸ் தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது. சுவிஸ் வங்கியில் கள்ளப்பணம் வைத்திருக்கும் 60 நபர்களின் விபரங்களைத் தராமல் 24 நபர்களின் விபரங்களை மட்டுமே காங்கிரஸ் அரசு கொடுத்திருக்கிறது என்கிறார் பாஜகவின் செய்தி தொடர்பாளர்.

ஹசன் அலி எட்டு பில்லியன் டாலர் வைத்திருப்பதாக சொல்லப்பட்டு என்ஃபோர்ஸ்மெண்ட் டிபார்ட்மென்ட் நோட்டீஸ் விட்டது. ஆனால் நமது நிதியமைச்சரோ அவரின் அக்கவுண்டில் பணமே இல்லை என்கிறார். அப்போது இடியின் நோட்டீஸ் என்னவானது ? இதோ அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு. நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். காங்கிரஸ் தேசத்துரோகிகளை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறது என்பதை.

http://www.timesnow.tv/videoshow/4363622.cms

– பஞ்சரு பலராமன்


2000 ஆயிரம் கோடி பேரம் : தேர்தல் திருட்டுவிழா ஆரம்பம்

ஜனவரி 25, 2011

அரசியலில் ஒரு பாலபாடம் இருக்கிறது. பொண்டாட்டியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக் கொடுத்தாவது பதவியைப் பிடிக்க வேண்டுமென்பது தான் அது. ஏன் இப்படி வல்கராக எழுதுகிறேன் என்றால், கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

எந்த அரசியல்வாதியாவது ஊழல் செய்யாமல் இருக்கின்றானா? பிராடு செய்யாமல், அரசுப் பணத்தை திருடாமல் இருக்கின்றானா என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். அரசியல்வாதி தெரிந்தே திருடுகிறான். ஆனால் அவன் எங்கு வந்தாலும் மக்கள் அவனுக்கு மரியாதை செய்கிறார்கள். இது இன்று வரை நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஊழல் செய்த அரசியல்வாதியைப் பார்த்தால் செருப்பால் அடித்து துரத்தியிருக்கின்றார்களா மக்கள்? இல்லையே? ஏன்? அதுமட்டுமல்ல, மக்களுக்கு நன்றாகத் தெரிந்த அயோக்கிய சிகாமணிகளை, அவன் எந்த தவறு செய்தாலும், அந்த தவற்றைப் பொருட்படுத்தாமல் கொண்டாடுவதால், அந்த மொள்ளமாறிகளுக்கு மக்களின் மீது எந்த விதப் பயமும் ஏற்படுவதில்லை.

இன்னும் ஒரு உதாரணத்தை தருகிறேன். “இளைஞன்” திரைப்பட புரோமோவைப் பார்த்தீர்களா? மனச்சாட்சி உள்ளவர்கள் அப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்களா? உள்ளுக்குள் தைரியமும், உண்மையும் நிரம்பிய எவராவது அப்படத்தைப் பாராட்டுவார்களா? பாருங்கள் பச்சோந்தி சினிமாக்காரர்களை. ஆஹா ஓஹோ என்று பாராட்டித்தள்ளுகின்றார்கள். இவர்கள் எல்லாம் யார்? எப்படிப் பட்டவர்கள்? என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

தர்மம், நியாயம், நீதி, உண்மை, நேர்மை எல்லாம் எங்கே சென்றன மேற்படி மைக்கில் பேசியவர்களுக்கு? பொதுவில் உருப்படிக்கு ஆகாத திரைப்படத்தை ஏன் இவர்கள் எல்லாம் பாராட்டுகின்றார்கள்? என்ன காரணம்? ஒரே காரணம் அப்படிப் பாராட்டிப் பேசினால் ஏதாவது தேறும் என்பது தான். மக்கள் திருந்தவில்லை என்றால் எவனும் திருந்தப் போவதில்லை. திருடியவனைக் கொண்டாடும் சமூகம் ஒரு திருட்டுச் சமூகத்தானே இருக்க முடியும். திருடர்கள் ஒன்று சேர்ந்து சமூகத்தையே திருட்டுக்கூட்டமாய் மாற்றி வைத்திருக்கின்றார்கள்.

இதோ இன்னும் சிறிது காலத்தில் தேர்தல் திருட்டுவிழா ஆரம்பிக்கப்போகிறது. தேர்தல் கமிஷன் என்ற ஒரு டம்மி பீஸ் இருக்கிறது. இத்தேர்தலில் ஒரு கட்சி ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி செலவழிக்கப் போகின்றார்கள். வீடுதோறும் பரிசாய், பணமாய் கொட்டப்போகிறது. மக்களும் வாங்கிக் கொள்ளப் போகின்றார்கள். தேர்தல் கமிஷன் இதுவரை நடந்த தேர்தல் அத்துமீறலுக்கு யாரையாவது தண்டித்திருக்கிறதா என்று கேளுங்கள். பதிலே பேசமாட்டார்கள். ஒரு சாதாரண கட்சி 5 கோடி ரூபாய் செலவு செய்யப்போகின்றார்கள். மற்றொரு கட்சிக்கு 2000 கோடி ரூபாய் தனியான, ஸ்பெஷல் கவனிப்பு கொடை கொடுக்க ஒரு கட்சி தயாராக இருக்கிறது. பேச்சு வார்த்தை இன்னும் முடிவடையவில்லையாம்.

தேர்தல் என்பது திருடர்கள் கூடும் இடமாகி விட்டது. அத்திருடர்களை கொண்டாடப்போகும் மக்கள் இருக்கின்றார்கள். பேரங்கள் சூடாய் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் சொத்துக்கள் இனி யார் யாருக்கோ தாலி செயினாய், தோப்பாய், மாட மாளிகையாய் போக விருக்கிறது. மக்களின் வரிப்பணத்தினைக் கூட்டாய் கொள்ளையடிக்கப் போகும் கொள்ளைக்கூட்டங்கள் இனி வீதி தோறும் உலாவரப்போகின்றார்கள். அவர்களுக்கு மஞ்சள் கரைத்து ஆரத்தி எடுத்து தட்டில் விழப்போகும் காசுக்காக காத்திருப்பார்கள் மக்கள்.

இந்தியா ஒரு போதும் வல்லரசாகப்போவதில்லை. தேடி வரும் கொள்ளைக்கூட்டத்தினை செருப்பால் அடித்து விரட்டும் நாள் வரும் வரை இந்தியா ஒரு போதும் நல்லரசாகப் போவதில்லை.

– பஞ்சரு பலராமன்

 


விஷ வியபாரிகள்

ஜனவரி 24, 2011

மருத்துவமனைப் பக்கம் போக வேண்டாமென்று நினைத்தால் நீங்கள் சில விஷயங்களைக் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்படி இருக்கவில்லை என்றால் எமன் உங்கள் வீட்டின் வாசலில் வந்து நிற்பான். அது என்ன சில விஷயங்கள் என்பது பற்றிப் பார்க்கலாம்.

டின்களில் அடைக்கப்பட்டு வரும் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த பென்சி அசிடேட், எதில் அசிடேட், அமில் அசிடேட் என்ற வேதிப்பொருட்களைச் சேர்க்கின்றார்கள்.

வெனிலா சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் பைப்பர் ஹோல் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

சோடியம் அலுமினியத்தை கேக்குகளில் பயன்படுத்தப்படும் வெண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

பாக்கெட் பால் அடர்த்தியாகத் தெரிய, சில வகை வேதிப்பொருட்களைச் சேர்க்கின்றார்கள்.

சிட்ரிக் ஆசிட் கலந்த குளிர்பானங்களால் நரம்பு மண்டலம், சிறு நீரகம், மூளைப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம். புற்று நோய்க்கான காரணிகளும் இருக்கின்றனவாம். சில்லி சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு புற்று நோய் ஏற்பட்டு விட்டது என்பதை ஒரு பதிவர் எழுதியிருந்தார். இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.

மேலும் உணவை விஷமாக்கி விற்பனை செய்து வியாபாரிகளை, இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதைக் கவனியுங்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் கோக்கின் மீதான பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையின் முடிவு என்னவாயிற்று என்பது இதுவரை தெரியவில்லை.

எங்கு நோக்கினும் போலி உணவுப் பண்டங்கள் விற்பனையாகின்றன. சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசு இதுவரை சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கைகள் எடுத்ததாய் தெரியவில்லை. ஹோட்டல்களும், உணவுப் பண்டங்களும் சோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு அதுபற்றிய பெரிய அமைச்சகத்தை வைத்திருந்தாலும், ஒன்றும் செய்வதில்லை.

சாக்லேட், மிட்டாய், சூயிங்கம், பர்கர், பீட்சா, கோக், பெப்சி, எண்ணெயில் வறுத்த பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள், ரெடி டூ ஈட் பொருட்கள், இனிப்புகள், கலர் பொடி சேர்த்த உணவுகள், அதிக உப்பு சேர்ந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். ஹோட்டல்களில் சாப்பிடுவதை முற்றிலுமாய் தவிர்த்து விடுங்கள். இன்றைய ஹோட்டல்கள் எமனின் முகவரிகளாய் இருக்கின்றன. கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல் ஹோட்டல்கள் கெட்டுபோன, விஷத்தன்மை உடைய உணவுகளை விற்கின்றார்கள். அதுமட்டுமின்றி பாக்கெட் உணவுப் பொருட்கள் விஷத்துடனே விற்பனையாகி வருகின்றன.

இது பற்றிய ஒரு கட்டுரையை கீழே இருக்கும் இணைப்பில் படியுங்கள்.

உணவில் கலக்கும் விஷம்

ஆரோக்கியம் கெட்டுப் போனால், உங்களின் வாழ்க்கையே சீரழிந்து போகும். தேவையற்ற உணவுப் பொருட்களை உண்பதை விட்டு விட்டு, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள். இல்லையென்றால் உங்களின் நிம்மதி மட்டுமின்றி, அனைத்தும் உங்களை விட்டுப் போகும். கண்கெட்ட பின்னே சூரிய வணக்கம் வேண்டாம். ஜாக்கிரதை

– அனாதி


சில செக்குகளும் ஒரு நடிகையும்

ஜனவரி 23, 2011

”மாப்ளே, ஆளப்பார்றா, என்னாமா இருக்கிறா இவ? தூக்கிடுவோமாடா?” என்று கிளப்புகளில் சந்திக்கும் பெரும் கோடீஸ்வரர்களின் செல்லப்பிள்ளைகள் பேசிக் கொள்வது உண்டு. அப்படித்தான் ஒரு வாரிசு, நம்பர் ஒன் நடிகையின் மீது மோகம் கொண்டலைந்து, தன் நண்பர்களுடன் சென்னைக்கு படை எடுத்தார். இது எதுவும் தெரியாமல் சென்னை சென்ற கணவனை வழி அனுப்பி வைத்தார் அந்த வாரிசுவின் மனைவி.

வாரிசுவிற்கு ஏகப்பட்ட சொத்து பத்துக்கள். தகப்பனார் வாரிசின் மேல் கொள்ளைப் ப்ரியம் கொண்டவர். ஆகவே கணக்கு வழக்கில்லாமல் செலவிற்கு பணமழையாய் கொட்டினார். வாரிசும் தண்ணீர், பெண் என்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருந்தார். இதற்கிடையில் வேண்டாத விருந்தாளியாய், பெரும் பணக்கார நண்பரின் பெண்ணை மணம் முடித்து வைத்தார். வாரிசும் பெண்ணும் பாலும் தண்ணீராய் கலந்து கிடந்து ஒரு வழியாய், குடும்பப் பாதைக்குள் வந்தனர். ஆனாலும் வாரிசோ நடிகைகளின் நினைவாலே கிடந்தார்.

இது அப்படி இருக்க, சென்னை சென்ற வாரிசு, நடிகையைக் கொத்திக் கொண்டு வந்து விட்டார். இந்த நடிகைக்கு ஒரு விசேசம் இருக்கிறது. குடிக்க நல்ல சரக்கு இருந்தால் போதும் ஒரே நேரத்தில் பத்து ஆண்களை வேண்டுமானாலும் கோதாவில் பதம் பார்ப்பார். பட்டப்பகலில் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்று முகபாவனை காட்டிக் கொண்டிருக்கும் இந்த நடிகை, இரவானால் காம அரக்கியாகி விடுவார். ஆனால் கறப்பதில் கறார் பேர்வழியானவர்.

தனது நண்பர்களின் கூட்டோடு, நடிகையுடன் கெஸ்ட ஹவுசில் மல்யுத்தத்தை ஆரம்பித்தார் வாரிசு. போதையின் உச்சகட்டத்தில் வெறும் செக்குகளை கையெழுத்திட்டு நடிகையிடம் கொடுக்க, கோதா முடிந்து வீட்டுக்குச் சென்ற நடிகை, வாரிசின் மொத்த சொத்துக்கும் செக்கெழுதி வங்கியில் சேர்ப்பித்தார்.

வங்கி மேனேஜர் அலறி அடித்துக் கொண்டு, வாரிசுவின் அப்பாவிடம் கதற, மேட்டரை நூல் பிடித்த தகப்பனார் காரியத்தில் இறங்கினார். இப்படியெல்லாம் கிளம்பும் என்று பிளான் போட்ட நடிகை, அரசியல் தஞ்சமடைய, விஷயம் புரியாமல் அமைச்சரொருவர் தலை நீட்டினார். காரியம் எல்லை மீறுவதைக் கண்ட தகப்பனார் செல்லுமிடம் செல்ல, கப்சிப்பென்று ”பத்து” செக்குகளும் வீட்டிற்கு வந்தன. அன்றிலிருந்து மார்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனையான நடிகை, இன்றைக்கு சில லட்சங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார். ஒருத்தனும் பக்கத்தில் கூட போக மாட்டேன் என்கிறானாம். ரகசியமாய் விலைகுறைப்பு செய்திகளைக் கசிய விட்டாலும், செக்கை நினைத்து பயந்து ஓடுகின்றார்களாம் பலர்.

இதெல்லாம் போதாது என்று வாரிசின் மனைவி கோர்ட்டிலிருந்து நோட்டீஸ் விட, பஞ்சாயத்து நடந்து ஒரு வழியாக செக், நிதி என்று நிர்வாகம் அனைத்தும் மனைவியின் கையில் கொடுத்து விட்டு, இப்போது நான்கு ஜட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாய் போட்டுக் கொண்டு, நடிகைகளின் போட்டோவை தனிமையில் பார்த்து தண்ணீருடன் கண்ணீரைக் கலந்து ராவாக அடித்துக் கொண்டிருக்கிறார் வாரிசு.

– குஞ்சாமணி


%d bloggers like this: